Skip to main content

Netflix Series : The Crown ❤


'தி க்ரவுன்' முதலாவது சீஸனில் முதலாவது எபிஸோட் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். சிறந்த தொலைக்காட்சித் தொடர் என்று கோல்டன் குளோப் விருது பெற்ற தொடர்.
முதலாவது எபிசோட்டிலேயே இங்கிலாந்தின் தற்போதைய மகாராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கதை ஆரம்பமாகிறது. 1947இல், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், அவருக்கும் கிரேக்க மற்றும் டென்மார்க்கின் இளவரசர் பிலிப்பிற்கும் இடையில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு, இளவரசர் பிலிப் தனது கிரேக்க மற்றும் டென்மார்க் குடியுரிமையை விட்டுக்கொடுத்து, வெளிநாட்டுப் பட்டங்களை விட்டுக்கொடுத்து லெஃப்டினன் பிலிப் மவுண்ட்பட்டன் ஆகிறார். இருவருடைய திருமணமும் நடக்கிறது.
முதல் சில நிமிடக் காட்சிகளிலேயே லைட்டிங், ஆடை வடிவமைப்பு, கட்டட வடிவமைப்பு, கதாப்பாத்திரங்கள், அவற்றை எடுத்திருக்கும் முறை, பின்னணி இசை என்று அனைத்தையுமே அருமையாக எடுத்திருக்கிறார்கள்.
இரண்டாம் உலகப்போரின் போது, 1945 வரை பிரிட்டன் பிரதமராக இருந்த வின்ஸ்டன்ட் சர்ச்சில் திருமணத்திற்கு வரும்போதே சகலரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்டுதான் வருவார். 'Winston still thinks he is the father of the nation', ' வின்ஸ்டன் இன்னும் தன்னை தேசத்தின் பிதாவென நினைத்துக்கொண்டிருக்கிறார்' என்று அவருக்குரிய மிடுக்கை காட்டியிருப்பார்கள்.
1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவுக்கு சுதந்திரத்தை அளித்துவிட்டு, சுதந்திர இந்தியாவின் முதலாவது கவர்னராக இருந்த லூயிஸ் மவுண்ட்பேட்டன், 1947 நவம்பரில் பிரிட்டனில் நடந்த இந்த ரோயல் திருமணத்திற்கு வந்திருப்பார். திருமண நிகழ்வில், 'இந்தியாவை கைவிட்டவர் இவர்தான்' என்று வின்ஸ்டன் சர்ச்சில் சொல்லுவார்.
திருமணம் முடிந்து, இளவரசர் சார்ள்ஸ் எல்லோரும் பிறந்தபிறகு, 1951 இல் வின்ஸ்டன் சர்ச்சில் மீண்டும் பிரதமராகிவிடுவார். இரண்டாம் எலிசபெத்தின் தந்தை ஆறாம் ஜோர்ஜுக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டுவிடும். சத்திரசிகிச்சைக்கு பிறகு எழுந்து, வின்ஸ்டன் சர்ச்சில் மீண்டும் பிரதமரானதை அறிந்ததும், 'They keep trying to count him out. But he keeps getting back up' என்று சொல்வார். ஆறாம் ஜோர்ஜுக்கு கான்ஸர் இருப்பதை வின்ஸ்டன் சர்ச்சில் கண்டுபிடித்துவிடுவார். வின்ஸ்டன் சர்ச்சிலை புத்திசாலியாகத்தான் அப்படியே காட்டியிருக்கிறார்கள்.
ஆறாம் ஜோர்ஜ், வின்ஸ்டன்ட் சர்ச்சிலை சந்திக்கும் போது, காமன்வெல்த் நாடுகளுக்கான பயணத்துக்கு தன் மகள் எலிசபெத்தை அனுப்ப நினைத்திருப்பதாக சொல்லுவார். இப்பொழுது, 54 நாடுகளுக்கான காமன்வெல்த் தலைவராக இருக்கிற இரண்டாம் எலிசபெத் மகாராணிதான் அவர். அவருக்கு திருமணம் நடந்தபோது 21 வயது. காமன்வெல்த் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது 25 வயது. அப்போது 1951. இப்போது 2021. அவருடைய வயது 95. இப்பொழுதும் மகாராணியாகத்தான் இருக்கிறார். அவரைச் சுற்றித்தான் இந்தக் கதை ஆரம்பிக்கிறது. ஆனால் அதையொட்டி நிறைய சுவாரசியமான வரலாற்றுச் சம்பவங்கள், நிறைய நிகழ்வுகள் எல்லாம் நடக்கிறது.
நிரம்பியிருக்கும் நிகழ்வுகளுக்காகவும், அதை எடுத்திருக்கும் கலையம்சத்துக்காகவும், அழகுக்காகவும், அழகின் பிரமாண்டத்துக்காகவும் பார்க்கலாம். ஒரு எபிசோட்டிலேயே மூளைக்கு அதையொட்டி ஏராளம் உள்வாங்கிக்கொண்ட திருப்தி கிடைக்கும். அவர்களுடைய execution, அந்த கிளாஸான உரையாடல்கள், கலையம்சம் எல்லாம் அடித்துக்கொள்ளமுடியாது.
உதாரணமாக, ஆறாம் ஜார்ஜின் கோபத்தைப் போக்க, அவருடைய முதன்மையான பாதுகாவலர் பீட்டர், அவருக்கு tie கட்டிவிடும்போது, மிக மென்மையாக காமம் சார்ந்த ஒரு லிமிரிக் சொல்வார். லிமிரிக் என்றால் நகைச்சுவையான ஐந்து வரி வசனம், ஆனால் ரிதத்தோடு இருக்கும். Dirty limerick என்றும் சொல்லலாம்.
There was a young lady named Sally,
Who enjoyed the occasional dally.
She sat on the lap
Of a well-endowed chap,
And cried “Sir! You’re right up my alley!
இதையெல்லாம் அவ்வளவு அழகாக, பெண்களைப்போலவே, இரு ஆண்களுக்கு இடையேயான காமம் சார்ந்த நகைச்சுவையாக அழகாக, அசௌகரியப்பட வைக்காமல் எடுத்திருக்கிறார்கள்.
சுற்றி ஆண்கள் இருக்கிற இடத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணி தன்னை எப்படிக் கொண்டு நடத்துகிறார் என்று பார்க்கலாம். கிங்தான் வேண்டுமென்று எல்லோரும் கேட்கிற இடத்தில் தன்னை எப்படி நிறுத்திக்கொள்கிறார் என்றெல்லாம் பார்க்கலாம்.










Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