காலத்தில் பயணிக்கும் துகள்


இந்த நேரத்தை நான்காவது பரிணாமமாக சிந்தித்தால் மட்டுமே உணரமுடியும் . உதாரணமாக நீங்கள் இந்த ஆக்கத்தை ஒவ்வொரு சொல்லாக படிக்கும் போதும் நேரம் இறந்த காலத்துக்கு சென்று கொண்டிருக்கிறது .நேரத்தில் நாம் பயணிக்கிறோம் .

 மனிதன் பயணித்த அப்பலோ விண்கலம் 25 ,000 mph எனும் வேகத்தை தான் இறுதியாக அடைந்தது.ஒளியின் வேகத்தில் பயணிக்க இதை விட கிட்டத்தட்ட 2000 மடங்கு வேகம் வேண்டும். அதுவும் சாத்தியமாகும் ,ஆனால் காலம் செல்லும். 

உண்மையில் நேரத்தில் இறந்தகாலத்துக்கோ,எதிர்காலத்துக்கோ பயணிப்பதில்  இது மாத்திரமல்ல பிரச்சனை .பரடொக்ஸ்(கிராண்ட்  பாதர்,மேட் சயன்டிஸ்ட் )  ,வோர்ம் ஹோல், லூப் பிரச்சனை என்றெல்லாம் பல பிரச்சனைகள். 

ஆனால் மனிதன் தன்னால் பயணிக்க முடியாவிட்டாலும் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் அணு துகள்கள் பயணிக்க கூடிய அளவு உலகின் மிகப்பெரிய துகள்களை முடுக்கி விடும்( particle accelerator ) மையம் சுவிசில் ஜெனீவாவில் அமைக்கப்பட்டுள்ளது .


அடித்தளத்தில் 16 மைல்கள் தூரமுள்ளதான வட்டவடிவில் அந்த சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது .அந்த துகள்களுக்கு சக்தியை வழங்கும் போது ஒரு செக்கனிலேயே பூச்சியத்திலிருந்து 60 ,௦௦௦ mph வரை அது ஆர்முடுக்கபடும் .

அதற்கு வழங்கும் சக்தியை மேலும் மேலும் அதிகரிக்கும் போது ஒரு செக்கனில்  11 ,000 தடவைகள் அந்த வளையத்தை(16 மைல்கள்) சுற்றி வருகின்றன .

கிட்டத்தட்ட இது ஒளியின் வேகம் .ஆனால் முழுதாக ஒளியின் வேகத்தை பெறமுடியா விட்டாலும் ,ஒளியின் வேகத்தில் 99 .99 சதவீதத்தை அடைந்துவிடும் .

இதன் போது அவை நேரத்தில் பயணிக்க தொடங்கிவிடுகின்றன .மிகவும் குறுகிய நேரம் இருக்க கூடிய துகள் பை மேசன்ஸ்(pi-mesons ) ஒரு சில நனோ செக்கனில் கலைந்துவிடும் .ஆனால் இவை நேரத்தில் பயணிக்க தொடங்கியதும் முனனர் இருந்ததை விட 30 மடங்கு நேரம் அதிகமாக இருக்கிறது .


இந்த கணிப்பின் படி பௌதீகவியலாளர்கள் இதை ஏன் நேர இயந்திரமாக பாவிக்க கூடாது என கேள்வி எழுப்பி உள்ளனர் .இதில்   இறந்த காலத்துக்கோ  எதிர்காலத்துக்கோ  செய்தியை  அனுப்பி  முயற்ச்சிக்கலாம்  என்பது  அவர்களது  கருத்து .

Comments

தமிழில் விளக்கிய விதம் அருமை.மொழியும் கைகூடி வந்திருக்கிறது." அப்படி துகள்களை ஒளி வேகத்தில் சுற்றவைத்தால்/செலுத்தினால்" என்ன ஆகும் என்பதையும் விளக்கியிருக்கலாம்.
அடுத்த பதிவு ..?!
பாஸ்...காலம் எப்படிச் செலவாகிறது என்பதனை அருமையாக விளக்கியுள்ளீர்கள்..

நீங்கள் இந்தப் பதிவைப் படிக்கும் போது...சூப்பர் சகோ.
தகவலை தமிழில் தந்தமைக்கு காலம் தாழ்த்தாது நன்றீ.. வாழ்த்துக்கள்
தகவலை தமிழில் தந்தமைக்கு காலம் தாழ்த்தாது நன்றீ.. வாழ்த்துக்கள்
கணேஷ் said…
நல்ல விசயங்கள்..நன்றி.
நன்றி சின்னப்பயல் ,மதுரை சரவணன் ,நிரூபன் ,கணேஷ் :)

Popular posts from this blog

இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்

ராதாமோகனின் வேகமான பயணம் போகலாம் (எனது பார்வையில்)

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்