Skip to main content

குறுகிய காலத் துணை: Evolutionary psychology என்ன சொல்கிறது?

காதல், காமம் சார்ந்த துணைகளைக் குறுகிய காலத் துணையாகத் (Short term relationship) தெரிவு செய்யலாமா? அல்லது நிறையத் துணைகள் வைத்துக்கொள்ளலாமா? அதை எப்படித் தெரிவு செய்யவேண்டும்? அல்லது ஓரிரவில் நிகழும் காமத்தை (One night stand) எப்படித் தெரிவுசெய்வது? Evolutionary psychology என்ன சொல்கிறது?


நிறையப்பேருக்கு, ஒருவனுக்கு ஒருத்தி என்கிற உறவில் மட்டுமே நாட்டம் இருந்தாலும், இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகும் என்கிற ஆர்வமும் இருக்கும். அவர்களும் இதைப் படிக்கலாம்.
பெரும்பாலும் குறுகிய காலத் துணைகள் என்றால், ஓரிரவில் ஒருவருடன் காமத்தைக் கடந்து( One night stand), அவருடன் அதற்குப் பின்னால் எந்தவிதமான உறவுமோ தொடர்புமோ வைத்துக்கொள்ளாமல் இருப்பதே என்கிற கருத்தும் நிலவுகிறது. குறுகிய காலத் துணை என்றால் அது மட்டும் இல்லை. ஆனால், 'One night stand' ம் அதில் உள்ளடக்கம் என்று வைத்துக்கொள்ளலாம்.
குறுகிய கால உறவு என்றால், இருவர் சந்தித்து, ஓர் அறைக்குள்ளேயோ வேறெங்கோ சென்று காமம் வைத்துக் கொள்வதும் உடலால் இன்பம் அடைவதும் அந்த ஒரு நாளின் பின்னால் அதை விட்டு விலகுவதும் மட்டும் இல்லை. குறுகிய காலத் துணையில் காலங்களின் நீளங்கள் மாறுகிற உறவுகளும் உண்டு. சிலவேளைகளில் அவை நீண்டகாலத் துணையாக, பல துணைகளில் ஒரு துணையாகக் கூட இருக்கலாம். அவர்களுக்கிடையில் PSYCHOLOGICAL INTIMACY கூட இருக்கலாம்.
PSYCHOLOGICAL INTIMACY என்றால் ஒருவருடன் நீங்கள் உங்கள் தனிப்பட்ட எண்ணங்கள், உணர்வுகள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டு அதன் வழி ஒரு நெருக்கத்தை உணர்வது. அவர்களிடம் எதையும் மறைக்காமல், நீங்கள் நீங்களாகவே இருந்து உரையாடிப் பகிர்ந்துகொள்வது. அவர்களை நம்புவதும் அதன் வழியாக அவர்களுடன் ஒரு உளவியல் தொடர்பினை வைத்துக்கொள்வதும் ஆகும்.
ஆனால் இந்த PSYCHOLOGICAL INTIMACY இல்லாமல் நாங்கள் ஈர்ப்பினால் உடலினால் மட்டும் காமம் வைத்துக்கொள்ளத் தெரிந்தவர்கள் என்று சிலர் சொல்வதும் இயங்குவதும் உண்டு. எங்களால் இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியும் என்றும் சொல்வது உண்டு. அதேநேரம், ஆண்களைப் போல தங்களால் INSTANT GRATIFICATION, உடன் ஈர்ப்பினால் ஒருவரோடு காமம் கொண்டு இன்பம் அடையமுடியும் என்றும் நம்புவதும் உண்டு. இவர்கள் பெரும்பாலும் ஒரேயொருமுறை காமம் என்று One Night Stand தெரிவு செய்வது உண்டு. அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட தெரிவு.
ஆனால் இன்டகோர்ஸ் செக்ஸ் என்பது வேறு. ரொமான்ஸ் இருக்கிற செக்ஸ் அல்லது PSYCHOLOGICAL INTIMACY இருக்கிற செக்ஸ் என்பது வேறு. ரொமான்ஸும், உள்ளம் சார்ந்த நெருக்கமும் சேர்ந்த செக்ஸ் மேலும் மேலும் உடலைப் படித்து அதை இசை போல் கையாளப் பழகி மீண்டும் மீண்டும் ஓரிடம் சேர்வதில் இன்பம் கண்டு, அதில் ஜீவன் தேடி ஒத்திசைவது என்று சொல்லலாம்.
ஆனால் ஒரு துணையோடு இப்படி இருக்கலாம். அது எப்படி பல துணைகளோடு, குறுகிய கால உறவில் இருப்பது என்று யோசிக்கலாம். அது நமது கலாச்சாரத்தின் படி பிழையென்று யோசிக்கலாம். காமத்தையும் காதலையும் பிரித்துப் பார்ப்பது கூட சரி. ஆனால் அதெப்படி இரண்டையும் இணைத்து அதைப் பலரிடம் காண்பது என்று யோசிக்கலாம். இதைப் பற்றி நமக்கு உணர்வு ரீதியாக வெவ்வேறு பார்வைகள் எல்லாம் இருக்கலாம். ஆனால் நமது Evolutionary PSYCHOLOGY, மனித நடத்தை, உளவியல், உயிரியல், பரிணாமம் எல்லாவற்றையும் ஆராயும் படிப்பும் ஆய்வும் என்ன சொல்கிறது?
