Skip to main content

கோபல்ல கிராமம் 2/36 [புத்தகங்கள்2015]

சொற்களுக்கிடையேயான இடைவெளிகள், அவை ஒவ்வொன்றும் வந்துவிழும் போக்கு, ஒலிநயம் போன்றவை  வாசிப்பிற்கு அர்த்தம் சேர்க்கப் போதுமான காரணிகளில் சில எனலாம். கி. ராஜநாராயணனின் எழுத்தை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிற வேலையை மட்டுமே "கோபல்ல கிராமம்" என்கிற அவரது நாவல் செய்தது. மிகுதியை அவரின் கதை சொல்லும் முறையும், ஒரு கதை சொல்லியைக் கையாள்கிற லாவகமுமே மேற்கொண்டது. 


கணவனோடு கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வருகிற பெண்ணோடு  ஆரம்பிக்கிற கதை, பிரிட்டிஷ் மகாராணியின் நேரடி ஆட்சியின்  கீழ் இந்தியா கொண்டுவரப்படும் காலம்வரை நீள்கிறது.  அப்போதைய காலங்களில் கிராமங்களில்  நிலவிய நம்பிக்கைகள், ஆட்சி முறைகள், மனித உணர்வுகள், வட்டாரா மொழிகள் என அனைத்தையும் உள்வாங்கி வைத்திருக்கிறது இந்தக் கோபல்ல கிராமம்.

எழுத்தில் இருக்கும் இரசனைத்தன்மையை அனுபவிக்கிற அனிச்சையான 'அந்த' நிகழ்தலை எல்லா எழுத்துகளும் நிகழ்த்துவதில்லை. சாதாரண கிராம மக்களின் அன்றாடச்  செயற்பாடுகளை  விபரிக்கிற விதம்  அழகு. தொடுக்கப்படுகிற வசனங்களின் தொடர்ச்சியான அழகியல் அழகு. ஒரு நிறைவான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது.

தண்ணீர் ஒரு அரிய செல்வம். செல்வமானது இப்படி ஒரு இடத்தில், தனிமையாகத் தேங்கிக் கிடந்தால் அங்கே என்னதான் நடக்காது?
நண்டு தனது சொந்த சௌகரியத்துக்காக வளைதோண்டி வைத்திருக்கிறது. ஆனால் அங்கே இந்தக் குரவை மீனுக்கு என்ன சோலி? அந்த வளை, நீரின் நிலையை ஒட்டி அதன் சிற்றலைகள் அந்த வளைக்குள் சென்று வரும்படியாக அமைந்திருக்கும். மண்ணும் தண்ணீரும் சேர்ந்து பதப்பட்டிருக்கும் அந்தச் சொத மண்ணில் வசிக்கும் மண்புழுவைத் தின்ன குரவை மீனுக்கு ரொம்பப் பிரியம். அந்தக் குரவை மீனைப் பிடித்துத் தின்ன நாரை ஒற்றைக் காலில் நிற்கிறது. நாரையைப் பிடித்துத் தின்ன நரி பதிபோட்டுக் காத்து நிற்கிறது.

முதலில் மூன்று பாக்கை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். தனித்தனி வெத்திலையாக எடுத்து சுண்ணாம்பு தேய்க்கும் வழக்கம் இல்லை. மும்மூன்று வெத்திலையாகவே எடுத்து, வலமாக சுண்ணாம்பைத் தடவி, இறுக்கமாக மடித்து வாயில் இட்டு மொறுக் மொறுக் என்று மெல்லும்போது காதுகளின் பக்கத்தில் மேல்தாடையின் எலும்புப் புடைப்பு மேலும் கீழும் வந்துபோவது தெரியும். 

அவள் அபூர்வமாகத்தான் வாய்விட்டுச் சிரிப்பாள். இன்னொரு தரம் அப்படிச்சிரிக்கமாட்டாளா என்று இருக்கும். அவளுடைய சிரிப்பிலே தான் எத்தனை விதம்!  
கண்களால் மட்டும் சிரித்துக்காட்டுவது.
கண்கள் சிரிப்பதற்கு புருவங்கள் அப்படி ஒத்துழைக்கும்!
கடைக்கண்ணால் சிரிப்பது. 
முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் நேர்பார்வையில் சிரிப்பது; தரையைப் பார்த்துச் சிரிப்பது. (அவளுடைய சிரிப்பிலே இதுதான் அழகு) கண்களைச் சுழற்றி - பறவையாடவிட்டு - ஒரு சிரிப்புக் காட்டுவாள் (அப்போது கண்கள் ஜொலிக்கும்) சில சமயம், சற்றே மூக்கை மட்டும் விரித்து மூக்கிலும் ஒரு சிரிப்பை வரவழைப்பாள்!



Comments

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...