Skip to main content

கடவுளின் கையில் இருந்த ஈர்ப்பு அலைகள்!

11.2.2016 அன்று மனித வரலாற்றில் ஒரு மகத்தான கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஐங்ஸ்டைனின் ஈர்ப்பு அலைகளை நவீனத் தொழில்நுட்பத்தால் கண்டறிய முடிந்திருக்கிறது. ஐங்ஸ்டைன் தனது கோட்பாடுகளை முன்வைத்தபோது நிறையவே எதிர்ப்புகள் வந்தது . காரணம், அது மற்றவர்களின் சிந்தனைக்கு எட்டாமல் இருந்தது. அவர்களுக்கு ஒரு 'கிரியேட்டர்' என்பவர் சௌகரியமாகத் தோன்றினார். 

ஒரு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் போகலாம். ஈர்ப்புச் சக்தி இருக்கிறது என்பதை நியூட்டன் அப்போது நிரூபித்தார். ஆனால், அது எப்படி வேலை செய்கிறது என்பது நியூட்டனுக்குத் தெரியவில்லை. தெரியாத ஒன்றுக்கு 'கடவுள்' என்று பெயர்வைப்பது தானே வழக்கம். அவர், ஈர்ப்புச் சக்தியைப் பற்றி பென்ட்லிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், ஈர்ப்புச் சக்தியானது ஒருவித கிரியேட்டரினால் நிகழ்த்தப்படுகிறது என்கிற மாதிரியாக எழுதுகிறார். நியூட்டனுக்கு ஒரு கிரியேட்டர் தேவைப்பட்டது.

அதேநேரம், கிறிஸ்தவ அமைப்பின் உயர்பீடத்தின் கொள்கைகளை பென்ட்லி நிறைவேற்றி வருகிறார். கடவுள் மறுப்புக் கொள்கையை வெளியிடுபவர்களுக்கு எதிராக நியூட்டனின் இயற்பியலைப் பயன்படுத்துகிறார். நியூட்டனும் அதனை மேலும் வலுப்படுத்தும்படி அவருக்குக் கடிதங்கள் எழுதுகிறார். அப்படியே நேரமும் நிலையானது என்று சொல்லிவைத்தார் நியூட்டன். 

கிட்டத்தட்ட 200 வருடங்களாக,  ஈர்ப்புச் சக்தியானது கடவுளின் கையில் இருந்து வந்தது. நூறு வருடங்களுக்கு முன்னர், தனது சார்புக் கோட்பாட்டின் மூலம் அதனைக்  கடவுளின் கையிலிருந்து பறித்தெடுத்தவர் ஐங்ஸ்டைன். ஐங்ஸ்டைன் அதனை வெளியிட்டபோது யாருக்குமே புரியவில்லை. நீளம்,  அகலம், உயரம் என்கிற முப்பரிமாணங்களோடு நேரம் என்கிற நான்காவது பரிமாணத்தையும் இணைத்து 'காலவெளி'யை அறிமுகப்படுத்தினார். திணிவானது இந்தக் காலவெளியை வளைக்கும் என்றார்.



இதனாலேயே ஈர்ப்பு விசை இருப்பதாகத் தோன்றுகிறது என்றார். அதிக திணிவு என்றால் அதிகமான ஈர்ப்பு விசை இருக்கும். பூமியை  விட சூரியனின் திணிவு அதிகம். ஆகையால்  சூரியனில் ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும். ஈர்ப்பு விசை அதிகமாக நேரமும் மெதுவாகச் செல்லும். 

இந்த ஈர்ப்பு அலைகளை எளிதில் அவதானித்துவிட முடியாது. அதனாலேயே நீண்ட காலமாக இது அவதானிக்கப்படாமல் இருந்தது. அதற்கு பிரபஞ்சத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழவேண்டும்.  அப்படியொரு நிகழ்ச்சி பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் நிகழ்ந்திருக்கிறது. 


சூரியனைவிட, கருந்துகளைகளின் திணிவு பன்மடங்கு அதிகமானது. கருந்துகளைகளின் ஈர்ப்பிலிருந்து ஒளிகூடத் தப்பிக்க முடியாது. இரண்டு கருந்துகளைகள் ஒன்றையொன்று மோதிக்கொண்டால் விளைவு எப்படி என்பதை ஊகிக்கமுடிகிறதா!. அப்போது உருவாக்கப்பட்ட அலைகளின் அசைவையே தொழில்நுட்பம் கொண்டு கண்டறிந்திருக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தின் அத்தனை செயற்பாடுகளுக்குமான விளக்கத்தைக்  கண்டறிவதே ஐங்ஸ்டைனின் கனவாக இருந்தது. இந்தக் கண்டுபிடிப்புகள் அதற்கு வழிவகுக்கும் என நம்பலாம்.

Comments

Popular posts from this blog

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

ஸ்கொட்லாந்தில் நிக்கோலா ஸ்டெர்ஜன் வெற்றி! அவர்களுடைய தேர்தல் முறை எப்படி வேலை செய்கிறது?

ஸ்கொட்லாந்து தேர்தலில் SNP எனப்படுகிற ஸ்கொட்லாந்து தேசிய கட்சி, தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறது. பாராளுமன்றத்தில், 129 இல் 64 இடங்களைப் பெற்றிருக்கிறது.  2016ம் ஆண்டுத் தேர்தலில் பெற்றதை விடவும் இந்தமுறை  ஒரு இடம் அதிகமாகப் பெற்றிருந்தாலும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விடவும் ஒரு இடம் குறைவாகப் பெற்றிருக்கிறது.  ஸ்கொட்லாந்தின் தேர்தல் முறை எந்த ஒரு கட்சியும் இலகுவில் பெரும்பான்மையைப் பெற்றுவிட முடியாதபடி அமைக்கப்பட்டது. எல்லாக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் இணைந்து மக்களுக்காக வேலை செய்யவேண்டும் என்கிற வகையில் அமைக்கப்பட்டது.  ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் மொத்தம் 129 இடங்கள். ஆனால் மொத்தத்  தொகுதிகளோ வெறும் 73 தான்! அப்படியானால் மிகுதி உறுப்பினர்களை எப்படித் தெரிவு செய்கிறார்கள்?   வாக்குச் செலுத்தும்போது இரண்டு நிறங்களில் வாக்குச்சீட்டு வழங்கப்படும். ஒன்று, ஊதா நிறத்தில் உள்ள படிவத்தில் உங்கள் தொகுதியில் உங்களுக்குப் பிடித்த உறுப்பினரைத் தெரிவு செய்யலாம். இன்னொன்று, peach நிறத்தில்...