ஆணினதும் பெண்ணினது மூளை, பல குறுகிய காலத் துணைகளுக்கும், பல உறவுகளுக்கும்(Promiscuous) அதே நேரம் நீண்ட உறவுகளுக்கும் ஏற்றபடி பல்லாயிரம் ஆண்டுகளாக மாறி வந்திருக்கிறது என்று சொல்கிறது. ஆனால் இருவரும் குறுகிய காலத் துணைகளைத் தெரிவுசெய்கிற விதம் மட்டும் மாறுபடுகிறது என்று சொல்கிறது. குறுகிய கால உறவில், ஆண்கள் பெரும்பாலும் எண்ணிக்கைகளில் அதிகமாக வைத்திருக்க விரும்புவதாகவும், பெண்கள் பெரும்பாலும் தரம் பார்த்து தேர்வு செய்வதாகவும் சொல்லப்படுகிறது.
பெண்கள் பெரும்பாலும், சமச்சீர் முக அமைப்பு உள்ள ஆண்களையும், ஆண்மை அதிகமுள்ள ஆண்களையும், சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகிற ஆண்களையும் விரும்புவதாகச் சொல்லப்படுகிறது. நீண்ட கால உறவில் ஆண்கள் பெண்களிடம் அழகும் இளமையும் எதிர்பார்ப்பதாகவும், பெண்கள் ஆண்களிடம், மெச்சூரிட்டியும், வயதும், இன்டெலிஜென்ஸ்ஸும் எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது,
இதனால் குறுகிய கால உறவுகள் பெரும்பாலும் ஈர்ப்பு சார்ந்ததாக இருக்கிறது. அது கூடாது என்று பலர் சொல்வார்கள். ஆனால் அந்த ஈர்ப்பு குறையாமல் இருந்தால் அந்த உறவு இன்னும் நெருக்கமாக இருக்கும். இல்லாவிட்டால் அந்த ஈர்ப்பை அந்தக் குறுகிய காலத்துக்குள் அழகாய் அனுபவிக்கத் தெரியவேண்டும். அதை ஒரு நினைவாக சுமந்திருக்கத் தெரியவேண்டும். இல்லாவிட்டால் வேறு செக்ஸ் என்று கடந்து போகலாம். அது ஒவ்வொருவருடைய ஜீவன், பெர்சனாலிட்டி/ ஆளுமை, ஆழம் எல்லாம் சார்ந்த விடயம்.
அதேநேரம், குறுகிய கால உறவுகளில் உங்களால் எல்லாவற்றையும் நன்றாகப் பேசக்கூடிய, நம்பக்கூடிய, உரையாடக்கூடிய உறவுகளோடு வைத்திருந்தால் இன்னும் நன்று. ஏனென்றால் இன்னமும் காமத்துக்கு கொடுக்கிற விலை நம் சமூகத்தில் அதிகமாகத்தான் இருக்கிறது. அதை மதிக்கத் தெரியாதவர்கள், காமம் பிரிந்தபின் அதை மதிக்கத் தெரியாமல், அதை வைத்துப் பயன்பெறவும் உங்கள் ஆளுமையைத் தாக்கவும் நினைக்கிறவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். அதனால் நம்புகிறவர்களோடு வைத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் எது வந்தாலும் நான் பார்த்துக்கொள்வேன் என்றாலும் உறவுகளை வைத்துக்கொள்ளுங்கள்.
துணைகளுடன் இவை குறித்து உரையாடிக் கொள்ளுங்கள். அவர்களுடைய மெச்சூரிட்டியை அளந்துகொள்ளுங்கள். விலகினால், தர்க்கமோ என்னவோ அதை அவர்களோடு மட்டும் வைத்துக்கொண்டு விலகிவிடுங்கள். அதுவரை இருந்த உறவுக்கு மதிப்புக் கொடுங்கள். அல்லது எனக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறது. எனக்கு PSYCHOLOGICAL INTIMACY வேண்டாம், என்னால் ஒரு நாள் உறவில் வெறும் உடல் இன்பம் அடைய முடியும் என எண்ணினால் அதையும் பேசி முடிவெடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் கட்டுப்பாடுகளற்ற திறந்த உறவில் உரையாடி நெருக்கம் பேணி காதலையும் காமத்தையும் உறவாடிக் கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒர...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...