Skip to main content

Posts

விழியும் விழியும் நெருங்கும் பொழுது..

'விழியும் விழியும் நெருங்கும் பொழுது' எனும் பாடலை மிகவும் பிடிக்கும். வித்தியாசாகரின்  இசையில் வரிகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். அறிவுமதியின் வரிகள் இன்னும் பிடிக்கும். அதில் ஒரு வரிக்கு இப்படியொரு விளக்கம் பேஸ்புக்கில் படிச்சேன். \\\ ’விழியும் விழியும் நெருங்கும் பொழுது’ - சதுரங்கம் படப்பாடல். கவிஞர் அறிவுமதி எழுதியது. அதில் நாயகன் பாடும் ஒரு வரி: ‘இமையில் நிலவு நுழையும் பொழுது’ இரவு நேரத்தைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறார் என்று எண்ணினேன். ஒரு சந்தேகமும் வந்தது. “இது உறவின்போது பாடப்படும் பாடல். நாயகியின் கண்களில் நிலவு தெரிகிறதென்றால்.. வெளியிலா நடக்கிறது கலவி? அல்லது பால்கனியோ..” என்றெல்லாம் நினைத்தேன். ஆனால் கவிஞர் சொன்ன விளக்கம் கேட்டு அசந்துவிட்டேன். அதாவது.. கிறக்கத்தில் இருக்கும்போது, நாயகியின் கண் கருமணிகள் மேல் செல்வதால்.. கண்ணைப் பார்க்கும்போது நிலவைப் போலவே இருக்குமாம்! - Parisal Krishna Kumar \\

இரண்டாம் உலகம் - Universe or Multiverse ?

இரண்டாம் உலகம் திரைப்படம், Multiverse theory, Membrane theory போன்றவற்றை அடிப்படையாக் கொண்ட திரைப்படம். படத்தில், தியரி பற்றி பெரிய அறிமுகம் ஏதும் கொடுக்கப்படவில்லை. Michio kaku மற்றும் ஐங்ஸ்டைன் சொல்லிய கோட்பாட்டை டைட்டிலில் எளிமையாகப் போட்டார்கள். முக்கியமாக ஐங்ஸ்டைன் முடிக்காமல்( Theory of everything ) விட்டுப்போன கோட்பாடுகளில் ஒன்று. அதில் ஆர்வம் கொண்ட Michio kaku பின்னர் தானும் ஆய்வில் இறங்கினார். நம்மைப் போலவே நிறைய உலகங்கள் இருக்கின்றன, அதில் நம்மைப் போலவே பலர் இருப்பார்கள் என்கிற தியரி. உதாரணமாக, நீங்கள் இதை ஆர்வமாகப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள், நீங்களே வேறொரு உலகில் இருந்து திபெத்திய போராட்டம் பற்றி வாசித்துக்கொண்டிருக்கலாம். இன்னொரு உலகில், இணையமே இன்னமும் அறிமுகமாகாமல் இருக்கலாம். இன்னமும் நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கிறது.அங்கிருப்பவர்கள் தமிழை மொழியாகக் கொண்டவர்களாகவும் இருக்கலாம். அங்கு இயற்பியல் விதிகள் வேறுமாதிரியாகவும் இருக்கலாம். நம்மைப் போன்றவர்களை, அவர்களின் உலகை பார்க்க முடியாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. சூரிய குடும்பத்தில் பூமி இருப்பது...

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒர...

விரிச்சி கேட்டல் : 'வாய்க்குச் சக்கரை போடணும்'

'அமுதம் உண்க நம் அயலிலாட்டி' என்றொரு நற்றிணைப் பாடல்(கபிலர்) உண்டு.அதாவது பக்கத்து வீட்டுப் பெண்(அயல் + இல் + ஆட்டி) அமுதம் உண்ணட்டும் என்கிறாள் தலைவி. யாராவது நல்ல விஷயம் சொன்னால், 'வாய்க்குச் சக்கரை போடணும்' என்று இப்போது சொல்ற மாதிரி. தலைவி இவ்வளவு சந்தோஷப்படுகிற அளவுக்கு அப்பிடி என்னத்தைச் சொல்லிப்புட்டா பக்கத்து வீட்டுப் பெண்? தலைவன் வருவானா என்று காத்திருக்கிறாள் தலைவி. தலைவன் வந்திடுவான் கவலைப்படாதே என்று தோழி தேற்றுகிறாள். உடனே தலைவியை மேலும் தேற்ற ஒரு செய்தியையும் சொல்கிறாள். "பக்கத்து வீட்டுப் பெண் வேறோருத்தியோடு ஏதோ பேசிக்கொண்டிருக்கும் போது, ஏதோ எழுந்தமானமாக, 'அவன் இப்போதே வந்துவிடுவான்'  என்று கூறினாள். எனக்கென்னவோ அது நல்ல சகுனமாக/செய்தியாகப்படுகிறது" என்றாள். ஒரு நல்ல சொல்லைக் கேட்டல், நல்ல சகுனம் என நினைத்தார்கள் பண்டைத் தமிழர்கள்.அதுதான் 'விரிச்சி கேட்டல்' எனப்படுகிறது. ஏதாவது நல்ல வேலையா போகும்போது எங்கிருந்தோ வரும் நல்ல சொல் கேட்டல். உதாரணமாக, மணி அடித்தால் நல்ல சகுனம் என்பது மாதிரி. தலைவனுக்காக காத்துக்கொண்டிருக்கும்...

