Skip to main content

சாக்லேட் : Kiss me, I can read your lips.



சிலகாலங்களாகத் தொலைக்காட்சிகளில் காட்பரி டெய்ரி மில்க் சாக்லேட் விளம்பரங்கள் போட்டார்கள். சமூகத்தின் விருப்பங்களை மிகவும் கவனித்துச் செய்யப்பட்ட அந்த விளம்பரங்கள், சாக்லேட் விற்பனையை மேலும் உயர்த்தியது. குறிப்பாக, குடும்ப நிகழ்வுகள், உறவுகளை வைத்து உணர்வுபூர்வமான விளம்பரங்கள் எடுத்தார்கள். "மகிழ்ச்சியை இனிப்புடன் கொண்டாடுங்கள்" என்றார்கள். 

அதேநேரம், காமம் சார்ந்த உணர்வினை வைத்தும் மிக அழகாக விளம்பரப்படுத்தினார்கள். காமம் சார்ந்த உணர்வுநிலைகளை முன்னிலைப்படுத்திய விளம்பரங்களில், இன்பத்தைத் தேடுங்கள்(Discover) என்றார்கள். குறிப்பாக, அந்தப் பாடலும் அந்தக் குரலுமே நம் செவியின் வழியாக நம் உணர்வுநிலைகளைத் தூண்டிவிடப் போதுமானது.   

அந்தப் பாடலின் வரிகள், ஒவ்வொரு விளம்பரங்களிலும் சிறு சிறு மாற்றங்களோடு வந்தது.

Kiss me. I can wet your lips. And your fingertips. And happiness in your eyes. Kiss me. Close your eyes. Miss me.

முத்தாடுதல், இதழில் ஈரம் சேர்த்தல், விரல்களை உண்ணுதல் , கண்களை மூடுதல், சுவைத்தல், இன்மையை உணர்தல், மீண்டும் முத்தாடுதல் என்று திரும்பத் திரும்ப வந்து தழுவும் வார்த்தைகள்கொண்டு நெய்திருப்பார்கள்.

Kiss me, I can read your lips, on your fingertips, I can feel your smile, come on my lips.  Miss me. 

பெரும்பாலும் சாக்லேட்டில் இருக்கும் மென்மையைத்தான் எல்லோருக்கும் காதலிப்பார்கள். அதன் சில்க் தன்மையை, 'Rich smooth and creamy' என்றார்கள். அது இதழுக்குத் தரும் இன்பத்தை, மேலும் (silk now bubbled up for joy) கூட்டினார்கள். 

சாக்லேட் என்று மட்டுமல்ல, Magnum ஐஸ்கிரீம்க்கும், 'Magnum temptation' என்று விளம்பரப்படுத்தினார்கள். இன்பத்தை நுகர விரும்புபவர்களுக்கு (For pleasure seekers) ஒருவித வாய்வழி இன்பத்தையும், அது தரக்கூடிய தூண்டலையும்  காட்சிப்படுத்தினார்கள். கொஞ்சம் வன்மையான தன்மையை(crunch) உடைத்தபிறகு, உள்ளே கிரீம்போன்ற ஈர உணர்வைச் சுவைப்பதை நாம் விரும்புகிறோம். வாய்வழி playfulness இனையும், உண்டபின்பு அது தூண்டும் அதீத உணர்வுநிலைகளையும்(euphoria) காட்சிப்படுத்தினார்கள். Never stop playing....



உதாரணமாக, Ferero roucher சொக்கலேட்டைப் பெரும்பாலும் எல்லோருக்கும் பிடிக்கும். இதுவரையில் பார்த்திராவிட்டால், அடுத்தமுறை சூப்பர் மார்க்கெட் போகும்போது வாங்கிப் பாருங்கள். கொஞ்சம் விலை அதிகம். வெளியில் தங்க நிறப் பேப்பரால் சுற்றியிருக்கும். சிப்பிக்குள் தங்க முத்துப்போல வெளித்தோற்றம். அந்தப் பேப்பரைத் திறந்தால், உள்ளே கோதுபோல(wafer) ஓர் அடுக்கு இருக்கும். அதில், 'hazelnut'களை துண்டுகளாக உடைத்து, சொக்கலேட்டோடு கலந்து ஊற்றியிருப்பார்கள். அதை உடைத்தால், உள்ளே இன்னுமொரு மில்க் சாக்லேட் உருண்டை இருக்கும். அதையும் திறந்தால், உள்ளே அந்த 'hazelnut' சின்ன உருண்டையாக இருக்கும். அதைக் கடிக்கும்போது ஒருவிதமான நெருக்கும் உணர்வு ஏற்படும். 

