Skip to main content

தமிழர்களும் சர்வதேசமும் - Soft Power to Smart Power

இந்தக் கட்டுரையானது, தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த காலகட்டத்தில் இருந்து, இலங்கை மீது விழுந்திருக்கும் சர்வதேசப் பார்வையை ஆராய்வதோடு, உள்நாட்டு அரசியல் களநிலவரங்களையும் ஆராய்கிறது. இந்தியா, அமெரிக்கா உட்பட  மேற்குலக நாடுகளினதும் கொள்கைகள் மாறியிருக்கிற காலகட்டத்தில் அவற்றை நன்றாகப் பயன்படுத்தி, தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உண்டாக்கித் தரவேண்டியது அரசியற் தலைவர்களினது கடமையாகும். அதற்குத் தகுதியான, சர்வதேச நாடுகளிடையே சிறந்த உறவைப் பேணக்கூடிய உறுப்பினர்களை, பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யவேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது. அமெரிக்கா போலே Soft power இலிருந்து Smart Power எனும் கொள்கையை அடையவேண்டும்.



இலங்கையில், 2015ம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிற வேளையில், வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல் களங்களும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அதற்கான  காரணம், உள்நாட்டில் நிலவுகிற  இனப்பிரச்சனை.  இதில் தமிழர்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் அனுசரணை, வழிகாட்டுதலின் கீழ் இயங்கிவருகிறது.  இந்தமுறையும், தமக்குத் தேவையான பேரம்பேசும் ஆற்றலை வழங்கும்படி கேட்கிறார்கள். சர்வதேச அரசியலைப் பொறுத்தவரை, எல்லாவிதமான விடயங்களையும் ஆராய்ந்துதான் தீர்மானம் எடுப்பார்கள். அதற்கான சூழ்நிலை அமைந்துவராவிட்டால், அவற்றை அமைத்துக்கொள்ளுவார்கள். அப்படிச் சாதகமான சூழ்நிலை நிலவும் காலகட்டத்தில், தங்களது  பேரம்பேசும் அரசியல் மிகவும் முக்கியமானதாக அமையும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாதம். ஆனால், வாக்குபலம் மட்டுமே பேரம்பேசும் சக்திக்கு போதுமானதாக அமையாது. சிறந்த பேச்சாளர்களும் அவசியம். 

2009 முதல் 2015 வரையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  

2009ம் ஆண்டு, விடுதலைப்புலிகள் தங்களது ஆயுதங்களை மௌனித்த பிறகு , 2010 ம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது. இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பெரும்பான்மையான தமிழ் மக்களின் ஆதரவுடன் 14 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. அதன்பிறகு, சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் மஹிந்த அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. அரசினது ஆர்வமற்ற  மனப்பான்மையால் பேச்சுவார்த்தையானது  தோல்வியுற்றபின், சர்வதேச நாடுகளிடமிருந்து இலங்கை அரசுக்கு அதிகப்படியான அழுத்தங்கள் வந்தது. அதோடு, அமெரிக்காவும்  ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில்  இலங்கைக்கு எதிராகப் பிரேரணையைக் கொண்டுவந்து, அதில் வெற்றியும் கண்டது. மஹிந்த ராஜபக்ஷவின் பலம்பொருந்திய, சர்வாதிகார  உள்நாட்டு ஆட்சியில் அனைவரும்  குரல் கொடுக்கத் தயங்கியபோதுதான் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது என்பதை நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

