Skip to main content

Posts

மலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு

வெற்பிடை யாம் கொய்து நாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக்கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது. சுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு. ஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது. ஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடி...

மலரினும் மெலிது காமம் 08 - புதுவெள்ளம்

நீரில் நனைந்த கூந்தலை நெறிப்படுத்தி   வாரியணைத்துக்கொள்வதும், உளரிய பொற்கூந்தல் விரல்களினின்று பிழைத்து விழவிழ வாங்கி நுகர்வதும், காமமுற்றோர்(காதலுற்றோர்) செய்யும் சிருங்காரக் கலை. அந்தக் கலைக்காகவே, கூந்தல் நெளிநெளியாய்ப் நெய்யப்பட்டது போலிருக்கும். உயிரை உய்த்துணரும் நற்புணர்வின் பின்னர், வியர்வையின் கதகதப்பும் மணமும் கொள்ளும்பொழுது அது மேலும்மேலும் வனப்புக் காட்டக்கூடியது.  அதைச் சங்கத்தமிழ்க் கவிகள் அத்துணை நயமாய் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதைப் படிக்கையில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், ஆற்றங்கரை மரத்தடியில் அமர்ந்தபடி, தகிக்கும் தமிழொடு கலந்தாடி இரு காதலர் புணரும் வேளையில், ஆற்றின் மேல் நீண்டிருக்கும், அதன் கொப்புகள் சொரிந்த மலர்ப்போர்வையின்கீழே, பண்புடன் புணரும் மீனினம்போல அத்துணை குளுமை தரும். ஒரு சங்கப் பாடலில் மனதிற்கு இனிய சங்கத்தலைவியானவள் காமுற்றிருக்கிறாள். அவள் உணர்வைச் சொல்ல, சங்கக்கவி, ஆற்றுமணலை அவள் கூந்தலோடு ஒப்பிடுகிறார். ஆற்று நீரறுத்த மணல்(அறல்) எப்படி வரிவரியாக நெளிவுடன் திரண்டு அழகாய் இருக்குமோ, அப்படி இருக்கிறது அவள் கூந்த...

அம்மான் மகளே!

கஜூராஹோ சிற்பம் - காமுறுதல்  குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா குத்துவிளக்கு எரிகிற அறையில், ஒரு மிதமான வெம்மை இருக்கும். அந்த ஒளி தருகிற வெம்மை, அறையின் சுவர்களிலெல்லாம்  பட்டுத் தெறித்து, உடல்மீது அளவோடு வந்து இறங்கும். அப்படி இறங்கும் அந்த ஒளியின்  அழகுக்கு   முன்னால், தரித்திருக்கும் ஆடைகூடத் தோற்றுப்போகும். ஒளியை உடல் உடுத்திக்கொள்ள விரும்பும். காரணம், விளக்கு ஒளியில் மட்டுமே, பாதி உடலின் வடிவு இருளிலும், மீதி உடலின் வடிவு ஒளியிலும் வளைந்துகொடுக்கும் அழகைப் பார்க்கலாம். காற்றில், குத்துவிளக்கின் ஒளி கொஞ்சம்  அசைந்து துடிக்கையில், ஒளி உடலைத் துதிக்கும் அழகையும் பார்க்கலாம்.  அப்படிப்பட்ட அறையில், உறுதியான கால்களையுடைய கட்டில் இருக்கிறது. அதன்மீது, அன்னத்தின் இறகு, இலவம் பஞ்சு என ஐந்துவகை அடுக்குகளால் செய்யப்பட்ட மெத்தை இருக்கிறது. அந்தப் பஞ்சசயனத்துக்கு வெண்மை, வாசம் போல ஐந்து குணங்களும் இருக்கிறது. ...

சாக்லேட் : Kiss me, I can read your lips.

சிலகாலங்களாகத் தொலைக்காட்சிகளில் காட்பரி டெய்ரி மில்க் சாக்லேட் விளம்பரங்கள் போட்டார்கள். சமூகத்தின் விருப்பங்களை மிகவும் கவனித்துச் செய்யப்பட்ட அந்த விளம்பரங்கள், சாக்லேட் விற்பனையை மேலும் உயர்த்தியது. குறிப்பாக, குடும்ப நிகழ்வுகள், உறவுகளை வைத்து உணர்வுபூர்வமான விளம்பரங்கள் எடுத்தார்கள். "மகிழ்ச்சியை இனிப்புடன் கொண்டாடுங்கள்" என்றார்கள்.  அதேநேரம், காமம் சார்ந்த உணர்வினை வைத்தும் மிக அழகாக விளம்பரப்படுத்தினார்கள். காமம் சார்ந்த உணர்வுநிலைகளை முன்னிலைப்படுத்திய விளம்பரங்களில், இன்பத்தைத் தேடுங்கள்(Discover) என்றார்கள். குறிப்பாக, அந்தப் பாடலும் அந்தக் குரலுமே நம் செவியின் வழியாக நம் உணர்வுநிலைகளைத் தூண்டிவிடப் போதுமானது.    அந்தப் பாடலின் வரிகள், ஒவ்வொரு விளம்பரங்களிலும் சிறு சிறு மாற்றங்களோடு வந்தது. Kiss me. I can  wet  your lips. And your fingertips. And happiness in your eyes. Kiss me. Close your eyes. Miss me. முத்தாடுதல், இதழில் ஈரம் சேர்த்தல், விரல்களை உண்ணுதல் , கண்களை மூடுதல், சுவைத்தல், இன்மையை உணர்தல...

