Skip to main content

மனிதனை விட திறமையான விலங்கு - புறா 1

மிகவும் நீட தூர பிரயாணத்திற்கு பின்போ ஏன் குறுகிய தூர பிரயாணத்தின் பின்பே நாம் வந்த வழியை மறந்துவிடுவோம் . ஆனால் புறாக்கள் எவளவு தூரம் பறந்தாலும் அதே இடத்தை வந்தடையுமாம். 1100 மயில்கள் எந்த வித வழிகாட்டியும் இல்லாமல் வந்தடையும் .


இதற்க்கு அவற்றிற்க்கு உதவி புரிவது அவற்றின் சொண்டுகளில் காணப்படும் இரும்பு தாது பொருந்திய கட்டமைப்பே .
இவை அவற்றிற்க்கு பூமியின் மின்காந்த  அலைகளை உணர  செய்கின்றன . அவற்றின் மூலம் அவை புவியியல் தன்மையை இனம் கண்டு கொள்கின்றன .


புறா பறக்கும் போது அதன் திசையை மாற்றும் போது வடக்கு நோக்கியே இரும்பு மூலக்கூறுகள் திரும்பும் .எப்போதும் பூமியின் மின்காந்த அலையை திசையை நோக்கிய படியே இருக்கும் .

முதன் முதலாக புறா மூலமே எகிப்தியர்களால் தகவல் பரிமாறும் சேவையும் ஆரம்பிக்கப்பட்டது . மிகவும் திறமையான புறாக்கள் ஒரு நாளைக்கு 500 மைல் தூரம் பறக்குமாம் .
படத்தில் காட்டியுள்ளது போல சொண்டின் மேற்ட்பகுதியில் உள்ள இரும்பே கூடுதலான உணர்திறன் கொண்டது .

European Robins, domestic chickens, and Silvereyes  போன்ற பறவைகளுக்கும் இவ்வாறான அலகே உள்ளது . 


நன்றி :- According to research by the University of Frankfurt


காகங்கள் 


காகங்கள் ஆர்க்டிக் பகுதிகளையும் தென் ஆபிரிக்க பகுதியையும் தவிர அனைத்து பகுதிகளிலும் வாழ்த்து வருகிறது . அவை தாம் வாழும் பகுதிகளுக்கு ஏற்ப்ப இசைந்து கொடுக்க கூடியவை . மனிதனுடன் ஒன்றி வாழும் இவை மனிதனின் பழக்கங்களை  உள்வாங்கி  அவற்ர்தக்கு ஏற்ப்ப நடந்து கொள்கின்றன . 


இது காகங்களின் தக்கென பிழைத்தல்  காட்டுகிறது ... அவை மனிதனுடன் ஒன்றி வாழ ஆரம்பித்து விட்டன . மஞ்சள் கடவையால் கடக்கும் காகம் .  அவற்றின் வீடியோ இணைப்பை பார்க்க கிளிக் செய்க .
http://www.ted.com/talks/joshua_klein_on_the_intelligence_of_crows.html 


யானைகள் 
யானைகள் கூட்டம் கூட்டமாகவே செல்லும் . ஆனால் இவற்றின் தும்பிக்கை விசேடமானது .அவற்றால் ஒருவித வாசனையை தூவுவதன் மூலம் அவற்றின் மூளையில் ஒரு அமைப்பை போட்டு அதன் மூலம் மற்றைய யானைகள் எங்கே என கண்டறிந்து விடும் .
நன்றி :- Research from the University of St. Andrews

Comments

Guruji said…
super

more read my blog

http://ujiladevi.blogspot.com/
எனக்குப் புதிய தகவல்கள்.
தூரத்தை அளவிடும் அளவு மயில் அல்ல மைல் எனப்படும்.
நல்ல தேடல்கள் சகோதரா வாழ்த்துக்கள்
புறாவை பற்றி எனக்கு தெரியாத தகவல்கள் நன்றி
Sweatha Sanjana said…
பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!
நன்றி உஜிலாதேவி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//எனக்குப் புதிய தகவல்கள்.
தூரத்தை அளவிடும் அளவு மயில் அல்ல மைல் எனப்படும்.//

மிக்க நன்றி ....மன்னிக்கவும் ... நன்றாக அவதானித்திருக்கிறீர்கள்.. சுட்டிகாட்டியமைக்கு நன்றி .. திருத்திவிட்டேன் ...
//ம.தி.சுதா said...
நல்ல தேடல்கள் சகோதரா வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி ...

சௌந்தர் said...
புறாவை பற்றி எனக்கு தெரியாத தகவல்கள் நன்றி///
நன்றி :))

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...