Skip to main content

மதன் கார்க்கி : நெஞ்சுக்குள் பெய்திடும் தமிழ் மழை

இறுதியாக வெளியாகிய  பயணம் பாடலுக்கு கீழே செல்லவும் ...


பூச்சியம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு என்று பைனரிக்குள் பூவாசத்தை கொண்டு வந்து தமிழையும் அழகாக தொழில்நுட்பத்தோடு ஒருமைப்படுத்தி என்னை மிகவும் கவர்ந்தவர் மதன் கார்க்கி . ஏன் பெரும்பாலானவர்கள் அறிந்துகொண்டதும் இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததோ என்ற இந்த பாடல் மூலம் தான் .

ஆனால் அவர் தான் கண்டேன் காதலே பட பாடல்  ஓடோ ஓடோ ஓடோடிப்போறேன் என்ற பாடலை எழுதினார் என்று பிறகு தான் தெரியும் .
ஆனால் அப்போதே அவர் புதிய ஆரம்பங்களை வரிகளுக்கு கொடுக்க எத்தணித்தது பாராட்டுக்குரியது.

மிதவை மனமே.. மிதவை மனமே..
என்னை முந்திச் செல்லாதே
என்று ஆரம்பிக்கப்பட்ட அந்த பாடல் இசையமைப்பாளர் வித்தியாசாகரின் வேண்டுகோளுக்கு இணங்க மாற்றியிருக்கிறார் .





எந்திரனில் தன் திறனை காட்டிய மதன் கார்க்கியின் பயணம் நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ விலும் தொடர்ந்தது . வரிகள் அனைத்தும் புதிது .ஏதோ ஒன்று இருக்கிறது வரிகளில்  . தமிழ் அழாகான மொழி என வெளிப்படுத்தும் எழுத்து , அவரின் பார்வையில் இருந்து பார்க்கும் போது ஆச்சரியம் .


ஒரு மௌனம் பரவும்
சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும்
மொழியில் எதுவும் கவிதையடி.. :)



காதலர்களுக்கிடையேயான மௌன மொழியின் வெளிப்பாடு . தமிழில் மட்டுமே உள்ள  ல ள லகரங்கள் வைத்து எழுதும் போது ஒரு அழகு இருப்பது உணர்கிறது மனது . 


மாலை வேளை வேலை காட்டுதோ... 
நல்ல வேளை ஹரீஸ் ராகவேந்திரா பாடியதால் ள ல உச்சரிப்புகளை ,வரிகளின் அழகை உணரமுடிகிறது . உதித்நாராயணன் பாடியிருந்தால் என்ன ஆகிறது ?


இந்த  வரிகள் மீதிருந்த ஈர்ப்பு குறைய முதலே நெற்றிப்பொட்டில் பற்றிய எண்ணம்  எட்டுத்திக்கும் பரவ விரும்பும் பாடல் கவர்ந்தது . பாடலின் வரியும் சரி வார்த்தை பிரயோகமும் சரி .அனைத்தும் புதிது .



facebook wall இலும் எங்கள் கொள்கை தீட்டினோம்  .. வித்தியாசமான சிந்தனை ஆனால் புதிய சிந்தனையும் கூட .. எனது பார்வையில் facebook wall தான் கொள்கை உள்ளவர்களுக்கு ஒரேயொரு வழி.

அதே கோ படத்தில் தான் இந்த பாடலும் ஏனோ குவியமில்லா 
..இந்த படத்தில் ஹீரோ படப்பிடிப்பாளர் என்பது பாடல் வரிகளில் தெரிகிறது . . நிச்சயம் காட்சி அமைப்பில் ஆனந்த் கலக்கியிருப்பார் . பாடல் ஒரு அழகான கவிதை போல மதனின் அழகான வரிகள் ,முக்கியமாக தமிழோடு திரையிலும் தெரியும் .

என்னமோ ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்


இந்த வரிகளை உச்சரிக்கும் போது தமிழ் இனிக்கிறது அடி மனதில் :)) ஆலாப் ராசுவின் உச்சரிப்பும் சரி பாடிய விதமும் சரி அனைத்தும் அருமை . 


இந்த பாடல்கள் அனைத்தும் பெரும்பாலானவர்கள் ரசித்திருப்பீர்கள் . அண்மையில் பயணம் திரைப்பட பாடல் .என்னை மிக மிக கவர்ந்த பாடல் ..


நீர்ச்சிறைக் கிழிய கருவதன் பயணம்
வார்த்தைகள் தெளிய மழலையின் பயணம்
கோர்த்திடும் பொய்யில் குழந்தையின் பயணம்... 

பிறப்பில் இருந்து ஒரு மனிதனின் பயணம் .இந்த வரிகளின் அழகு இதை உணர்ந்து வாசித்து பாருங்கள் புரியும் .. புதிய சொற்க்கள் .. அனைத்தும் தமிழ் பாடல் வரிகளுக்கு புதிது .





இந்த பாடல் வரிகள் 

நீர்ச்சிறைக் கிழிய கருவதன் பயணம்
வார்த்தைகள் தெளிய மழலையின் பயணம்
கோர்த்திடும் பொய்யில் குழந்தையின் பயணம்
முடியும்
பயணம்!
கனவுகள் குறைய இளமையின் பயணம்
காதல்கள் மறைய முதுமையின் பயணம்
ஊர்மறந்தொழிய மரணத்தின் பயணம்
முடியும்
பயணம்!
வானினைச் சேர தீயின் பயணம்!
பூமியைச் சேர நீரின் பயணம்!
வெற்றிடம் தேடும் காற்றின் பயணம்!
எல்லைகள் தேடும் வானின் பயணம்!
பாதை போகும் போக்கில்
பாதம் போகும் பயணம்!
முதலோ முடிவோ அறியா
கனவின் கனவில் பயணம்!
நாளைக் காலை காண
ஆயுள் ஏந்திப் பயணம்!
விடியும் விடியும் என்றே
முடியும் முடியும் பயணம்!
கிரகங்கள் தாண்டி உயிர்களைத் தேடும்
உயிரினைத் தாண்டி எதுவெனத் தேடும்
தனையிழந்து வெளியினில் தேடும்
மனிதனின் நெடும் பயணம்!
முடிந்திடப்போகும் பயணத்தின் நீளம்
கடைசியில் நான்கு மடங்குகள் கூடும்
முடிவடைந்த புள்ளியில் மீண்டும்
தொடங்கிடும் ஒரு பயணம்


இதுவரை தொடர்ந்து ஒரே வரிகளில் ஆரம்பித்த கவிஞர்கள் மத்தியில் தாமரை ,முத்துக்குமார் போன்றோர் பரிணமித்தாலும் அவர்களுக்குள்ளேயே மிகவும் வித்தியாசமாக தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள மதன் கார்க்கிக்கு நானும் ஒரு ரசிகனாய் ரசித்த வரிகள்,பாடல்கள் இவை  ..இது போன்ற ஆரோக்கியமான தமிழ் வரிகளை வரவேற்க்க வேண்டும் . 

Comments

நல்ல அலசல்... வாழ்த்துக்கள்
நன்றி மதுரை சரவணன் .வாழ்த்துகளுக்கு :-)
நன்று... நான் இதுவரை இந்தப்பாடலை கேட்டதில்லையே...
Jana said…
மதன் கார்க்கி! தன்பக்கம் சகலரையும் திரும்ப வைத்துள்ள ஒருவர்" சிறப்பான ஒரு இடுகை.

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...