 மஹிந்தவின் அரசானது சர்வதேசத்தின் அழுத்தங்கள் எதற்கும் அடிபணியாது நின்றது. அந்தக் காலகட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் இயங்கமுடியாத சூழ்நிலை நிலவியது. தனது ஆட்சி அதிகாரத்தைப் பறிப்பதற்குத் திட்டம் தீட்டப்படுகிறதென்பதை அறிந்த மஹிந்த அரசானது தனது ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னராகவே அடுத்த தேர்தலுக்குச் சென்றது. அதன்பிறகு, 2015 ஜனவரியில் மஹிந்தவின் ஆட்சி அதிகாரமானது  எதிர்பாராத விதமாகப் பறிக்கப்பட்டது. அது  Silent revolution/Rainbow revolution என்று சிலரால் அழைக்கப்பட்டது.  இந்த மாற்றத்தின்  பின்னணியில் இந்தியாவின் செயற்பாடு வலுவாக இருந்ததாக தென்னிலங்கையில் விமர்சனங்கள் எழுந்தது. இலங்கையின் அப்போதைய பாதுகாப்பு செயலாளரும் மஹிந்தவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ, இந்தியப் புலனாய்வுத் தலைவரின் செயற்பாடு குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்தார். மஹிந்தவைத் தோற்கடிக்கவென மைத்திரி தலைமையில் தென்னிலங்கையில் ஒன்றுசேர்ந்த கூட்டமைப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்துகொண்டது. சர்வதேசத்தினதும் இந்தியாவினதும் ஆலோசனை இன்றித்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்த முடிவினை எடுத்திருக்காது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை 

இந்தியாவில் காங்கிரஸ் அரசு வெளியேற்றப்பட்டபின் பா.ஜ.கா அரசானது  ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. முன்னைய அரசு போல அல்லாது, பா,ஜ.கா அரசின் வெளியுறவுக் கொள்கைகள் உறுதியானது என்பதே சில ஆய்வாளர்கள் கருத்து. இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக  நியமிக்கப்பட்ட அஜித் டோவால் மிகவும் உறுதியானவர். சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கைக்கு வந்துபோவதைக் கடுமையாக எச்சரித்தார். இந்தியாவுக்கு மட்டுமல்லாது சர்வதேசத்துக்கும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனைக்குத் தீர்வுகாணவேண்டிய அவசியம் இருக்கிறது.

2015 ஜனவரித் தேர்தல் வரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளின் நிலைப்பாடு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எதிர்த்துப் புதிதாக நிறையக் கட்சிகள் தோற்றம் பெற்றிருக்கின்றன.  எதிர்ப்பு அரசியல் செய்வது அந்தக் கட்சிகளின் கொள்கையாகும். சர்வதேச சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும்  நகர்வுகளைத் தொடர்ந்து எதிர்ப்பவர்கள். இதே எதிர்ப்பைத் தான் சிங்களக் கடும்போக்கு கட்சிகளும் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவானது, இலங்கைக்கு எதிராக ஐநாவில் பிரேரணையைச் சமர்ப்பித்தது. இதைச் சிங்களக் கடும்போக்காளர்களுடன் சேர்ந்து இவர்களும் எதிர்த்தார்கள். இதில் எந்தவிதமான இன்டலெக்சுவல்த்தனத்தையும் காணமுடியவில்லை.   ஆனால், தான் கொண்டுவந்த பிரேரணையை எப்படியாவது நிறைவேற்றி விடவேண்டுமென்பது அமெரிக்காவினது எண்ணமாகவிருந்தது . உலகின் தலைசிறந்த பேரம்பேசக்கூடிய பேச்சாளர்களைக் கொண்டிருக்கிற அமெரிக்காவானது, பெரும்பானைமையான நாடுகளின் ஆதரவைப் எப்படியோ பெற்றுக்கொண்டது. இதில் சுமந்திரனின் பங்கும் இருந்தது. அப்போதைய காலகட்டத்தில் மஹிந்த அரசின் நெருங்கிய நண்பராக இயங்கிவந்த அவுஸ்திரிலேயாவுடன்  பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார். பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கு அவுஸ்திரேலியாவானது மிகப்பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது. கொஞ்சம் கடுமையாகவிருந்த பிரேரணையை நிறைவேற்றவதற்கு போதியளவு ஆதரவு இல்லாமல் இருந்தபோது, அதில் சில திருத்தங்களை அமெரிக்கா மேற்கொண்டது. அப்படி நிறைவேற்றப்பட்ட பிரேரணைதான் இன்றும் அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியாக இருந்துவருகிறது.

