ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே, பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள்.
மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைஇரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து
பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன
நறுந்தண் ணியளே நன்மா மேனி
மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தால் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்' என்பது ஈர்ப்புள்ள சொல்.
காதலனின் மென்மையான அன்பினைச் சொல்லுகிற இன்னொரு பாடல். இதன் முதல் இரண்டு வரிகளும் "பின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை" வரிகள்போல குட்டிக்கவிதை.
தலைவனின் பிரிவினால் துயருறும் தலைவிக்கு அவளுடைய தோழி ஆறுதல் சொல்கிறாள். அதற்குத் தலைவி கூறும் பதிலாக இப்பாடல் அமைகிறது.
"வார் உறு வணர் கதுப்பு உளரி, புறம் சேர்பு
"அழாஅல்" என்று நம் அழுத கண் துடைப்பார்"
Comments