Skip to main content

இந்துக்களும் பிரபஞ்ச கொள்கையும் - முடிவிலிப்பக்கங்கள்

மதம் என்ற பெயரில் பதிவு எழுத ஆரம்பிக்கிறேன் என்றவுடன் எனது எண்ணங்கள் மதங்களை திருபுபடுத்திய/திருபுபடித்திக்கொண்டிருக்கும் , தவறான எண்ணக்கருவில் உள்ளவர்களை , இழிவானவர்களை நினைவு படுத்துவதால் பிரபஞ்ச கோட்பாடு அடிப்படையில் எழுத்துகளை பதிகிறேன் .

மதங்களை உருவாக்கிய மனிதன் அதற்க்கு பெயரும் வைத்தான் என்று சொல்வதில் சந்தேகம் இல்லை . இந்து என்ற பெயரும் இதற்க்கு விதிவிலக்கல்ல ஆனால்  இந்து மதத்தின் உருவாக்கத்திற்கு எந்தவித கதைகளுமோ இல்லை .உரிமையாளரும் இல்லை . அது ஒரு விஞ்ஞான ரீதியாக முதலே விருத்தியடைந்த மனித இனம் .அதன் அடையாளம் .


உதாரணத்திற்கு இந்தியா ஆரியபட்டாவின் (பூச்சியத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்  ) காலத்தில் உலக நாடுகளை விடவும் மிகச்சிறந்த அபிவிருத்தி அடைந்த  நாடாக இருந்ததாக உலக வரலாறுகள் கூறுகின்றன . இதன் வீழ்ச்சிக்கு காரணம் புரோகித சூழ்ச்சிகளும் , சில சமூகத்தவரின் தன்னலம் கருதிய நடவடிக்கைகளும் சமயத்தின் போக்கையே  மாற்றிவிட்டது .  வெறுமனே பணமும் ,காவடிகளும் ,திருவிழாக்களும் , பரிகாரமும் பூஜைகளுக்குளும் அடங்கி விட்டது .

அதிகூடிய இலக்க பெறுமதிகளை பாவித்த எமது முன்னோர்களின் சரியான விஞ்ஞான பார்வை மேலைத்தேய அறிஞர்களாலேயே தற்ப்போது வெளியில் கொண்டுவரப்படுகிறது . முக்கியமாக பிரபஞ்ச கோட்பாடு எப்போதோ முன் வைக்கப்பட்டு விட்டது . கிறிஸ்துவுக்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட இந்த கோட்பாடு ரிக் வேதாவில் (Rig Veda 10:129 )மிகவும் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது . 


யாருக்கு தெரியும் ? யாரால் உறுதியாக கூற முடியும் ?
எப்படி தோற்றம் பெற்றது ? எங்கே? எப்போது ?
இறைவன் உருவாக்கத்தின் பின்னரான நாளில் தோன்றினாரா ?
யாருக்கு தெரியும் ? யாருக்கு உண்மை தெரியும் ?
எப்போது? எங்கே ? உருவாக்கம் நிகழ்ந்தது ?
இறைவனே செய்தானா ? இல்லை  செய்யவில்லையா ? 
அவர் மட்டும் , அங்கே , தெரியும் ,தெரிந்திருக்கலாம்
ஒரு வேளை அவனுக்கே  தெரியாமலே இருக்கலாம்  ..


இதில் விடைகளை விட கேள்விகளே அதிகம் ...... 
அயிங்ஸ்டேயினின் பிரபஞ்ச கோட்பாடு (Big Bang ) இதை உறுதிப்படுத்திகிறது . பிரபஞ்சத்தில் பாரிய வெடிப்பே அனைத்தின்  தோற்றத்துக்கும் அடிப்படை .


இவை அனைத்திற்கும், இந்த சிந்தனைக்கு  முக்கிய காரணம் இந்து சமயம் இனத்தவர்கள் மாத்திரமே உலகம் தோன்றி பல பில்லியன் வருடங்கள் என சுவடுகளில்  குறிப்பிட்டு உள்ளனர் . வேறு எவரும் எந்த மதமும் விஞ்ஞானத்துடன் ஒத்துப்போவதில்லை . இந்து சமயத்தில்  19 பிலியன்கள் முன்பே உலகம் தோன்றியதாக கூறப்பட்டுள்ளது . இது கிட்டத்தட்ட பிக் பாங் இடம்பெற்ற ஆண்டுடன்(12 தொடக்கம் , 19 பிலியன் ) நெருக்கமானது .


