ராதாவுக்கு கவிதைகளென்றால் அவ்வளவு பிடித்தம். ஒன்றைப் பிடிக்கிறதென்றால், அதை ஏன் பிடிக்கிறது என அவளுக்குள்ளேயே ஒரு கேள்வி கேட்டுக்கொள்வாள். ஆதலால், தனக்குப் பிடிக்கிற விஷயங்கள் மீது, அவளுக்கு ஓர் ஆழ்ந்த புரிதல் இருந்தது. அதனால் அவளால் ஒன்றில் தனித்து இலயிக்க முடிந்தது. அவளுடைய இந்த இலயிப்பையும் புரிதலையும், அவசர உலக மாந்தர்களால் உடைக்க முடியாமல் போகிறபொழுது, ஒருவித எரிச்சலையும், கோபத்தையும், அவள் மீது வளர்த்துக்கொண்டார்கள். அவள் அதைப் பொருட்படுத்தவில்லை.
கவிதையென்பது, ஓர் உயிர் தன்னுள் தான் மூழ்கி, தன் உயிரின் வடிவங்களில் ஓர் அழகினையும், ஒழுங்கினையும் கண்டு தெளிந்து, அதை மொழியில் வார்த்து, மீண்டும் விழுங்கிக்கொள்ளும் வளமான செயலென்று கருதுவாள். கவிதைக்கு, வடிவம் ஒன்று இல்லையென்றும், மனதில் ஆசைப்பெருக்கம் செய்யும் அத்துணை அழகையும் கவிதையென்றும் நம்பினாள். அவளுக்கு அவை, பண்டைய மொழிபோல, படவெழுத்துக்களால் ஆனவையாக இருந்தால் மேலும் மகிழ்ச்சி. அந்தப் படவெழுத்துக்களால் கண்ணன் அவளைப் புனையும் பொழுதெல்லாம், கண்களை மூடிக்கொண்டு அந்தக் காட்சியாகிக் கரைந்து போவாள். இப்படி அவள், எதில் எதிலெல்லாம் போதை கொள்வாள் எனும் இரகசியம் கண்ணனுக்குத் தெரியும்.
ஒருநாள், நிலவு வாய்ப்பாக விழும் யமுனா நதியோரத்தில், மீனழகு அசையத் துளும்பும் நதிநீரில், தன் முன் கூந்தல் சரிவும், கழுத்து ஆபரணமும், விழுந்து நெளியும் அழகினைக் கண்டு சொக்கியவள், கண்ணில் ஊஞ்சலாடியிருந்தாள். அசையாப் பொருட்கள், அசையும் பொருள் மீது விழுந்து, தன்னழகைப் பாராட்டும் நாடகத்தை இரசித்திருந்தாள்.
அந்நேரம், நல்ல களவொழுக்கம் செய்யும் கண்ணன் வந்தான். அன்று கலாபத்தினால், அவள் உரோமப் புறவொழுக்கம் மீது அவன் வருடவில்லை. நெருங்கியவன், புறத்தால் சென்று சிறு தீப்பந்தம் ஏற்றி வந்து, நீரில் விழுந்த அவள் நிலவின் தண்மை அருகில், சிறு அழல் தெரியும் வண்ணம் அதை உயர்த்திப் பிடித்திருந்தான். அவள் கனவொழுக்கம் மீது தன் மனப் பார்வையை வைத்துப் பார்த்தான். அசையும் அழல், அசையாக் கருவிழி மீது நிகழ்த்தும் நாடகத்தை அவன் இரசித்திருந்தான். அன்று அவள் நிலவும், அவன் நெருப்பும், வாய்மொழி எதுவும் சொல்லாமல், ஒரு புரிதலில் இயங்கிய கவிதையின் இரகசியத்தை யார் அறிவர்!

Comments