அதன்பிறகு, முழுச் சமூகமும் இணைந்து மகிந்தவினை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்ற முற்பட்டவேளை, தமிழ்ச் சமூகத்தினை வாக்கினைப் புறக்கணிக்கும்படி சில கட்சிகள் கேட்டுக்கொண்டன. இறுதியில் சிறுபான்மை வாக்குகளே புதிய அரசின் சக்தியையும் தீர்மானிக்க உதவியாக இருந்தன.

2015க்குப் பின்னரான தென்னிலங்கை நிலவரம் 

சிறுபான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரியின் அரசானது தமிழ்ப் பிரதேசங்களில் இருந்த இராணுவக் கெடுபிடிகளை அகற்றியதோடு, குறிப்பிட்ட அளவு காணிகளையும் மக்களிடம் கையளித்தது.  புதிய அரசின் இந்தச் செயற்பாடுகள் அனைத்தையும் மஹிந்தவின் கூட்டம் தங்களுக்கு ஆதரவான இனவாத வாக்குகளாக மாற்றப் பார்த்தன.

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்த்தல், கடும்போக்கான கருத்துகளைத் பொதுவெளியில் தெரிவித்தல் போன்ற செயற்பாடுகள் நிகழ்வதற்கு இடமளிக்கப்பட்டிருந்தால், அது தென்னிலங்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். "சர்வதேசமும் மைத்திரி-ரணில் அரசும் சேர்ந்து நாட்டைப் பிரிக்கப்போகிறார்கள்" என்கிற மஹிந்தவின் பிரச்சாரத்துக்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமையும். தென்னிலங்கை மக்களின் ஆதரவுடன், தமிழர்களின் பிரச்சனைய ஆராயத் தயாராகவிருக்கிற  ஒரு புதிய அரசு பாராளுமன்றம் வரவேண்டிய அவசியமிருக்கிறது. தென்னிலங்கையையும் சமாளித்துக்கொண்டு தமிழர் பிரச்சனையையும் தீர்த்து வைக்கவேண்டிய நெருக்கடியான சூழ்நிலை நிலவுகிறது. 

பேரம்பேசும் அரசியல் - சிறந்த Negotiators அவசியம் 


“In a negotiation, we must find a solution that pleases everyone, because no one accepts that they must lose and that the other must win... Both must win!” - Nabil N. Jamal

பேரம்பேசுதல் நிகழும்போது இருதரப்பும் வெற்றிபெறவேண்டும். சிறந்த முறையில் பேரம் பேசக்கூடிய சக்திகளையும் நபர்களையும் கொண்டே தற்போதைய உலக அரசியல் இயங்கிவருகிறது. அணு ஆயுத ஒப்பந்தங்கள் முதல் உள்ளூர்க்  கைத்தொழில் ஒப்பந்தம் வரைக்கும் எத்தனையோ விடயங்களை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்கிறார்கள். அமெரிக்காகூட 'hard power' எனும் கொள்கையிலிருந்து 'smart power' எனும் கொள்கைக்கு நகர்ந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்திலிருந்து நிறையப் பேச்சாளர்கள், இன்டெலெக்சுவல்ஸ்,சமூக அமைப்புகள் உருவாகவேண்டிய காலகட்டம் இது. 

ரணில் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குப் பின்னரான அரசியல் 

ரணிலின் தலைமையிலான கூட்டணிக் கட்சி வெற்றி பெற்று ரணில் பிரதமரானதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும். அதில் தங்கள் பேரம்பேசும் பலத்தைக் காட்டவேண்டிய கட்டாயம் தமிழ்த் தலைமைகளுக்கு இருக்கிறது. உள்நாட்டிலேயே பேசிக்கொண்டிருக்காமல் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் சரியான உறவைப் பேணவேண்டும். செப்டெம்பரில் வெளிவரவிருக்கும் ஐநாவின் அறிக்கையும் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை வழங்கும். தென்னிலங்கை அரசியலைக் கவனத்திற்கொண்டு, மார்ச்சில் வெளிவரவிருந்த  ஐ.நாவின் விசாரணை அறிக்கையானது செப்டெம்பருக்குப்  பிற்போடப்பட்டிருக்கலாம்.  

அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறைக் கொள்கை - QDDR 2015

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