Skip to main content

எது செய்ததாலும் பிழைக்குதா? - விதி இல்லை- முர்பியின் விதி

ஒரு உதாரணத்தோடு தொடங்கலாம் ....

நீங்கள் ஒரு தெருவில் வாகனத்தில் ஒரு வரிசையில் காத்திருக்கும் போது அருகில் இருக்கும் வரிசையில் வாகனங்கள்  நகரும் . அருகில் இருக்கும் வரிசைக்கு மாறினால் அந்த வரிசை நின்றி விடும் . ஏனைய வரிசைகள் யாவும் வாகனங்கள்  அசையும் .

இன்னொரு உதாரணம் சொல்லலாம் . யாருக்காவது கால் பண்ணலாம் எண்டு பார்த்தா அந்த நேரம்பார்த்து பண மீதி போதாததா இருக்கும் . இல்லாவிட்டால் பட்டெரி தீர்ந்து  விடும் .

முர்பியின் விதி இதை தான் சொல்க்கிறது .ஒருவிடயம் பிழையாக செல்ல வேண்டுமானால் பிழையாகவே செல்லும் . மொழி நடையில் சொன்னால் , சுதப்பினால் தொடர்ந்து சுதப்புவது பற்றி தான் அந்த விதி சொல்கிறது . இது அனைவருக்கும் நடந்திருக்கும் .

உண்மையில்  மூர்பியின் விதி முன்னரே பிரபல்யம் அடையவில்லை . முர்பி எனும் அமெரிக்கா விமான படை அதிகாரி ஒருவர் இருந்தார்(இறந்த வருடம் 1990 ) .


அவர் விமான பாதுகாப்பு பற்றி ஆராய்ச்சி மேட்க்கொள்ளும் போது  விமான விபத்தில் மனிதர்களின் நிலையை அறியும் பரிசோதனையும்  நடை பெற்றது .  அதற்ட்க்கு ஒரு மனிதர் தேவைப்பட்டார் . அதற்க்கு முர்பியையே தெரிவு செய்தனர் . அந்த பரிசோதனையை செய்ய முன்னர் பல கருவிகள் நிலையை அளவிட பொருத்தப்பட்டிருந்தன . பரிசோதனை  நிகழ்ந்த போது முதல் சந்தர்ப்பத்தில் பதிவுகள் மேட்க்கொள்ளப்படவில்லை . பூச்சிய வாசிப்பையே காட்டியது . அதற்க்கான காரணத்தை கண்டறிந்தார் முர்பி .

இரண்டு வயர்களையும் மாற்றி பொருத்தியதால் இந்த விளைவு ஏற்ப்பட்டது . அப்போது முர்பி  கூறியது ." ஒரு வேலை செய்வதற்கு இரண்டு வழிகள் இருந்தால்  ,ஏதாவது ஒரு வழி தவறாக இருக்கும் , அதே வழியில்  தான் நாம் செய்வோம்  ". இந்த கூற்றை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தளபதி ஒருவர் இவ்வாறு கூறினார் .  பிழையாக செல்வது நிச்சயம் பிழையாகியே தீரும் . 


இதன் பின்னரே  முர்பியின் விதிக்கு வரவேற்ப்பு கிடைத்தது . 


கூடுதலாக நிகழ்தகவு அடிப்படையில் இந்த நிகழ்வுகள் நடந்தாலும் பெரும்பாலும் சிலசான்றுகள் பல விதிகளுடன் ஒன்றிணைந்து  நிற்கின்றன  . நாம் அனைவரும்  அன்றாட வாழ்வில் உணர்ந்திருப்போம் இதை .

மறக்காமல் ஓட்டை போடுங்கள் . தகவல் அனைவரையும் சென்றடையட்டும் . 

Comments

ஃஃஃ...நீங்கள் ஒரு தெருவில் வாகனத்தில் ஒரு வரிசையில் காத்திருக்கும் போது அருகில் இருக்கும் வரிசையில் வாகனங்கள் நகரும் . அருகில் இருக்கும் வரிசைக்கு மாறினால் அந்த வரிசை நின்றி விடும் . ஏனைய வரிசைகள் யாவும் வாகனங்கள் அசையும் ...ஃஃஃ நல்ல விளக்கம் ஒன்றுடன் அருமையாக ஒரு விதியை விளக்கியுள்ளீர்கள்...

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...