Skip to main content

தேரழகு !

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை, நல்லூர்க் கந்தனின்  தேர்த்திருவிழாக் காலம்  என்பது ஒரு மிகப்பிரமாண்டமான கொண்டாட்டக் காலம். யாழ்ப்பாணச் சமூகத்தின் பிரதான கலாச்சார விழாவாகவே ஆகிவிட்டது என்றுகூடச்  சொல்லலாம். கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் திருவிழாவானது,  மொத்தமாக  27 நாட்கள் இடம்பெற்று, வைரவர் உற்சவத்துடன் நிறைவுபெறும். இன்றுவரை சரியான ஆகம விதிமுறைகளின்படி இடம்பெறும் தேர்த்திருவிழா இதுவென்றும்  சொல்லலாம். 

தேரன்று, வெளிக்கடைகள் மற்றும் தனியார் அலுவலகங்கள்  என அனைத்தும் மூடப்பட்டு, ஒரு விடுமுறை தினம்போலவே காட்சியளித்தது. கோயிலிலிருந்து குறிப்பிட்ட அளவு தூரத்திலேயே வாகனங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கோயிலைச் சுற்றியுள்ள வீதியெங்கும் தண்ணீர்ப் பந்தல்கள் நிறுவப்பட்டிருந்ததோடு, எங்குபோனாலும் பக்திப் பாடல்கள்தான் காதுகளில் கேட்டவண்ணம் இருந்தது. கோயிலுக்குச் செல்லும் வீதியில், கலாச்சார ஆடைகளுடன் வரும்படி அறிவுறுத்தும்  பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் கலாச்சார ஆடைகளுடன் கோயிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். முருகன் தேர் ஏறியதை மட்டும் பார்த்துவிட்டு ஒருசிலர் வெளியேறிக்கொண்டிருந்தார்கள்.  பக்கத்தில் வீடிருப்பவர்கள் தேர் கோயிலைச் சுற்றி முடிப்பதற்குள் மீண்டும் வந்துவிடலாம் என்று செல்வதுண்டு. மக்கள் கூட்டம் வருவதும் போவதுமாக இருந்தாலும், கோயிலைச் சுற்றியுள்ள பிரம்மாண்டமான மக்கள் திரள் மட்டும் கால் வைக்க இடமின்றி அப்பிடியே இருந்தது. இப்படியாக, எல்லா மனித இயக்கங்களும் தேர்த்திருவிழாவை மையப்படுத்தியே இயங்கிக்கொண்டிருந்தது.


காலை ஏழு மணிக்கெல்லாம் முருகன் தேரேறிவிட, பெருந்திரளான மக்களும் அப்போதுதான் வந்துகொண்டிருந்தார்கள். எப்போதுமே தேரைச் சுற்றி இயங்கும்  மக்கள் கூட்டம், 'அரோகரா' என்று சொல்லிகொண்டே வடம் பிடித்து இழுக்கிற இளைஞர் கூட்டம், கலாச்சார ஆடைகளில் நிறைந்திருக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள், தேருக்கு முன்னால் வரும்  காண்டாமணி ஓசை, முரசின் ஒலி,   தேருக்குப் பின்னால் பஜனை பாடிச் செல்லுபவர்கள், அசையும் தேரின் சிறுமணியோசை, குழந்தைகளைத் தன் தோள்மீது இருத்திவைத்துக்கொண்டு தேர் காட்டும் அப்பாக்கள்  என்று எல்லாமே ஒரு தேரின் அழகினைத் தீர்மானிக்கிறது. வடம் பிடித்து இழுக்கும்போது, தேரானது மக்கள் கூட்டத்தில் மிக மெதுவாக அசையும் அழகினை வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாது. தேரானது புதிதாகக் கட்டப்பட்ட வடக்கு வாசலைக்  கடக்கும்போது கோபுரத்திலிருந்து தாமரை இதழ்கள்  கொட்டப்பட்டது. கோயிலைச் சுற்றித் தேர் செல்லும் வீதியெங்கும் மணலால் நிரப்பப்பட்டு இருந்தது. தேர்  கோயிலைச் சுற்றி முடிந்ததும் கோயில் மணலில் இருந்து கதை பேசுகிற மக்கள் அழகு. குழந்தைகள், மணலில் கூம்பு வடிவம் அமைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒருசிலர் திருவிழாக் கடைகளை நோக்கி நகர்ந்துவிட்டனர்.



கோயில் வீதிக்கு வெளியே திருவிழாக் கடைகளுக்கென்று தனியான ஒருபகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அவற்றைக் கடக்கும்போது சிறுவயது நினைவுகள் வந்துபோவதைத் தடுக்கமுடியாது. திருவிழாக்கடைகள் என்றால் வளர்ந்தவர்களுக்கு வேண்டுமானால் அதிகளவு முக்கியமில்லாத பகுதியாகத் தோன்றலாம். ஆனால் சிறுவர்களைப் பொறுத்தவரை முழுத் திருவிழாவுமே அதுதான். 


Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...

மதன் கார்க்கி வரிகளின் ரசிகனாய் - 180 பாடல் வரிகள்

பாடல்கள் என்றால் முதலில் அதில் வரிகளை உன்னிப்பாக ரசிப்பவன் நான் . வரியோடு சேரும் போது தான் அதில் உயிரோட்டம் இருக்கும் . இதற்க்கு ஒரு காரணம் வைர வரிகளின் சொந்தகாரர் வைரமுத்து அல்லது  வரிகளிலேயே  இசை கொண்டுவரும் கண்ணதாசனின் வரிகளாகவும் இருக்கலாம் . எல்லாவற்றையும் விட தமிழின் அழகை உணருவது மிக முக்கிய காரணமாக இருக்கலாம் . ஆனால் அழகான தமிழ் சொற்களை கொண்டலாய்( :-) ) பொழியும்  மதன் கார்கியின்  மீதான ஈர்ப்பே இரும்பிலே ஒரு இருதயத்தில் இருந்து தொடர்கிறது  . புதிய படமான  180 இல் மதனின் பாடல் வரிகளை மிகவும் எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்ப்பை சற்றும் குறைக்கவில்லை .முன்னைய கார்கியின் வரிகளுக்கான  பதிவு .. முதலில் ரசித்த பாடல் ..... சந்திக்காத கண்களில் .... -பாடலை  கேட்க்க சந்திக்காத கண்களில் இன்பங்கள்  செய்ய போகிறேன்  சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்  பெய்யப்போகிறேன் ... குவியமில்லாவுக்கு பிறகு ஈர்த்த சொல் கொண்டலாய் . கொண்டலாய் என்றால் மேகம்  . சிந்திக்காது சிந்திடும் மேகம் .அழிந்து வரும் அழகான சொற்கள் அறிம...