மலையாளப் பாடல்கள் மீது கொஞ்சம் ஈடுபாடு உண்டு. அண்மையில் காதுகளுக்கும் கண்ணுக்கும் இனிமை தரும் ஒரு பாடல் கேட்டேன். இந்தப் பாடல் வந்தது 2012 ல். என் கண்ணில் இப்போது தான் பட்டது. 'Yuvvh" எனும் பாடல் தொகுப்பிலிருந்து "நெஞ்சோடு சேர்த்து பாட்டொன்னு பாடாம்" என்றொரு பாடல் .
மீண்டும் மீண்டும் பல தடவைகள் கேட்டுவிட்டேன்."பாடிண்ட ஈனம்(tune) நீயானு", "நீ வரு ஈ பாட்டின் ராகமாய்", "விரியுன்ன சித்ரம் நீயானு " என்று அழகான வரிகள் கொண்டு கட்டப்பட்ட பாடல்.
பாடலின் காட்சியமைப்பின் அழகுக்கு ஒரு காரணம் Nazriya Nazim .ஒவ்வொரு அசைவுகளையும் அழகாக படம்பிடித்திருக்கிறார்கள். 'நேரம்' என்றொரு தமிழ் திரைப்படத்தில் கூட நடித்திருக்கிறார். மம்முட்டி நடித்த 'Palunku' எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தமிழில் இனி பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.
பாடலுக்கு இசையமைத்தது ஸ்ரீஜித்,சச்சின். பாடலைப் பாடியது ஆலப் ராஜு.
பாடலுக்கு இசையமைத்தது ஸ்ரீஜித்,சச்சின். பாடலைப் பாடியது ஆலப் ராஜு.
Comments