காமம்: கடவுள் பாதி; மிருகம் பாதி

Wildness in bed: A journey that heals life's deepest wounds.  Please avoid if you don't want to heal.  ' ஆ ளவந்தான்' திரைப்படத்தின் காட்சி குறித்துப் பேசும் முன்னர், அதன் பின்னணி பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். உளவியல் மற்றும் வரலாற்றுப் பின்னணியை உணராமல், அதன் அழகை இரசிக்கமுடியாது என்பதால், இவற்றைப் பற்றி அறிந்துகொள்வது அவசியமாகிறது.   செ க்ஸ் பொஸிடீவ் மூவ்மென்ட் :  இதுவொரு சமூக முன்னேற்ற அமைப்பு. இது மேற்குலகில், 1960களிலிருந்து வீறு கொண்டது. எல்லோருக்கும் காமத்தில் முழுச் சுதந்திரம் இருக்கிறது எனவும்,  வெவ்வேறுபட்ட  காம இரசனைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியது எனவும் போராடிய அமைப்பு. இது காமத்தில் ஒருவருக்கு இருக்கும் தனிமனிதச் சுதந்திரத்தை முன்னிறுத்தியது. தன்னுள் எழும் காமத்தை, ஒருவருக்குப் பூரணமாக அனுபவிக்க அனுமதி உண்டென்று முன்னின்றவர்கள் அனைவரும் அதில் சேருவர். இவர்கள் யாரிடமிருந்து விடுதலை கேட்டார்கள்? சமூகமும்(நாம்) மதங்களும் காமம் பிழையானது எனவும், அது குழந்தை பெறுவதற்காக, திருமணம் எனும் அனுமதிப்...

மலரினும் மெல்லிது காமம் 07 - ஆராக் காமம்

ஓவியம் - ஷண்முகவேல்  "காதங் காமம் ஒருக்க ஒரு தன்மை நிற்குமோ ஒல்லைச் சுருக்கமும் ஆக்கமும் சூளுறல் வையைப் பெருக்கன்றோ" காமம் ஒரு நதி அன்றோ? வேகமாகச் சுருங்கவேண்டிய இடத்தினில்  சுருங்கி, பெருகும் இடத்தில் பெருகிநிற்கும் வையையைப் (நதியைப்) போன்றது காமம். அத்தகைய அழகான காமம் என்றும் ஓரிடத்தில் நிற்குமோ? அது பெருகிக்கொண்டே போகும். தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கும். இங்கு 'ஒல்லை' என்பது அத்தனை அழகான சொல். சுருங்கிய இடத்தில் நதி வேகம் கொள்ளும் அழகை, அந்தச் சொல்லை உச்சரித்தே பார்த்துக்கொள்ளலாம். அதுபோல பெண்ணும் ஒரு நதி. பொதிகையில் தோன்றிய  தமிழ்கொண்டு, தொட்டுத்  திறக்கவேண்டிய நதி.  வாலி, இந்த அழகுக்கு இன்பம் சமைத்திருப்பார். மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை மெதுவா , மெதுவா , மெதுவா இங்கு வைகையில் வைத்திடு கை அதுபோல, தன் உறைவிடமான(பதி)  மதுரையை மறந்து உன் பெண்  மடியினில் பாய்ந்தது வைகை. ஒரு ஆற்று நீரை எப்படி வருடித் துழாவுவாயோ, அப்படி உன் கரங்கள் வந்து, மடியின்மீது மாண்போடு விழவேண்டும்.  ...

மலரினும் மெல்லிது காமம் 06 - இடஞ்சுட்டிப் பொருள் விளக்கு

"அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்  செறிதோறும் சேயிழை மாட்டு" - குறள்  புதிதாய் ஒரு விடயத்தை அறியும்போது என்ன தோன்றும்? அட, இதை இவ்வளவு நாளும் அறியாமல் விட்டோமே என்ற எண்ணம் தோன்றும். ஒரு நுண்ணழகை அறியும்போது என்ன தோன்றும்? இத்தனை நாளும் இந்தச் சாலையைக் கடக்கிறோமே, அந்த மதிற்சுவர்ப் பூவைக் கவனிக்கவில்லையே என்று தோன்றும். கவனிக்கையில், அன்று அந்தச் சாலையே புதிதாகத் தோன்றும். அப்படிச் சில அழகுகளை நின்று ஆராயத் தோன்றும். ஒரு புத்தகத்தைப் படிக்கப் படிக்க, அறியாமை விலகுவது இன்பம். அறியாமை விலகவிலக இன்னும் அறிந்துகொள்ள எவ்வளவோ இருக்கிறது எனத் தோன்றும். நுணுக்கமாக வாசிப்பவர்களுக்கு ஒற்றை வசனங்கூட மீண்டும் மீண்டும் சுவைத்தரும். அதுபோல, காமத்தை இரசிக்கத் தெரிந்தவர்க்கு அதில் நுணுக்கங்கள் பிடிபடும். அந்த நுணுக்கங்கள் அறியப் பெருக்கொண்டேபோகும். ஆசைகள் கிளைவிட்டு மலரும். அன்பு வேர்விட்டு ஊன்றிக்கொள்ளும். "ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள்" என்கிற பிரபல பழமொழி எல்லாம் புதியன தேடாதவரும், இரசிக்கத் தெரியாதவரும் சொல்லிவைத்த பழமொழி என்கிறான்...