சுருக்கமாகக் கூறினால், மிகச்சிறந்த கவிஞர்களுள் ஒருவராக கருதப்படும் சில்வியா பிளாத், உளவியல் பிரச்சனையால் (மனப்பிறழ்வு - Bipolar disorder ) பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டவர்.சில்வியா பிளாத் பற்றி மேலதிக விபரங்கள் அறிய ஆர்வமிருந்தால் தேடிப் படித்துக்கொள்ளுங்கள். எழுத்தாளர் சுஜாதா 'சில்வியா' என்றொரு நாவலிலும் சில்வியா பிளாத் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். அந்த நாவலும் இது போன்றதொரு உளவியல் பிரச்சனையோடு தொடர்புபட்டது.
ஆனால் creativity தொடர்பான ஆய்வுகளின் மூலம் அதிகமாக அறியப்படும் உளவியலாளர் 'James Kaufman ' என்பவர் 'சில்வியா பிளாத் effect ' எனும் சமாச்சாரத்தை முன்வைத்திருக்கிறார். ஏனைய படைப்பாளிகளை விட பெண் கவிஞர்களே அதிகமாக இது போன்ற உளவியல் பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள் என்கிறார்.
கூகிள் செய்ததில் நிறையத் தகவல்கள் கிடைத்தன. ஆன் செக்ஸ்டன் (Anne Sexton) , Amy Levy (அமி லெவி ) , Sara Teasdale , Alfonsina Storni , Virginia Woolf எனத் தற்கொலை செய்துகொண்ட பெண் கவிஞர்கள் ஏராளம். ஏன் ஓவியர் வான் கோ கூடத் தற்கொலை செய்துகொண்டவர் தான். பொதுவாகப் படைப்பாளிகளுக்கே உள்ள உளவியல்ப் பிரச்சனை என வரையறுத்து விட முடியுமா என்ன?
சில்வியா பிளாத்தின் கவிதை எழுதும் பழக்கம் தான் அவரைக் கொஞ்சம் அதிக காலம் உயிரோடு வைத்திருந்திருக்கிறது என்பது சிலருடைய கருத்து.
சில்வியா பிளாத்தின் புகழ் பெற்ற கவிதை 'Daddy'. சில்வியா பிளாத் தன் சொந்தக் குரலில் வாசிக்கிறார்.
Comments