Skip to main content

Decoupled - Netflix seriesNetflix இல் டிசம்பர் 17 வெளியான 'Decoupled' தொடர், எனக்கு மிகமிக சுவாரசியமான ஓர் அனுபவமாக அமைந்தது. இது எல்லோருக்குமான தொடர் இல்லை. எல்லோருக்கும் சரியாகப் புரியவேண்டும் என்பதோ பிடிக்கவேண்டும் என்பதோ இல்லை. எனக்குத் தனிப்பட மிகமிகப் பிடித்திருந்தது. பார்க்கும் நிமிடங்கள் சுவாரசியமாகக் கரைந்தது.

வசனங்களில் புத்திசாலித்தனத்துடனான நகைச்சுவை கலந்திருக்கிறது. Witty, Intellectual, சமூகத்தைப் பற்றியும் மனிதர்களின் நடத்தையைப் பற்றியும் அங்கங்கே வாள் போல ஆழமாய்க் கீறி அதை நகைச்சுவையால் மிகத் திறமையாகத் தழுவி மருந்திட்டிருக்கிறார்கள். மிகவும் இலேசான கதையோட்டத்துக்குள் நிறையக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

காதலித்து, சில வருடங்கள் இணைந்திருந்து பிரிதலுக்குத் தயாராகும் ஓர் எழுத்தாளருக்கும், பிஸினஸில் ஈடுபடும் பெண்ணுக்குமிடையிலான உறவினை அடிப்படையாகக் கொண்டு கதை நகர்கிறது.

இதில் எல்லாவற்றையும் critical thinking ஊடாக அணுகி, எல்லா நேரமும் பெரும்பான்மைச் சமூகத்தின் சிந்தனைக்கு ஏற்றபடி தன்னை அமைத்துக்கொள்ளாத ஓர் எழுத்தாளருக்கு அவளால் தொடர்ந்து துணையாக இருக்கமுடியவில்லை. ஆனால், இருவரும் பிரிதலைப் பற்றிப் பேசிக்கொண்டாலும் இருவருக்குமிடையில் இருக்கும் அந்த மேஜிக்கோ ஈர்ப்போ குறையவும் இல்லை. இருவருக்குமிடையில் நல்ல நட்பும் புரிதலும் ஒருவிதமான கெமிஸ்ட்ரியும் இருந்துகொண்டே இருப்பது போல இருக்கும். இந்தத் தொடரில் இருக்கும் அழகுகளில் அதுவும் ஒன்று.

சமூகத்தின் இரட்டை நிலைப்பாடுகளை, தங்களை அறியாமலேயே செய்யும் விடயங்களை மூர்க்கமாகவும், அதேநேரம் அதை புத்திசாலித்தனமான நகைச்சுவையூடாகவும் ஆங்காங்கே அணுகியிருப்பது எல்லாம் அழகு. இதையெல்லாம் நேரே கொடுத்தால் எல்லோரும் offend ஆகி தாங்கள் தாக்கப்படுவது போல உணர்வார்கள். ஆனால் அதை நகைச்சுவையூடாக கொடுக்கும்போது ஒருசிலர் அவற்றைச் சிந்திப்பார்கள்.

பணக்காரர்கள் மீது வெறுப்பு வைத்திருக்கும் ஒருவரை பணக்காரர்கள் அனுபவிக்கும் சூழலுக்குள் கொண்டு வருவது, எப்போதும் துக்கமான சூழலில் இருக்க விரும்புபவர்களை சீண்டுவது, தேச பக்தர்களை நையாண்டி செய்வது, நடைமுறையில் எதையும் பின்பற்றாமல் புரட்சி செய்பவர்களை சீண்டுவது என்று ஏராளம் உண்டு.

ஆகமொத்தம் தரமான, புத்திசாலித்தனமான நகைச்சுவையினை, உறவுகளின் போக்கினை, ஓர் எழுத்தாளருக்கும் பிசினஸில் ஈடுபடும் பெண்ணுக்கும், ஒரு கணவனுக்கும் மனைவிக்கும், ஒரு ரசிகைக்கும் எழுத்தாளனுக்கும், பிசினஸ் துணைகளுக்கும் இடையிலான காதலினை மகிழ்ச்சி தரும் அனுபவமாகப் பார்க்கலாம்.

