Skip to main content

எந்திரன் - சரியாக போய் சேருமா ?

உயர் தொழில்நுட்பத்தில் ஒரு திரைப்படம் அதிக செலவில் எடுக்கப்படும் போது வர்த்தக ரீதியில் அதை வெற்றியடைய செய்யும் கட்டாயத்தில் தயாரிப்பாளர் இருக்க(அதில் தவறில்லை ) , ஷங்கர்  மீதான விமர்சனங்களும் ஒரு புறம் இருக்க , தமிழில் அறிவியல் திரைப்படம் எனும் கோணத்தில் பார்க்கும் போது அனைத்தையும் உடைத்துப்போட்டு விடுகிறது இத்திரைப்படம் .

தமிழ் அறிவியல் எழுத்தில் எதிர்காலமாகவும் நிஜத்தில்  இறந்தகாலமாக திகழும்  என் இனிய எழுத்தாளர் சுஜாதாவின் கதை "என்  இனிய இயந்திரா" , எந்திரன் திரைப்படமாக  பரிணாம வளர்ச்சி அடைந்ததன் விளைவு  பட்டி தொட்டி எங்கும் குப்பன் ,சுப்பன் வரை எந்திரனையும் எந்திரன் பற்றிய அறிவியலையும் எடுத்துச்செல்லும் என்பதில் ஐயமில்லை .ஆனால் அந்த எந்திரன் ரஜனிகாந்தாக செல்லுமா அல்லது தொழிநுட்பப நிஜ எந்திரனாக அறிவியல்  சார்ந்து  செல்லுமா என்பதே இன்றைய கேள்வி .


அறிவியல் திரைப்பட வெற்றிக்கு கோவில் படியில்  முட்டியால் நடந்து சென்ற ரசிகர்கள் ..


சுஜாதாவின் என் இனிய இயந்திராவில் ஹீரோ என்று யாரும் கிடையாது . சிபி ,நிலா ,ரவி , ஜீனோ கதாப்பாத்திரங்கள் ஜீவா எனும் நாட்டின் தலைவருக்கு எதிராக , அவரின் கொடுமைகளுக்கு எதிராக செயல்படுவது போல அந்த கதை நகர்கிறது . அந்த விஞ்ஞான புனைகதை 2022 இல் இடம் பெறுவது போல 1986 இல் எழுதியிருந்தார் . இதில் ஜீனோ ஒரு இயந்திர நாய் . முழுவது கணணி எந்திர மயம், இலக்கங்களிலேயே அனித்தும் இருக்கும் என பல விஞ்ஞான விளக்கங்கள் , கருத்துகள் என் இனிய இயந்திராவில் வாசிக்க வசிக்க இனிமையும் வியப்பும் நிறைந்திருக்கும் .

சுஜாதாவின் எழுத்து அறிவியலை அப்படியே பிரதிபலிப்பது மிக கடினம் . அப்படியே பிரதிபலிக்க முனைந்தாலும் தமிழ் திரையுலகம் மசாலா எனும் மந்திரன் கொண்டு அதை அழித்துவிடும்  . அதில் தவறும் இல்லை .தமிழர்களின் இன்றைய தேவை மசாலா தான் .. 7 பாடல்களை(35 நிமிடங்கள் ) திணிக்க வேண்டிய கட்டாயம் வேறு  இதில் .

ஆனால் சுஜாதா கதையும் ,அறிவியலும் திரைப்படத்தில் சிதைந்து போகலாம் . அறிவியல் படத்துக்கு படம் வெளி வர முதலே சிலர் கொடுத்த விமர்சனங்களும் , ஷங்கர்  ,ரஜனி மீதிருக்கும் வெறுப்புமோ இத்திரைப்படத்தை மறைத்தாலும் சுஜாதாவின் நூல்களுக்கு வழிகாட்டி விட்டதால் எந்திரன் தமிழ் அறிவியலில் நுழையும் . சுஜாதாவின் கனதியான எழுத்தை இத்திரைப்படம்  பாதியில் இழந்தது நிவர்த்தி செய்ய முடியாதது .