வெளி உறையை மட்டும் அகற்றிவிட்டு அப்படியே வைத்துக் கடித்தால் அதற்குச் சுவை அதிகம். காரணம், நாக்கு ஒவ்வொரு லேயராக சிறுகச் சிறுக உணர்ந்து சுவைக்கும். இந்த மறைப்பும், இந்த உடைப்பும் அந்தச் சுவையை இன்னும் உயர்த்தும். அந்த waferஐ, பற்களால் உடைக்கும்பொழுது ஒருவித வாய்வழி இன்பம்(oral) கிடைக்கும். அந்த மில்க் சாக்லேட் உள்ளே நாவுக்கு இன்பம். பிறகு மீண்டும், உள்ளே இருக்கும் உருண்டையான hazelnut பற்களுக்கு இன்பம். கொஞ்சம் மென்மையான தன்மையும் கடினமான தன்மையும் பற்களுக்குக் கிடைக்கும். ஆகையால், இதைச்  சாப்பிடுபவர்களின் சென்ஸரி நியூரோன்களுக்கு மோட்சம்தான்.

உண்மையில், இதன் வெளியில் சுற்றியிருக்கும்(wafer) லேயரை உருண்டை வடிவில் வளைத்தெடுக்கவே அப்போது ஐந்து வருடங்களாகி இருக்கிறது. அதற்குரிய தொழிநுட்பம் கண்டுபிடிக்க அத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அதற்குப் பிறகுதான் மார்கெட்டுக்கு வந்தது. அத்தனை சிரமப்பட்டு அதை உருவாக்கக் காரணம் இருக்கிறது. இந்த ஐந்தடுக்கு நட்சத்திர விடுதிகள் எங்கும், food garnishing(உணவு வடிவமைப்பு) செய்திருப்பார்கள். வீட்டிலேயே வாசத்துக்கு இலைகள் போடுவோம். உணவு நம் அடிப்படைத் தேவையென்று எதையோ சமைத்தோம் சாப்பிட்டோம் என்றில்லை. அவற்றை மேலும் மேலும் அழகாக்குகிறோம். இரசனைக்குரியதாக்குகிறோம். அந்த இரசனை நமக்கு உணவின் சுவையைக் கூட்டுகிறது. உணவு உண்மையில் கண்களை முதலில் தாக்குகிறது. இதை அறிந்துதான் இத்தனை ஜோடிப்புகள். அழகை உண்கிறோம். கேஎப்ஸி சிக்கன் மீதிருக்கும் கிரிஸ்பிபோல, ferero roucher கிரிஸ்பி பிடிக்கிறது.

உண்ண முதலே, டார்க் சாக்லேட் (Dark fantasy) நிறமும் மில்க் சாக்லேட் நிறமும் பார்வையின்மூலம்  வேறுவேறு உணர்வுநிலைகளைத் தூண்டக்கூடியது. சாக்லேட், காமத்தின்போது தூண்டப்படும் உணர்வுநிலைகளைத் (சென்ஸரி நியூரான்கள்) செயற்படுத்தக்கூடியது. குறிப்பாகக் காதலர்தினத்துக்கு சாக்லேட் விளம்பரங்களில் அதிக கவனம் செலுத்தப்படுவது உண்டு. அவை, நமக்குத் தெரியாமலேயே நம்முடைய காமத்துக்கான இன்பத்தை தரக்கூடியது.  

காமத்தைக்  காதல் கொண்டு ஜோடித்தோம். அந்தக் காதலையும் காமத்தையும், கவிதைகள், கலைகள் கொண்டு ஜோடிக்கிறோம். உணர்வுகளின் பரிணாமம் அழகான அடுக்குகளைத் தருகிறது. அதன் மூலம் இரசித்து இரசித்து அந்த உணர்வுகளுக்கு மேலும் மேலும் சுவை கூட்டுகிறோம். காமத்தையும் உணவுகளையும் இன்னும் சுவைத்து உண்கிறோம். ஜோடிப்புகள், லேயர்கள் எல்லாம் வைத்து வைத்து, இரசனைகளால் உலகை மேலும் மேலும் அழகாக்கிச்  சுவைக்கிறோம்.

Comments

Anonymous said…
A complete pleasure of chocolates post man 😘

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