ஜோதிடம் - அறிவோம் உண்மைகள் - ஒரு குட்டி கதையும்

வாழ்க்கையின் நிகழ்வுகள் ஒன்றுடனொன்று தொடர்புபட்டவை. இதை தான் சமாந்தர உலக தியரியும் கயோஸ் தியரியும் பறை சாற்றி நிற்க்கின்றன . இந்த நிகழ்வுகள் அனைத்தும் வெறும் நிகழ்வுகள் , அதாவது உயிரினங்கள் எவ்வாறு  இந்த உலகில் ஒரு விபத்தால்(எதிர்பாராத உயிர் பிணைப்புகள் ) உருவாகியதோ அதே போல தான்நிகழ்வுகளும் விபத்து போன்றது .

ஏனைய உயிரினங்கள் போலவே மனிதனின் வாழ்க்கையும் , இருந்தாலும் இந்த அறிவும் கொஞ்சம் கூடுதலாக இருப்பதால் ஏமாற்று வேலைகள் , தனக்கேற்ப  நிகழ்வுகளை சாதகமாக்கி கொள்ளல் போன்றவற்றில் கில்லாடியாகி அதற்க்கு ஜோதிடம் என்றும் பெயர் வைத்தான்.


புரோகிதர்களும் ஜோதிடர்களும் சேர்ந்து அடிக்கும் கூட்டு கொள்ளை நிகழ்வுகளை எதிர்வு கூறி கட்டம் பார்த்து இடம்பெறுகிறது .  எந்த ஒரு விடயத்தையும் ஆதாரத்துடன் காட்டுவது அறிவியல் . ஜோதிடம் உண்மை என்பதற்கு ஆதாரம் என்ன ?

புரோகிதனிடம் கேட்க்கும் ஜோதிடமும் ஜோதிடனிடம் கேட்பதும் வேறுபடும். ஏன் வேறுபடுகிறது ? வெறுமனே 50 % நிகழ்தகவு  வைத்து கூறப்படுகிறது .

ஒரேயொரு ஆதாரம் இப்போதும் உறுதியாக இருக்கிறது . இரட்டையர்கள் பிறப்பு . இருவரும் பிறப்பது ஒரே ராசி ஒரே நட்சத்திரம் .ஆனால் இருவரின் வாழ்க்கையும் வேறு வேறு. சில வேளைகளில் ஒருவர் இறந்து விடுவது உண்டு .

ஜோதிடர்களின் கணிப்பு வியாழன்  வாழ்க்கையை தீர்மானிப்பதாகவும் சனி வாழ்க்கையை கெடுப்பதாகவும் இருக்கிறது . சனி 50000 கிலோ மீட்டர் அகலமான ஹய்ட்ரஜனையும் ஹீளியத்தையும் கொண்டது .அவை மாற்றத்தை ஏற்ப்படுத்தாது .

பொய் என்பதற்கு நாம் கி மு பல வருடங்களுக்கு முன்னர் செல்ல வேண்டும் . எகிப்தியர்கள் கோருஸ்  எனும் எகிப்திய சூரிய கடவுளை வழிபட்டு வந்தனர் . இது பிந்திய சூரிய கடவுள் கிறிஸ்து உருவாக்கத்திற்கு முதல். முன்னர் மனிதன் இரவு பகலை விழுங்குவதாகவும் பகல் இரவை விழுங்குவதாகவும் எண்ணியிருந்தான். அது தான் சூரியனை வழிபட்டு வந்தான் . அதனையே கடவுளாக சித்தரித்தான் . அதனை சுற்றி அமையும் ராசிகளை ஒவ்வொரு காலமாக நிர்ணயித்தான் . இது வானத்தின் மீதான நீண்ட கால அவதானத்தில் மனிதன் குறித்தவை .

நட்ச்சத்திரங்களை இரு முறைகளில் பார்க்கலாம் ஒன்று அவை இருப்பது போலவே ,மற்றயது நாம் நினைப்பது போல அவை இருப்பது . இதில் எது உண்மை என்பது பகுத்தறிவு தீர்மானிக்கும் .


ராஜாக்களின் காலம் தான் ஜோதிடத்தின் பொய் தாண்டவம் ஆட தொடங்கிய காலம். சில பொய்களை காரணத்துடன் சொல்ல வேண்டிய தேவை ஏற்ப்பட்டது. அதற்க்கு ஒரு உறுதியான காரணம்  தான் எமது வாழ்க்கை ஏற்க்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும்  இறைவனால் தீர்மானிக்கப்பட்டதாகவும் கதை அவிழ்த்து விடப்பட்டு ஜோதிடம் வளர்த்து விடப்பட்டது . சமயமும் இதே போலதான் வெறுமனே வானவியல் .

