Skip to main content

Iron dome : இஸ்ரேலின் இரும்புப் பாதுகாப்பு

ஏவுகணைகளுக்கு எதிராக Iron dome 


இஸ்ரேலின் தாக்குதலில், பாலஸ்தீனியர்கள் பலர் கொல்லப்பட்ட செய்திகளை எல்லாம் பார்த்திருப்போம். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனின் ஹமாஸ் ராணுவம் 1000-2000 வரையான ஏவுகணைகளை இஸ்ரேலிய குடியிருப்பு பகுதிகள் மீது ஏவியது. 

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலிய மக்களின் குடியிருப்பு பகுதியில், நகரப் பகுதியில், எச்சரிக்கை மணி ஒலிக்க ஆரம்பித்தது. இஸ்ரேலிய மக்கள் சிலர்  வானவேடிக்கை பார்ப்பது போல வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! ஹமாஸ் ஏவிய பெரும்பாலான ஏவுகணைகள் தரையைத் தொடாமல்  வானத்திலேயே வெடித்துக் கொண்டிருந்தது!  



இத்தனைக்கும், Iron dome எனப்படும் இஸ்ரேலின் இரும்புப் பாதுகாப்புக் கேடயம் தங்களைப் பாதுகாக்கிறது என்று மக்களுக்கு நம்பிக்கை. அதென்ன Iron dome! 

யூதர்களின் உழைப்பைப் போல, நாட்டுப் பற்றைப் போல, விவசாயம் முதல் போர் வரை தொழிநுட்பங்களுக்கும் பெயர் போனது யூதர்களின் இஸ்ரேல். வறண்ட நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள். கூகிள் முதலான நிறுவனங்களுக்கு மொபைல்  ஜிபிஎஸ் Navigation சிஸ்டங்களை பில்லியன் டாலர்களில் எல்லாம் விற்றிருக்கிறார்கள். சுற்றி இஸ்லாமிய நாடுகள் இருந்தும் தங்கள் பாதுகாப்பை அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்து உறுதிப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இத்தனைக்கும் உலகெங்கும் சிதறி வாழ்ந்த யூதர்கள், மீண்டும்  ஓரிடத்தில் இணைந்து தங்களுக்கெனக் கட்டியமைத்த புதிய நாடு.   

இப்படித்தான் ஒருமுறை 2006 இல் லெபனானிலிருந்து ஹிஸ்புல்லா அமைப்பு ஏவிய ஏவுகணைகளால் இஸ்ரேலுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டது. உடனே, 2007 இலிருந்து, தங்கள் நகரத்தைப் பாதுகாக்க,  Iron dome இல் வேலைசெய்ய ஆரம்பித்தது இஸ்ரேல். எவ்வகையான பிரச்சனை என்றாலும் உடனே பாடம் கற்றுக்கொள்ளும் இஸ்ரேல், 2011 இல் Iron dome இனைக் கொண்டுவந்தது. இஸ்ரேலின் ராஃபேல் அட்வான்ஸ்ட் டிஃபன்ஸ் சிஸ்டம் இதைத் தயாரித்தது. இற்றை வரைக்கும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை தாக்கி அழித்திருக்கிறது இந்த Iron dome. உலகிலேயே குறுகிய தூர ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கக்கூடிய சிறந்த சிஸ்டம் இது என்று சொல்கிறார்கள். 

Image Courtesy : Rafael Advanced Defense Systems Ltd


1. முதலில் ராடார் மூலம் ஏவுகணைகளைக் கண்டறிகிறது. 

2. அதன் பின்னர், இந்த ஏவுகணை எந்த இடத்தை இலக்குவைத்து வருகிறது என்று தனது அல்கோரிதங்களை வைத்து விரைவாக ஆராய்கிறது. குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வருகிறதா? முக்கியமான நிலையங்களை நோக்கி வருகிறதா என்று ஆராய்கிறது. முக்கியமில்லாத இடங்களுக்குச் செல்லும் ஏவுகணைகளைத் தவிர்த்துவிடுகிறது. தாக்கவேண்டிய ஏவுகணைகளை இலக்கு வைக்கிறது.

3. அதன் பின்னர், தாக்கப்படவேண்டிய ஏவுகணைகளை நோக்கி எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவுகிறது. 




இதன் பாதுகாப்பு மற்றும் வேலைசெய்யும் திறன் கிட்டத்தட்ட 80-90% வரை உறுதிப்படுத்தப்பட்டது. ஆனாலும் ஹமாஸ், இதன் பாதுகாப்புத்திறனை தொடர்ந்து பரிசோதித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதன் செயற்பாட்டுத் திறனிலிருக்கும் பிழையைக் கண்டுபிடிக்க ஹமாஸ் தொடர்ந்து 1000-2000 வரையிலான ஏவுகணைகளை ஏவிக்கொண்டுதான் இருக்கிறது. 

Comments

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...