Skip to main content

காதல் - ஹார்மோன்களினூடு ஒரு பயணம் !

இந்த காதலை ஹார்மோன் செய்யும் கலகம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம் . நீங்க காதலிக்காம இருந்தா கூட இந்த அடுத்த,பக்கத்துவீட்டு ,நண்பர்கள்  காதலை கவனித்தாலே போதும் எவ்வளவு அடிமையாகி இருக்கிறார்கள் என தெரியும். பேஸ்புக் வாலில் கவிதை கிறுக்கல்கள் ,எஸ் எம் எஸ் என அனைத்திலும் அதன் அடிமைத்தன வெளிப்பாடு பார்த்திருபீங்க .

எதனால் இப்படி ? ஏன் இவ்வாறான அடிமைத்தனம் என்ற கேள்விகளுக்கு சேதன இரசாயனத்தோட கொஞ்சம் அறிவியலையும் குழைத்து பயணம் செய்து பார்ப்போம் . எதிர்ப்பு பதிவல்ல ,காரணம் தெரிந்துகொள்வதில் தவறும் இல்லை .



குருநாதர் சுஜாதா அவர்கள் ஆயுத எழுத்தில் எழுதிய வசனம் சுருக்கமாக இருக்கும் . 

காதல்னு ஒன்னு கிடையவே கிடையாது . நாம் பிறந்ததெல்லாம் , நாமண்ணா நான் நீ இதோ இந்த பச்சை சட்டை மஞ்ச சுடிதார் போலீஸ்காரர் எல்லாரும் பொறந்தது எதுக்காக நம்மோட நலத்துக்காக . இந்த காதல், பாட்டு, ஓவியம் ,கண்ணீர் இதெல்லாமே இருட்லையும் ,ஹோடேல்லையும் ,பெட்லையும் முடியிறது தானே .estrogen  testosterone Vasopressin  வெறும் ஒர்கனிக் கெமிஸ்ட்ரி . x கிரோமொசொம் y கிரோமொசொம் xx ,xy அவ்வளவு தான் மேட்டர்" .என்று முடித்திருப்பார் . இதை கொஞ்சம் விளக்கத்தோடு ஆராய்வோம் .

எதற்கும் அடிமையாகும் போது நடக்கும் மூளையில் ஏற்ப்படும் அதே இரசாயன மாற்றம் தான் காதலில் விழும் போதும் ஏற்ப்படுகிறது  .


Neurochemical (நரம்பியல் ) அடிப்படையிலான காதல்/அன்பு  ?


மூளையில் இருந்து வெளிவிடப்படும் இரசாயன மாற்றங்களாலேயே காதல் எனும் உணர்வு தூண்டப்படுகிறது .இது அனைவருக்கும் தெரியும் .மூன்று  பிரதான இரசாயன பதார்த்தங்களில் முதலாவதாக டோபமைன் டோபமினே(pleasure chemical )ஆரம்ப கால தீவிரமான காதல்/அன்போடு நெருங்கிய தொடர்புடையது . (Note :-According to Helen Fisher, anthropologist and well-known love researcher from Rutgers University )



இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது இப்போது வெளிவிடப்படும் இந்த இரசாயன பதார்த்தம் போதைப்பொருள் பாவனையின் போதும் வெளிவிடப்படுகிறது . ஆரம்ப காதலின் படிமுறைகளில் அடிமைகள் போல இருப்பார்கள் . இதை பலரிடம் அவதானித்திருபீர்கள் .ஏன் நான் நீங்கள் அனைவரும் உணர்ந்தது .


Norepinephrine அதிரினலின் என்ன வேலையை செய்கிறதோ அதே வேலையை தான் செய்கிறது . இவை குளுகோஸை சுரந்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது . இருதய துடிப்பும் அதிகரிக்கிறது .இந்த இரண்டும் சேர்ந்து தீவிர சக்தியையும் ,தூக்கமின்மையையும் ,ஒரு விடயத்தில் கவனமின்மையையும் ஏற்ப்படுத்துகிறது . Note :- According to Helen Fisher, anthropologist and well-known love researcher from Rutgers University


நாம் ஏன் காதலில் விழுகிறோம் உடலில் எது இந்த செயல்ப்பாட்டை நிகழ்த்துகிறது என விரிவாக பார்ப்போம் . காதலில் முதலில் எது நீங்கள் விரும்பும் துணையை தீர்மானிக்கிறது ? பொருத்தமா அல்லது  pheromones (பரோமோன்ஸ்) எனப்படும் வெளிவிடப்படும் வாசனையா  என்பது பற்றியும் பார்ப்போம் .


இந்த இரசாயனங்கள் தான் எம் இனம்  நிலைத்திருக்கக் தேவையான இனப்பெருக்கத்தை நிகழ்த்துகிறது .அந்த தேவை முடிந்தவுடன் அதே இரசாயன மாற்றங்கள் அந்த குழந்தைகளை வளர்ப்பதட்க்கும் ஏற்றபடி எம்மை மாற்றுகிறது .


எது காதலில் விழ வைக்கிறது...... 




அனைவரது ஆழ மனதிலும் தமக்கான துணை பற்றி ஒரு ஓரத்தில் உருவம்/வரைபடம்  இருக்கும் . இதில் அவர்கள் பார்ப்பவர்களுடன் எது ஒத்துப்போகிறதோ அவர்களையே பெரும்பாலும் விரும்புகின்றனர் .


இதில் பல ஆராய்ச்சிகளின் படி முதலாவது தமது பெற்றோர்கள் போல அல்லது சிறுவயதில் இருந்து யாரை பார்த்து வளர்ந்தார்களோ அவர்கள் போல இருப்பவர்களை அவர்களை நினைவுபடுத்துபவர்கலையே மனம் தேர்வு செய்கிறது .


