பாரபட்ச்ச்சமின்றி ஒரு நாத்திகனுக்கும் ஆத்திகனுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் டாக்டர் பால் டேவிஸ் என்பவரால் "The mind of the god " என்ற புத்தகத்தில் எழுதப்பட்டதை சுஜாதா அவர்கள் பகிர்ந்திருந்தார் ..... நான் உங்களோடு பகிர்கிறேன் ....
நாத்திகன் :- ஒரு காலத்தில் உலகத்தில் நடக்கும் அத்தனை காரியங்களுக்கும் கடவுள் தான் காரணம் .கல்லுக்குள் தேரை ,கருப்பை உயிருக்கு எல்லாம் கடவுள் தான் ஏற்ப்பாடு செய்கிறார் .அடுத்த பஸ் வருவது ,சிப்மண்டு பணம் திரும்பி வருவது கூட கடவுள் செயல் என்கிற விளக்கம் தேவைப்பட்டது .அது அறியாமையினால் வந்தது .மெல்ல மெல்ல அறிவியல் எல்லாவற்றின் இயற்கையையும் விளக்க கடவுளின் பொறுப்புக்கள் படிப்படியாக குறைந்து வருகிறது . அந்த முதல் வெடிவரை( பிக் பாங் ) கடவுளே இல்லாமல் போய்விட்டார்கள் . அதற்க்கு மட்டும் எதற்கு ஒரு கடவுள் தேவைப்படும் என்கிறாய் .
ஆத்தீகன் :- உங்கள் அறிவியலால் எல்லாவற்றையும் விளக்க முடியாது . உலகில் பல விந்தைகள் உள்ளன. உதாரணமாக ,பெரிய வியப்பு உலகில் - முதல் உயிர் எப்படி உருவானது என்பதே சரியாக விளக்கப்படவில்லை .உங்கள் அறிவியலாளர்கள் இதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் .
நாத்திகன் :- உண்மை தான் அறிவியல் எல்லாவற்றையும் இன்னும் விளக்கவில்லை . இதில் இன்னும் என்பது முக்கிய சொல் .விளக்க முடியாது என்றில்லை . கொஞ்ச நாள் ஆராச்சியில் அதன் அறிவு விஸ்தாரமாக ,மெல்ல மெல்ல விளக்கம் கிடைக்கும். ஆத்திகர்களான எல்லோரும் எப்போதும் இதை தான் சொல்கிறீர்கள் .உங்கள் அறிவியலால் இதை விளக்க முடியவில்லை என்பீர்கள் . விளக்கி விட்டால் இது எப்படி ? இது எப்படி ?இதை விளக்க முடியுமா ? என்று அந்த நிமிடத்தில் இன்னமும் விளக்கம் காணாத ஒரு பகுதியை எடுத்துக்காட்டாக சொல்கிறீர்கள் .
இப்படி இந்த விளக்கப்படாத ஓட்டைகள் இடம் மாறிக்கொண்டே போகின்றன .மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருகின்றன .என்னை பொறுத்த வரை இவை அனைத்தும் அறிவியலால் விளக்கப்பட்டு விடும் .அவகாசமும் ஆராய்ச்சி வசதிகளும் கிடைத்தால் அத்தனை பள்ளங்களுள் குழிகளும் நிரப்பப்படும் .கடவுள் என்கிற தத்துவத்திற்கு தேவை இல்லாமல் ;அதாவது உங்கள் கடவுளுக்கு மெல்ல மெல்ல பவர் குறைந்து பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் ஏற்ப்பட்ட மகா வெடிக்கு (பிக் பாங் ) மட்டும் உண்டானவர் என்று முடியும் இன்று .
ஆத்திகன் :- உங்கள் அறிவியல் பிரபஞ்சம் இயங்க கடவுள் தேவையில்லை என்று நிரூபித்தாலும் ,அதனை ஆரம்பிக்க ஒரு கடவுள் தேவைப்பட்டே தீருகிறார் .
நாத்திகன் :- சரி.............. வேறு காரணம் எதுவும் இல்லாமல் கடவுள் பிரபஞ்சத்தை படைத்தார் என்ற கூற்றுக்கு மட்டும் தேவைப்படுகிறார் என்றாள் ,நீங்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டு விட்டீர்களா ?
ஆத்திகன் :- பின் ?
நாத்திகன் :- இது தீர்வு அல்ல .பிரச்னையை வேறு தடத்துக்கு திசை திருப்புவது அவ்வளவு தான் ."கடவுள் பிரபஞ்சத்தை படைத்தார் " -இதற்க்கு என்ன அர்த்தம் ? இது எனக்கு எந்த செய்தியையும் தருவதில்லை .அந்த படைப்பு கணத்தின் போது யாரும் இல்லை . அதை சோதித்து பார்க்க முடியாது . ஒரு மர்மத்தை (பிரபஞ்சத்தின் ஆரம்பம் ) விளக்க மற்றொரு மர்மத்தை (கடவுள்) பயன்படுத்துகிறீர்கள் .அவ்வளவே ...நான் உங்களை உடனே கேட்கலாம் கடவுளை படைத்தது யார் ?