சங்க காலத்தில் திருக்கார்த்திகை விளக்கீடு!

பண்டைய தமிழர் மரபில், கார்த்திகைத் திருநாளன்று தீபங்களை வரிசையாக அடுக்கி விழாக் கொண்டாடும் வழக்கம் இருந்துள்ளது. வட இந்திய மக்களுக்கு தீப + ஆவளி  போல, நம் தமிழர் மரபில் திருக்கார்த்திகை விளக்கீடு கொண்டாடப்பட்டது. ஆனால் அப்போது சமயம் கலக்காத ஒரு கார்காலப் பண்டிகையாக கொண்டாடப்பட்டுள்ளது. கார் நாற்பது எனும் நூல்,  தன்னைப் பிரிந்து வெளியூருக்குச் சென்றிருக்கும் தலைவனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தலைவியின் ஏக்கத்தைக் கார்காலப் பின்னணியில் எடுத்துக்கூறுகிறது. இவை கார்காலத்தில் நிகழும் பண்பாட்டு நிகழ்வுகளையும் எடுத்துக் கூறுகின்றன. நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட  தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப்  புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி தூதொடு வந்த மழை   நன்மை மிகுந்த கார்த்திகைத் திருவிழா நாளில், நாட்டில் உள்ளவர்கள் கொளுத்தி வைத்துள்ள முதல்நாள் விளக்கைப் போல அழகுடையனவாகிப் பூத்திருக்கின்றன தோன்றிப்பூக்கள்(தோன்றி என்பது காந்தல் மலரின் வகை எனப்படுகிறது)'  என்கிற பொருளில் இந்தப் பாடல் அமைகிறது.   அகநானூறிலும்(நக்கீர...

மூடர் கூடம்

அண்மையில் வெளியான திரைப்படங்களில் இயக்குனர்  நவீன் அவர்கள் இயக்கிய 'மூடர் கூடம் '  மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு முயற்சியையும் புதிது என அறிமுகப்படுத்துவது கொஞ்சம் பழசாகப்படுகிறது. Quentin Tarantino வினுடைய படங்கள் போல என்கிற அறிமுகத்துக்கு  எல்லாம் அவசியமில்லை. இந்த அறிமுகங்கள்,விளக்கங்கள் எதுவுமில்லாமல் படத்தை ஒரு முறை பார்த்துவிடுங்கள். தமிழில் ஒரு புதுமையான திரைப்படம் பார்த்த அனுபவம் கிட்டும். படத்தில் அப்படி என்ன இருக்கு ? . ஒரு ஆர்வத்தில், 'படத்தின் கதை என்ன ?' எனக் கேட்பவர்களுக்காக கதையைச் சொல்லிடலாம். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நாலு பேரும்  சேர்ந்து திருடப்போறாங்க.படத்தின் கதையே அவ்வளவுதான்.ஆனால் கதை சொல்லும் விதத்தில் புதுமை செய்திருக்கிறார் நவீன். அந்த நான்கு பேரில் இயக்குனர் நவீனும் ஒரு பாத்திரமேற்று நடித்திருக்கிறார்.படத்தில் வருகிற அத்தனை பேரின் நடிப்பும்,Deadpan expressions உம் பிரமாதம்.ஒவ்வொரு சிறிய கதாப்பத்திரத்துக்கும் படத்தில் முக்கியத்துவம் உண்டு. நாய்க்கு ஒரு பாடல் கூட உண்டு. Flashback எல்லாம் உண்டு. விலங்குக...

கம்பன் கவிச்சுவை

சுவாரசியமான கம்பராமாயண பாடலொன்று. மேற்குல சூரியன் உதிக்குமா?. அதான் கம்பன். கம்பனின் கவிச்சுவையை கொஞ்சம் இரசிப்போம் என்று யூடியூபில் தேடியபோது ராகவன்(  @ RagavanG  )  அவர்கள் தொகுத்த ஒரு காணொளி கிடைத்தது.   வேறு வேறு time zone பற்றி கம்பன் சொல்லுகிறார்.வடக்கே செல்லச் செல்ல காற்றின் அழுத்தம் குறையும், உலகம் உருண்டைன்னு எப்படி அந்தக் காலத்தில் தெரிஞ்சிருக்கும்! வால்ம ீகி ராமாயணத்தில் இல்லாமல் கம்பராமாயணத்தில் மட்டுமே உள்ள காட்சி. எத்தனையோ யோசனைகளைக் கடந்து இலங்கையில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் அனுமனுக்கு வடதுருவத்தை அடைந்ததும் திசை மாறுகிறது. கீழுள்ள பாடலும் பொருளும் இன்னொரு இணையப்பக்கத்தில்( https://groups.google.com/forum/#!msg/mintamil/-MA8upTnKKA/vrLUjNRhyaEJ )  இருந்து எடுக்கப்பட்டது.   அத்தடங் கிரியை நீங்கி, அத்தலை அடைந்த வள்ளல், உத்தரகுருவை உற்றான். ஒளியவன் கதிர்கள் ஊன்றி, செத்திய இருள் இன்றாக விளங்கிய செயலை நோக்கி, வித்தகன், 'விடிந்தது!' என்னா, 'முடிந்தது, என் வேகம்!' என்றான். மேருமலையை நீங்கி அப்பால் சென்...