அடுத்தது இன்னொரு  ஆராய்ச்சி  தம்மை பிரதிபலிக்கும் உருவத்தை தான் நாம் தெரிவு செய்கிறோம் என  கூறிகிறது . ஒரு ஆணின் உருவத்தை எடுத்து ககனியில் அதை பெண் போல வடிவமைத்துவிட்டு பல பெண்களின் படங்களுடன் கலந்து கொடுத்த போது அதில் அவர்கள் மனதை அதிகம் கவர்ந்தது அவர்களின் படத்தை கணனியில் பெண்ணாக மாற்றிய படம் தான் .அவர்களால் அது தாம் தான் என உணரமுடியவில்லை. 


இந்த pheromones பற்றிய ஆராய்ச்சிகள் தான் காதல் பற்றிய ஆராய்ச்சியில் முக்கிய இடம் பிடித்தவை . 1986 இல்  Chemical Senses Center ஆல் மனித வியர்வையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது . இவை எமது வியர்வை,உடலில் இருந்து வெளியேறும் வாசனைகளோடு தொடர்புபட்டது . நாம் இதை body smell என்று சொல்கிறோம். சில விலங்குகள் இவ்வாறு தான் இனப்பெருக்கம் செய்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும் .


பாம்பும்  இவ்வாறு தான் இனப்பெருக்கம் செய்கிறது .பாம்பு தன் உடலில் இருந்து வாசனையை சுரக்கும் .அதை வைத்து தான் ஆண் பாம்பு தேடி வரும் . இதை தடுக்க தான் இந்துக்கள் பாம்பு புற்றுள் பால் ,முட்டை ஊற்றுகின்றனர் . இந்த வாசனை பாம்பின் உடலில் இருந்து வெளியேறும் வாசனையை இல்லாமல் செய்துவிடும் .


ஆனாலும் பல விலங்குகளுக்கு இதனை சுவாசிக்கவென சிறப்பான அமைப்பு(vomersonasal organ ) -VNO  மூக்கில் காணப்படுகிறது . மனிதர்களுக்கும் இந்த இயல்பு  இப்போது சில ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது  . இவையெல்லாம் இதுவரை தெரிந்திராமல் தானாகவே மூளை செயல்ப்படுத்தும்  வேலைகள் .


காதலில் இருக்கும் போது பல இரசாயன வேலைகள் ,மாற்றங்கள் நடக்கிறது . ஆராய்ச்சியாளர்கள் இன்னும் அவை காதலில் , நீண்ட கால காதலில் எவ்வாறு பங்களிக்கின்றன என்று ஆராய்கின்றனர் . 


ரொமாண்டிக் காதலில் ஆணும் பெண்ணும் உறவு வைத்துக்கொள்ளும் போது oxytocin எனும்  இரசாயன பதார்த்தம் சுரக்கிறது . இது தான் அவர்கள் காதலை ,உறவை மேலும் பலப்படுத்துகிறது  .Vasopressin நீண்ட கால உறவை தீர்மானிக்கும் . 


சில ஆராய்ச்சிகள்  இது ஆரோக்கியமான மன நிலையையும் உறவையும் பேண உதவுகிறது என கூறுகின்றன .Note :- According to researchers at the University of California, San Francisco


காதல்/அன்பு எமது மனதில் ஒரு பகுதி .இது ஜீன்கள் , குழந்தை பருவத்தில் இருந்து வளர்ப்புமுறை இதில் பாரிய செல்வாக்கு செலுத்துகிறது . 3 % ஆன விலங்குகள் தான் நாம் அமைத்திருப்பது போல குடும்ப முறையை அமைத்திருக்கிறது .அவற்றுள் எலியும் ஒன்று ..அதற்கும் காதல் வரும் ..


References
http://users.rcn.com/jkimball.ma.ultranet/BiologyPages/P/Pheromones.html
http://en.wikipedia.org/wiki/Dopamine  
http://en.wikipedia.org/wiki/Oxytocin  
http://en.wikipedia.org/wiki/லவ்
http://www.wisegeek.com/what-is-adrenaline.htm 
http://en.wikipedia.org/wiki/Norepinephrine
http://www.sensualism.com/love/loving-voles.html


pictures :-Google


அனைவருக்கும் காதலர் தின நல் வாழ்த்துக்கள் ....

Comments

Valaakam said…
அருமையான பதிவு... :)
"ஏன் நான் நீங்கள் அனைவரும் உணர்ந்தது." நண்பேண்டா.... :D
Jana said…
காதலுடன் அறிவார்ந்த பயணம் அருமையாக உள்ளது
வளாகம் said..

ஹஹா ... நன்றி
Jana said.

மிக்க நன்றி ஜனா :-)
எலிக்கும் காதல் வரும் என்ற அறிவியல் உண்மையைத்தந்தமைக்கு என் காத்லர் தின சார்பான வாழ்த்துகள்..தொடரட்டும் உங்கள் பணி..!ஹொஹொஹொ....
சின்னப்பயல் said..
//எலிக்கும் காதல் வரும் என்ற அறிவியல் உண்மையைத்தந்தமைக்கு//

வாங்க ..எலிக்கு வாறது இருக்கட்டும் ... உங்களுக்கு முதலில் எனது காதலர் தின நல் வாழ்த்துக்கள் :-)
Tamilmagal said…
அருமையான பதிவு.அறிவார்ந்த தகவல்களை கொடுத்துள்ளீர்கள்.
Anonymous said…
அருமையான பதிவு..nice!!!
Matt painting said…
நன்றி,
மேலும்............
Matt painting said…
நன்றி,மேலும்.......

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