'நெஞ்சுக்குள்ள' - வைரமுத்துவும் குறுந்தொகையும்

'நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் ' பாடலில் 'பட்சி ஒறங்கிருச்சு பால் தயிரா தூங்கிருச்சு,
நொச்சி மரத்து இலைகூட தூங்கிருச்சு' என்றொரு வரி. அதென்ன 'நொச்சி மரத்து இலை கூட தூங்கிரிச்சு'?

குறுந்தொகையில்(138) வருகிறது : 

கொன்னூர் துஞ்சினும் யாந் துஞ்சலமே
எம் இல் அயலது ஏழில் உம்பர்
மயிலடி இலைய மா குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.

'ஊரே தூங்கிடிச்சு,நான் மட்டும் தூங்கல்ல. என் வீட்டுக்கு பக்கத்துல உள்ள ஏழில் மலைல , மயிலோடை கால்களை மாதிரி இலைகளைக் கொண்ட நொச்சி மரத்தோட பூக்கள் உதிர்கிற சத்தத்தை இரவெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்' என தலைவனுக்காக காத்துக்கொண்டிருக்கும் தலைவி சொல்கிறாள்.

ஆனால் வைரமுத்து அந்த நொச்சியும் தூங்கிடிச்சு என்கிறார். இலக்கியத்தை எவ்வளவு அழகா தொடர்புபடுத்துகிறார்.

Comments

Popular posts from this blog

மணிரத்னத்தின் ஆண்கள்

காமம்: கடவுள் பாதி; மிருகம் பாதி

சாக்லேட் : Kiss me, I can read your lips.