 

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

மனித மனம் ,உயிர் -ஈகோ, சூப்பர் ஈகோ , இட்- சிக்மன் புரோயிட்

மனித அறிவின் அசுர பரிணாம  வளர்ச்சியில் விஞ்ஞானம் பல புராண கட்டுக்கதைகளையும் பல நம்பிக்கைகளையும் உடைத்தெறிந்து அனைத்திற்கும் காரணம் தேடும் பயணத்தில் நேரம் எனும் பாதையில் செல்கிறது . மனோதத்துவம் பல வகைகளில் விஞ்ஞானத்தோடு ,விஞ்ஞானத்தில் ஒரு பெரும் பகுதியாக செயல்ப்படுகிறது  என்றால் மிகையாகாது .  சீனாவில்  சீ  எனவும் இந்தியாவில்  பிராணா  எனவும் மேற்கில்  soul  எனவும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலானவர்கள் இறை நம்பிக்கையில் உள்ளவர்கள். ஆனால் அதற்க்கு எந்தவித விஞ்ஞான ஆதாரமோ இதுவரை கிடையாது . ஆனால் இப்போது சமயங்கள் நிறுவனங்கள் வேறு விதமாக கதையை மாற்றுகின்றன . அதாவது பிழைப்பு தொடர்ந்து நடக்க மனோதத்துவத்திற்கு மாறி விட்டன .உள்ளிருந்து இயக்கும் மனசாட்சி இறைவன் என்கிறார்கள் .  உயிர் ,மனது ,மரணம்,பயம்  இது மூன்றும் இறை நம்பிக்கையை தூண்டுவன . ஆனால் உயிர் ,மனது,மனசாட்சி போன்றன இருக்கின்றனவா ?  இது தான் விடயம் .......  முன்னர் ஒரு தனிமனிதனுக்கு ஏற்ப்படும் மனோதத்துவ  பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முயற்ச்சிகள் வேறு விதமாகவே நடந்தது . அவர்களை தனிமையில் வைப்பது ,இருட்டில் வைத்திருப்பது போன்றன . ஆனால்  சிக்மன்

நடுநிசி நாய்கள் - வீராவின் பக்கங்கள்

முதலில் பாலியல் தெளிவூட்டும் இப்படி மன பக்குவம் அடைந்தவர்களுக்கான(18 +) படங்கள் எடுப்பதற்கு தைரியம் வேண்டும்.அதுவும் முக்கியமாக எமது சமுதாயம் இன்னும் பகுத்தறிவு ,மனப்பக்குவம் அடையாத நிலையில் .ஆனாலும் கவுதம் தெளிவாக சொல்லியிருக்கிறார் பக்குவநிலையை அடைந்தவர்களுக்கான படம் என்று . பலரின் தவறான புரிதலுக்கு உள்ளான ஆரம்ப கதையின் சுருக்கம் . சிறுவயதிலிருந்தே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் வீராவிடம் சில வருடங்கள்  கழித்து இளம் பராயத்தில் ஏற்ப்படும் மனோநிலை மாற்றமே பல பிரச்சனைகளுக்கு வழிகோலுவதுடன் வாழ்க்கையையும் புரட்டிப்போடுகிறது . சிறுவயதில் தாயை இழந்து ,தனது தந்தையால் பாலியல் வன்புணர்ச்சிக்கு,துஷ்பிரயோகத்திற்கு  உட்படுத்தப்படும் சமீரிட்க்கு(வீராவுக்கு அல்ல ) அவனது பதின்ம வயதில் (Teenage (13 )) அவன் மீது அக்கறை செலுத்தும் பக்கத்து வீட்டு பெண் மீனாட்சி என்பவருடன் பார்த்தவுடனேயே காதல் ஏற்ப்படுகிறது . இந்த கொடுமைகளை தெரிந்துகொண்ட மீனாட்சி சமீரை காப்பாற்றி தன்னுடன் வைத்துக்கொள்கிறார் .சமீரின் பெயரை வீரா எனவும் மாற்றி அவனை வளர்ந்தார் .வீராவும் மீனாட்சி அம்மா என்று அழைக்க வீரா மீனாட