இமான் மலேகி(Realistic painter) - ஒரு ஓவியனின் ரசனை

நவீன ஓவியங்களை(Modern Arts) பெரிதாக ரசிப்பதில்லை . காரணம் ஒன்றுமே புரிவதில்லை அதை வரைந்தவர்  விளக்கினால் மட்டுமே விளங்கும்.

ஆனால் நான் பார்த்து பிரம்மித்த ஓவியங்கள் அப்படி அல்ல. சாதாரண கண்களுக்கு ரசிப்புத்தன்மை என்பதை விட வியப்பை தரக்கூடியது . ஓவியங்களில் பல வகைகள் இருக்கலாம் அதில் இமான் மலேகி  என்ற மிகச்சிறந்த ஓவியனை  Realistic painter  என்ற வகைக்குள் சேர்க்கலாம் .அதாவது ஒரு நிகழ்வை புகைப்படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் ஓவியங்கள் .  வியப்புக்கான காரணங்களை  பகிர்ந்துகொள்கிறேன் .
இந்த படத்தில் சுவரிலிருந்து தரை வரை வந்திருக்கும் நிழல் .சீமெந்து தரையின் மீது இருக்கும்  வெடிப்புகள் , சுவரில் இருக்கும் அழுக்குகள் ,மாலை வேளை அல்லது காலை வேளையில் வெயில் மரக்கிளைகள் இடையே  வரும் அழகு . தரையில் ஊற்றப்பட்டிருக்கும் நீர் சில இடங்களில் காய்ந்திருக்கிறது என ஒவ்வொன்றையும் ரசிக்கலாம் ..
அமைதியான பெண் போன்ற  முக பாவனை ,தோலில் இருக்கும் மென்மை,உடையில் இருக்கும் மடிப்புகள்,ஓரத்தில் இருக்கும் முடி ஆடைகளில் பட்டு தெறிக்கும் வெளிச்சம் .ஒரு பொருளை பிடித்திருக்கும் போது கை விரல்கள் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கிறது .
மேலே இருக்கும் பெண் தலையில் அணிந்திருக்கும் துணியில் சூரிய ஒளிபட்டு அந்த துணியின் ஊடாக தெரிகிறது .முகத்தில்  சுருக்கம் இல்லாவிட்டாலும் தெரியும் முதுமைப்பருவம் . புத்தகத்தை திறக்கும் போது கை நரம்புகள் . ஆடையின் மடிப்புகள் . கீழே இருக்கும் இளமையான பெண்ணின் நீள் காட்ச்சட்டையில் உள்ள மடிப்புகள் . ஒவ்வொரு இழையையும் பார்த்து பார்த்து கீறியிருக்கிறார் .


இதே படத்தை இன்னும் கிட்டவாக பார்ததால் ஆடையை இழை இலையாக செதுக்கியிருக்கிறார் என எண்ணத்தோன்றும் . கையில் தெரியும் நாளங்கள் முதல்க்கொண்டு அனைத்தும் உண்மையான படமோ என எண்ணத்தோன்றும் .


நிழல்களிநூடு தெரியும் ஒளி ,செருப்பின் மீதிருக்கும் அழுக்கு .பூச்சாடியின் அடியில் இருக்கும் அழுக்கு . சுவரில் இருக்கும் கறை . செங்கல்களுக்கு இடையே இருக்கும் சீமெந்து பூச்சு . சில கட்கள் காலப்போக்கில் நிறம் மாறும் .அதை கூட அப்படியே வரைந்திருக்கிறார் . எதையோ கொறித்துக்கொண்டிருக்கும் குருவிகளில் நிழலை கூட கீறியிருக்கிறார் .


இப்படி ஒவ்வொரு படங்களையும் ரசித்துக்கொண்டிருக்கலாம் . 


மேலும் படங்களை பெரிதாக பார்க்க click here


வளர்ந்து வரும் ஈரானை சேர்ந்த இந்த பிரபலமான ஓவியனின் இணையத்தளம் :- Click here 

Comments

Popular posts from this blog

மணிரத்னத்தின் ஆண்கள்

காமம்: கடவுள் பாதி; மிருகம் பாதி

சாக்லேட் : Kiss me, I can read your lips.