Skip to main content

தோட்டியின் மகன் - 3 / 36 ~ [புத்தகங்கள்2015]


"கன்னடத்தில் சிவராம காரந்தும் மலையாளத்தில் தகழி சிவசங்கரப்பிள்ளையும் இயல்புவாதத்தை முழுக்கமுழுக்க ஓர் இந்தியவகை அழகியலாக உருவாக்கிய மேதைகள் என்று சொல்லலாம்."

- தகழி சிவசங்கரப்பிள்ளை பற்றி எழுத்தாளர் திரு.ஜெயமோகன் 

இந்த வருடம் ஆரம்பித்ததிலிருந்து மூன்று புத்தகங்களைப் படித்துமுடிக்க இயலுமானதாக இருந்தது. வேலை, கல்வி, மேலதிக வாசிப்பு மற்றும் இதரவேலைகளுக்கும் நடுவில் இதுவொரு நல்ல எண்ணிக்கை என்றே எனக்குத் தோன்றுகிறது. 

இறுதியாக, தகழி சிவசங்கரப்பிள்ளை என்பவர் எழுதிய மலையாள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான 'தோட்டியின் மகன்' என்கிற நாவலைப் படித்துமுடித்தேன். 1946 இல் எழுதப்பட்ட இந்த நாவலை சுந்தர ராமசாமி அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்திருந்தார். எப்போதோ மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு இருந்தாலும், அதன் முதற் பதிப்பை 2000ஆம் ஆண்டில்தான் நாவலாக உருக்கொடுத்து வெளியிடமுடிந்திருக்கிறது. ஒரு நல்ல இலக்கியத்தைத் தமிழ் வாசகர்களுக்குக் கொண்டுவந்த பெருமை சுந்தர ராமசாமியையே சாரும்.   

எந்த இலக்கியவாதிகளாலும் பேசப்படாத  தோட்டியினுடையை வாழ்க்கையை ஒரு இலக்கியமாக வடித்திருக்கிறார். ஆழப்புழை நகரசபையில் பணிபுரியும் மலமள்ளும் தொழிலாளிகள் பற்றிய கதை.  தோட்டிகள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அவலங்களையும் சவால்களையும்  நம்முள்  ஆழமாகச் செலுத்துகிற நாவல். அவர்களும் மனிதர்கள்தான் என்று உரக்கக் குரல் கொடுக்கிற நாவல்.

ஒரு தோட்டிக்கு மகனாகப் பிறக்கிற கதையின்நாயகனும் விரும்பியோ விரும்பாமலோ தோட்டியாகவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான். 'தோட்டியின் மகன் தோட்டியாகவே ஆகவேண்டுமா!' என்கிற கேள்வி அவன் மனதுள் ஆழமாகப் பதிந்துபோகிறது. அதன்பின்னர் இந்தச் சமூகம் தோட்டிகளை நடத்துகிற முறையும், அவனை அவன் தொழிலின் மீது மேலும் வெறுப்படையச் செய்கிறது. இந்தச் சங்கிலித் தொடரிலிருந்து வெளிவரப் போராடுகிறான். தன்னுடைய பிள்ளையும் இந்தத் தொழிலுக்கு  வந்துவிடக்கூடாதென்று அஞ்சி தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து எதிர்காலத் திட்டங்கள் வகுக்கிறான்; போராடுகிறான். அவர்களது எதிர்காலத்தை எப்படி போராடிச் சமாளிக்கப் பார்க்கிறார்கள் என்பதை உணர்வுகள் கலந்து சொல்லியிருக்கிறார்.      

'தோட்டியின் மகன்' என்கிற நாவலின் மீது எழுந்த விமர்சனங்கள் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்...

1946இல் ’தோட்டியின் மகன்’ நாவல் மலையாளத்தில் தகழி சிவசங்கரப்பிள்ளையால் எழுதப்பட்டபோது அது ஓர் ஆபாச இலக்கியமாக, நுண்ரசனைக்கு எதிரானதாகவே, சமன் குலைக்கும் அதிரடியாகவே இலக்கியவாசகர்களால் பார்க்கப்பட்டது. ஒரு தோட்டி எப்படிக் கதைநாயகனாக ஆக முடியும், அவன் வாழ்க்கையில் வரலாற்றுப் பதிவு செய்யக்கூடியதாக என்ன இருக்கிறது, பிறர் தெரிந்துகொள்ளக்கூடியதாக என்ன இருக்கிறது? அந்த வினாவுக்குத் தகழி   ‘வாழ்க்கை’ என ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னார்.
 புத்தகத்தின் பின் அட்டை..




Comments

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...