திருமணமாகிக் கிட்டத்தட்ட நான்கரை நாட்கள் நகர்ந்திருக்கும். இன்றைய அதிகாலைப்பொழுதுவரை கணக்கில் எடுத்துக்கொண்டால் என் கணிப்புச் சரியாக இருக்கும். இருளும் ஒளியும் கலவி கொள்ளும் விடிந்தும் விடியாத பொழுது அது. காற்று அல்ல, என் தலையை அவள்தான் கோதுகிறாள். மூச்சுக்காற்று என்னவோ நெஞ்சில்த்தான் பட்டுப் படர்ந்துகொண்டிருந்தது. அதோடு அவள் விரல் வருடும் சுகமும் பிடித்திருந்தது. இன்னும் கொஞ்சம் வருடட்டுமே என்றுதான் மெதுவாகக் கண் விழித்தேன்.
நான் அவளை மட்டும்தான் பார்த்துக்கொண்டிருந்தேன். நெருங்க நெருங்க வரும் பிரிவு பயம் வந்துவிட்டாலே இப்படிக் கேள்விகள் வரும். எவ்வளவு ஏக்கம், அன்பு, காதல் இருந்திருந்தால் அவளிடமிருந்து இப்படியொரு கேள்வி வந்திருக்கும்! காமம் தீர்ந்ததும் காதலும் தீர்ந்துவிடுமா என்கிற ஏக்கத்தில் வந்திருக்கவேண்டும். வேளைக்கு எழுந்துகொள்ளவேண்டும். நாளை முதல் நிறைய வேலை இருக்கிறது. முதலில் அவள் பயத்தைப் போக்கவேண்டும்.
Comments