தமிழ்மொழியை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்வது பற்றி எழுத்தாளர் சுஜாதா அவர்கள் பகிர்ந்துகொண்ட ஆக்கபூர்வாமான செயற்திட்டங்கள் பல உண்டு.
அவற்றில் அவர் கலைச்சொற்களின் முக்கியத்துவம் பற்றி பகிர்ந்த சில விடயங்களை பகிர்கிறேன்..
'களஞ்சியம்' இதழில் முனைவர் ப.அர நக்கீரன் கட்டுரைகள் போன்றவை நமக்கு அதிகம் தேவை. மாட்டு வண்டியின் பல உறுப்புகளை குறிப்பிடும் கலைச் சொற்களை ஆராய்ந்திருக்கிறார்.இந்தச் சொற்கள் பண்டிதர்கள் யாரும் உட்காராமல் இயல்பாக, தேவை ஏற்பட்டு அமைந்தவை.
நுகத்தடி , பூட்டுத்துளை ,சுள்ளாணி ,முகமுட்டு ,பார்/பார்பட்டை கோணாவட்டம் ,மையக்கட்டை ,சக்கரம்,உழல்வாய் (குடத்தில் உள்ள உராய்வினால் தேய்ந்து விரிவடையாமல் இருக்கப் பயன்படும் இரும்பினால் ஆன குழாய் ) ,ஆரக்கால்,வட்டை ,இருசு,கடையாணி,கூசு,தொட்டிக்கூண்டு,சவாரிக் கூண்டு. எத்தனை வார்த்தைகள் !
நாம் இன்னும் மாட்டுவண்டி யுகத்திலே இருக்க விரும்புகிறாரா சுஜாதா ,என்று கடிதம் எழுத உடனே சில பேனாக்கள் திறக்கப்படும் சப்தம் கேட்கிறது.
இந்த வார்த்தைகள் அனைத்தும் சக்கரங்கள் உள்ள Mechanical Engineering சாதனத்துக்கும் பயன்படுத்தலாம்.
ஆங்கிலக் கலைச்சொற்கள் பல அப்படித்தான் அமைக்கப்பட்டன.அவைகளின் ஆரம்ப அர்த்தங்களை துறந்து வந்தவை அவை. எலக்ட்ரான் எனும் வார்த்தை அம்பாற அரக்கு. Ballot என்கிற வார்த்தை கூழாங்கல். ஆரம்ப காலத்தில் கூழாங் கற்களை கொண்டுதான் ஒட்டு எடுத்தார்களாம்!
நாம் நம் குடவோலையைத் தொலைத்துவிட்டோம் !
அவர் பகிர்ந்துகொண்ட சில கலைச்சொற்கள்

Comments