ஆத்திகன் :- கடவுளை யாரும் படைக்க தேவையில்லை .அவர் சுயம்பு .அவர் ஒரு தேவை .அவர் இருந்தே ஆக வேண்டும் .அதில் ஏதும் நமக்கு தேர்வு இல்லை .
நாத்திகன் :- அதே போல நம் பிரபஞ்சத்தையும் யாரும் படைக்கத்தேவையில்லை .அது சுயம்பு .அது தேவை .அதில் தேர்வு ஏதும் இல்லை என்று சொல்லலாமல்லவா ?
ஆத்திகன் :- விஞ்ஞானிகள் தர்க்கச்சங்கிலியை கவனிக்கலாம் .ஏன் மரத்தில் இருந்து பழம் விழுகிறது ? புவியீர்ப்பு விசையால் ..,ஈர்ப்பு விசை எப்படி வந்தது ?- அது ஒரு புலம் போல பரவியிருப்பதால் என்கிறீர்கள் .அது விண்வெளியின் வளைவு என்கிறீர்கள் .இவ்வாறு ஒரு விளக்கத்தை மற்றொரு விளக்கத்தால் இடம் பெயர்த்துக்கொண்டே போகிறீர்கள் .நாங்கள் கூறும் கடைசி கடவுளை மட்டும் ஏன் மறுக்கிறீர்கள் ?]
நாத்திகன் :- அப்படியில்லை .எங்கள் விளக்கங்கள் அனைத்தும் பரிசோதித்து பார்க்க கூடியவை .விண்வெளி வளைந்திருப்பதை கருவிகளையும் விசைகளையும் வைத்து அளந்து பார்க்க முடியும் .இல்லையெனில் அந்த விளக்கம் நிராகரிக்கப்படும் . விளக்கங்கள் எப்போதும் திருத்தத்துக்கு தயாராக இருப்பவை அவை வெறும் பேப்பர் முயற்ச்சிகள் அல்ல .
பிரபஞ்ச அறிவை விஸ்தரிக்கின்றன .அவைகளில் இருந்து நமக்கு பயனுள்ள நூற்றுக்கணக்கான டேக்நோலோஜிகளும் வின்வேளிப்பயனங்களும் அன்றாட விடயங்களும் நடக்கின்றன .ஆனால் இந்த கடவுள் என்கிற தத்துவத்தை வைத்துக்கொண்டு ஒரு பயனும் இல்லை .அது இன்னொரு சிக்கலான அம்சத்தை தோற்றுவிக்கிறது .மேலும் கடவுள் பிரபஞ்சத்தை படைத்தாரா என்பதை நம்மால் சரி பார்க்கவே முடியாது .பரிசோதனைக்கு உட்படுத்தவோ நிரூபிக்கவோ முடியாது ." கடவுள் பிரபஞ்சத்தை படைத்தார்" என்பது வெற்று வாக்கியம்,அவ்வளவு தான் .அவருடைய குணங்கள் என்ன ?பொறுப்புக்கள் என்ன ? என்ன கருவிகளை பயன்படுத்தினார் ? ஏன் இப்படி படைத்தார் ? இந்த விபரங்கள் இல்லாமல் "கடவுள் இருக்கிறார் என்பதற்கு நீங்கள் வேறு விதமான நிரூபணம் தராத பட்ச்சத்தில் அந்த கடவுளை என் போன்றவர்கள் நம்பத்தேவையில்லை .
ஆத்திகன் :- பிரபஞ்சத்தின் ஆரம்பக்கணம் வரை உங்களிடம் விளக்கம் இருக்கலாம் .ஆனால் அந்த ஆரம்பக்கணத்தை ஒரு நிகழ்வாகவே முரட்டு உண்மையாகவே அறிய விரும்புகிறீர்கள் .அதற்க்கு ஓர் ஆழமான விளக்கத்தை தேட மறுக்கிறீர்கள் .
நாத்திகன் :- நீங்களும் கடவுளை ஒரு முரட்டு உண்மையாகவே ஒப்புக்கொள்ள விரும்புகிறீர்கள் .நாங்கள் பிரபஞ்சத்தை .அவ்வளவு தான் வித்தியாசம் .வாருங்கள் காப்பி சாப்பிடலாம் ...
Comments
நிச்சயமாக ....
nice! good job!! :-)
நன்றி ஜி :-)