பில்லியன் எனும் பாரிய பெறுமதியை இந்துக்கள் பயன்படுத்தியமை வானவியலாலர்களை ஆச்சரிய படுத்தி உள்ளது . அப்போதே பல பில்லியன் களுள் நமது பூமியும் ஒன்று என்ற கோட்பாடு நிறுவப்பட்டதும்  அவர்களின் ஆச்சரியத்திற்கு காரணம் .

எமது முன்னோர்கள் சிந்தனைகள் இவ்வாறு திரிபடைந்து மதம் எனும் சாயல்கள் பூசி மதம் பிடித்து  நிற்க்கிறது மனித இனம் . அது வெறுமனே அறிவற்ற முட்டாள்த்தனத்தை தொடர்ந்து பின் பற்றுகிறது . சமயம் மதம் என்பதம் கோணம் முற்றிலும் வேறானது .  தொடரும் ......

தகவல்கள் அனைவரையும் சென்றடைய இன்ட்லியில் வாக்கை பதியுங்கள் .. நன்றி 

Comments

மருது said…
அட அட அடா .. என்ன ஒரு நல்ல கண்டுபிடிப்பு... அப்படியே .. இந்த இந்து மதம் உருவாக்கிய சதுர்வர்ண கொள்கையைப் பற்றி பதிவு போட்டால் நன்றாக இருக்கும்.. ஊர்ல ஒருத்தவன் கஸ்ட்டப் பட்டு கல்யாணம் பண்ணி பிள்ளையப் பெத்தானாம் .. இன்னொருத்தவன் நோகாம அந்த பிள்ளைக்கு அவனோட பேர இனிசியலா வச்சிட்டு போயிட்டானாம் ...
என்னமா கதை விட்றீங்க பா ..
என்ன பண்றது ..
மிக்க நன்றி மறுது .. என்ன செய்வது நம் பிள்ளையை நடுத்தெருவில் விட்டது நம் தவறு ...
நல்லதொரு பதிவு சகோதரா... விஞ்ஞானத்தை ஏற்பது என்பது சிலருக்கு சிரமம் தான் ஆனால் காலம் மாறும்...
Valaakam said…
சுப்பர் பதிவு... பில்லியனில்லை... அதற்கு மேலும் பயண்பாட்டில் இருந்துள்ளது...
இவங்கள்... எப்ப விஞ்ஞான அடிப்படைதான் மதம் என்பதை ஒத்துகிட்டிருக்காங்க... சும்மா.. எல்லாத்தையும் கதையாக்கி... மதவெறி பிடித்தலையிறாங்க... :/
KUMS said…
நல்ல பதிவு.
உலகிலுள்ள பல சமயங்கள் கூர்ப்பு கொள்கையை (Theory of Evolution) எதிர்கின்ற போதும் இந்து சமயம் மட்டுமே அதற்கு சார்பான புராண கதைகளை கொண்டுள்ளது. விஷ்ணுவின் பத்து அவதாரங்களை நோக்கும் போது இது தெளிவாக தெரிகின்றது.
அடுத்து, இந்து சமயம் ஆதி காலம் தொட்டே கிரகங்கள் ஒன்பது (சூரியனையும் சேர்த்தே) என்று கூறி வருகிறது. ஆனால் விஞ்ஞானம் சிறிது காலத்திற்கு முன்பு வரை சூரியக் குடும்ப உறுப்பினர்களை பத்தாக பட்டியலிட்டது. பின்பு புளூட்டோவை நீக்கியதன் மூலம் இந்து சமயத்தின் நவக்ரக கொள்கையை உறுதிப்படுத்தியுள்ளது. ( ஜோதிடத்தை நம்பும் ஒரு சில மேலைத்தேய நாட்டவர்கள் புளூட்டோ இல்லாமல் போனதால் குழம்பி போய் இருப்பதாக எங்கோ வாசித்தது ஞாபகம் வருகிறது.)
SUBBU said…
A VERY GOOD ARTICLE.I LIKE IT.

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒர...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...