ஒரு வேளை இந்த திரைப்படம் வெறும் ரஜனி படமாக தமிழர்களை அடையலாம் . அவ்வாறான உத்திகளே படம் வெளிவர முதலே கையாளப்பட்டு வருகின்றன . இதுவரை அறிவியல் தொடர்புடைய எந்த நடவடிக்கையும் , விளம்பரமும்  இடம்பெறவில்லை .வெறும் பிரம்மாண்ட (செலவில் ) இயக்குனர் நாயகன் ஷங்கர் இந்த படத்தில் கூற வரும் செய்தியை சுஜாதா இல்லாமல் சரியாக பிரதிபலிப்பாரா என்பது சிந்திக்க வேண்டியது . சுஜாதாவின் எழுத்து பாமரனையும்  அறிவியல் தன்மையோடு சிந்திக்க வைக்கும் . அனைவரையும் சிந்திக்க வைக்கும் .

சுஜாதா வசன வாசனை  சில பட ற்றேயிலரின் பிரதி பலித்தது " என்ன நக்கலா ? சிட்டி இயந்திரன் "இல்லை நிக்கல் ,போல்ட் நட்டெல்லாம் நிக்கல் பண்ணது " என்று சொல்லும் .

வரவேற்க தக்க அறிவியல் திரைப்படம் , ரஜனியாலேயே இவளவு பிரபலம் , ஆனால் முழு ரஜனி படமாக, மசாலாவாக  மக்களை அடையாமல் விட்டால் நல்லது . ஆனால் இன்னும் இத்திரைப்பட பின்னணியில் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மை கதாநாயகன் என் இனிய சுஜாதா ..

Comments

Valaakam said…
சுப்பர்... அறிவியலை.. இலகுதமிழில் மக்களிடம்( எங்களிடம்) கொண்டுவந்து சேர்த்தவர் எமது சுஜாத்தா சேர் தான்...
அவரின் கதையை கருவாக வைத்து எந்திரன் உருவாகினாலும்... சன் பிக்ஷர் என்ற வலைக்குள் இருப்பதாலும்..இது அறிவியலைத்தாண்டி ஒரு கொமர்ஷியல் படமாகத்தான் அமையும் என நானும் நினைக்கிறேன்.. :(
நன்றி .. கொஞ்சம் வசனங்கள் சுஜாதாவும் எழுதியிருப்பதால் , சுஜாதாவின் எழுத்தில் இருந்து எடுத்திருப்பதால் கொஞ்ச கட்ச்சிகள் சுஜாதா பாணியில் அமையும் என்று எண்ணலாம்...
என்ன சொன்னாலும் குரு நாதர் கு(க)ருநாதர் தான். புத்தகத்தின் கதையை அப்படியெ சங்கர் எடுத்திரக்கமாட்டார். என்ன இருந்தாலும் ஹொலிவுட் படம் பார்க்காத சிலருக்க இது பப்படம் தான்...

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...

மதன் கார்க்கி வரிகளின் ரசிகனாய் - 180 பாடல் வரிகள்

பாடல்கள் என்றால் முதலில் அதில் வரிகளை உன்னிப்பாக ரசிப்பவன் நான் . வரியோடு சேரும் போது தான் அதில் உயிரோட்டம் இருக்கும் . இதற்க்கு ஒரு காரணம் வைர வரிகளின் சொந்தகாரர் வைரமுத்து அல்லது  வரிகளிலேயே  இசை கொண்டுவரும் கண்ணதாசனின் வரிகளாகவும் இருக்கலாம் . எல்லாவற்றையும் விட தமிழின் அழகை உணருவது மிக முக்கிய காரணமாக இருக்கலாம் . ஆனால் அழகான தமிழ் சொற்களை கொண்டலாய்( :-) ) பொழியும்  மதன் கார்கியின்  மீதான ஈர்ப்பே இரும்பிலே ஒரு இருதயத்தில் இருந்து தொடர்கிறது  . புதிய படமான  180 இல் மதனின் பாடல் வரிகளை மிகவும் எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்ப்பை சற்றும் குறைக்கவில்லை .முன்னைய கார்கியின் வரிகளுக்கான  பதிவு .. முதலில் ரசித்த பாடல் ..... சந்திக்காத கண்களில் .... -பாடலை  கேட்க்க சந்திக்காத கண்களில் இன்பங்கள்  செய்ய போகிறேன்  சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்  பெய்யப்போகிறேன் ... குவியமில்லாவுக்கு பிறகு ஈர்த்த சொல் கொண்டலாய் . கொண்டலாய் என்றால் மேகம்  . சிந்திக்காது சிந்திடும் மேகம் .அழிந்து வரும் அழகான சொற்கள் அறிம...