இஸ்லாமியர்களின் நட்சத்திர சந்திர வழிபாடும் , மற்றயவர்களின் சூரிய வழிபாடும் மிகச்சிறந்த உதாரணம். இவற்றின் மையம் தான் கடவுளை உருவாக்கியது .இது இவர்களுக்கு சொந்தமானது அல்ல . நாகரிகம் வளர்ந்த எகிப்தியர்களின் வழிபாட்டு முறை .

வானவியலை வைத்து உருவாக்கப்பட்ட இறைவன் , ஜோதிடம் இரண்டும் ஒன்று தான் . ஆனால் நட்சத்திரங்கள் , கிரகங்கள் மாற்றம் ஏற்ப்படுத்துமாம். இது விஞ்ஞானத்தால் முற்றாக மறுக்கப்பட்ட ஒன்று . அவற்றின் கதிர் வீச்சுகள் உண்மையாக வந்தால் உயிருடன் இருக்க முடியாது .

முன்னைய ராஜாக்கள் தமது யுத்த ஆயுதமாக ஜோதிடத்தை பயன்படுத்தி வளர்த்தனர்  . ஒரு கதை சொன்னால் சுவாரசியமாக இருக்கும் .

ஒரு முறை பிஜபூர் சுல்தான்  மீது படையெடுக்க தீர்மானித்தான்  கிருஷ்ணதேவராயன் . ஆனால் கிர்ஷந்தேவரயனை வெல்ல முடியாது என நினைத்த பிஜபூர் அரசன் தேவராயன் ஜோசியனை விலைக்கு வாங்கி விட்டான்.  படையெடுக்க தயாரான தேவரயனிடம் இன்று நீங்கள் துங்கபத்திரா நதியை தாண்டினால் உயிர் போய்விடும் என்று கூறினான் ஜோதிடன் . இதை கேட்டா மன்னன் என் நம்பிக்கை சொல்கிறது நான் வெல்வேன் என்று நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டான் . ஆனால் மனைவி பிள்ளைகள் அவனை அனுமதிக்கவில்லை .

உடனே வந்த தெனாலி ராமன் . அவன் சொல்வது பொய் என்பதை தான் நிரூபிக்கிறேன் என்று அரசனிடம் சொல்ல அரசனும் நீ சொல்வது நடந்தால் உனக்கு பொற்காசுகள் தருகிறேன் என்றார் .


அடுத்த நாள் காலை வந்த ஜோதிடனிடம்  ஐயா, அரண்மனை ஆஸ்தான ஜோதிடர் அவர்களே தாங்கள் கூறும் ஜோதிடம் முற்றிலும் பலிக்குமா எனக் கேட்டான். அதற்கு அச்ஜோதிடனும் என் ஜோதிடம் பொய்யானது அல்ல. இது வரை நான் கூறிய ஜோதிடங்கள் அனைத்தும் 100% மெய்யென நிரூபித்துள்ளேன். அப்படியிருக்க என் ஜோதிடம் பலிக்குமா என நீ எவ்வாறு கேட்பாய்? என்று கோபமாகக் கத்தினார் ஜோதிடர்.
அப்படியானால் தாங்கள் என்னை மன்னிக்கவும் என்றான் தெனாலிராமன். பின் ஜோதிடரிடம், “தாங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்வீர்கள்” என்று கேட்டான். அதற்கு அச்ஜோதிடரும்  ஏதேதோ கணக்குப் பார்த்து விட்டு “இன்னும் குறைந்தது இருபத்தைந்து ஆண்டுகளாவது நன்கு வாழ்வேன்” என்றான். இதைக் கேட்டதுதான் தாமதம், உடனே தெனாலிராமன் தான் தயாராக வைத்திருந்த வாளை உருவி சோதிடனின் தலையை வெட்டி வீழ்த்தினான்.


தனது ஆயுளையே ஒழுங்காக கணிக்க தெரியாதவனா உங்கள் ஆயுளை கணிக்கப்போகிறான் என்று கூறி விட்டு பின்னர் தேடி பார்த்த போது பிஜபூர் மன்னனுக்கும் ஜோதிடனுக்கும் இடையில் நடந்த கடித பரிமாற்றம் பிடி பட்டது .
நீளமாகி விட்டது பதிவு .அனைத்து கருத்துகளும் பதிய முடியவில்லை . பகுத்தறிவால் பொய்களை உடைப்போம். தொடர்ந்து எழுதுவேன் .


தகவல்கள் அனைவரையும் சென்றடைய ஓட்டு போடவும் .... நன்றி ..

Comments

Unknown said…
வலையுலகில் இன்றைய டாப் இருபது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

Popular posts from this blog

இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்