எவருக்காகவும் கடவுளை பிரார்த்திக்காதீர்கள் .முடிந்தளவு கடவுளாக இருங்கள் அனைவருக்கும் ..
மனிதனின் அடிப்படைத்தேவைகளில் உறையுளை இழந்து ,முதல் நாள் உண்ட உணவையும் ,உடுத்த உடையையும் மட்டுமே மூலதனமாக கொண்டு இடம்பெயரும் அகதிகளின் தினம் நாளை .
இன்னொருவருடைய துயரை அறிய நான் அப்படி இருந்தால் என ஒரு சுயசரிதையை எம் மனதுக்குள் நாமே எழுதிக்கொள்வது நல்லது .
எம்மால் என்ன செய்ய முடியும் ?-ஒருவரால் மாற்ற முடியும் ...
இந்த முறை அகதிகள் தினத்துக்காக(ஜூன் 20 ) ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் தாபனம் தனது இணையத்தளத்தில் "ஒன்று செய்யுங்கள் " என்ற தொனிப்பொருளில் தனது தளத்தை நேர்த்தியாக வடிவமைத்துள்ளது . Click here
இந்த தளத்தில் Learn ,Spread the world ,Give என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது .
Learn பகுதியில் அகதிகள் படும் துயரங்களையும் ,அவர்களாகவே எம்மை உணர்ந்து அவர்களின் துயரங்களையும் உணரும் வகையிலும் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது .
2 .உங்களால் போர் சூழலில் இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயமான சூழ்நிலையில் உங்களால் உங்களை தயார்படுத்திகொள்ள முடிகிறதா என்பதை பரிசோதிக்க விளையாட்டு போல வடிவமைக்கபட்டுள்ளது .- http://www.playagainstallodds.com/
3 .இடம்பெயரும் அகதிகளுக்கும் ,வெளிநாடுகளில் தஞ்சம் கோரும் அகதிகளுக்கும் உதவியாக அவை பற்றி விழிப்புணர்வு கற்பித்தல்கள் இந்த
பக்கத்தில்: -http://www.unhcr.org/pages/4b7409436.html
Spread the world பகுதியில் அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தல் முக்கியமானது . ஈ மடல்களை அனுப்பலாம் .ஏஞ்சலினா ஜோலியின் வீடியோ காட்சியை பகிரலாம் .
Give என்ற பகுதியில் உங்களால் முடிந்த பணத்தை கொடுக்கலாம் .அல்லது உங்கள் நேரத்தை ஒதுக்கலாம் .
இந்த தளத்திற்கு சென்று உங்களை UNHCR சேவையாளராக இணைத்துக்கொள்ளலாம் .http://www.unv.org/how-to-volunteer.html
அல்லது நேரம் மிக குறைவு எனில் இணையத்தில் உங்களால் செய்யக்கூடியவற்றை பதிந்து உங்களை பதிந்துகொள்ளலாம். .http://www.onlinevolunteering.org/en/vol/index.html
உதவிகள், சேவைகளில் சில்லறை உதவி பெரிய சேவை என்றில்லை .. நீங்கள் செய்யும் ஒவ்வொரு உதவியையும் தொகுத்தால் மிகப்பெரிய அளவில் பயன் கிடைக்கும் .
சமூக இணையத்தளங்களை கொஞ்சம் சமூகத்துக்காகவும் பயன்படுத்துவோம்
Comments