சைபிகூ வகை கவிதைகள் என்பது விஞ்ஞான கற்பனைகள் பற்றி ஹைக்கூ வடிவில் எழுதுவது . உதாரணமாக எதிர்கால நூற்றாண்டு கவிதைகள் எப்படி இருக்கும் /எப்படி எழுதப்படும் என கற்பனையாக எண்ணி எழுதுவது .
அந்த வகையில் எழுதிய சில சைபைகூ கவிதைகளை தொகுத்துள்ளேன் .
சைபைகூ கவிதைகளில் நல்ல தகவல்களும் இருக்க வேண்டும்/பயனுள்ளதாக இருக்கக் வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டவை இவை . தெரியாத விடயங்கள் இருந்தால் கூகிள் செய்து பாருங்கள் :)
சைபைகூ
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் ;
எம் தியரியும் எம்(M) தியரியும் ஒன்று தான் .
சிந்தடிக் டெலிபதியில் பேசிக்கொண்டன இரு மனங்கள்
சிந்திக்காத காதல் என்பது பிழையானது
இருபத்தியிரண்டாம் நூற்றாண்டில் ..
செவ்வானத்தின் வனப்பு :
வாங்கிப் பொருத்திய கண்களினூடு ஊறியது
நேரத்தில் பயணித்து இறந்தகாலம் சென்றுவிட்டேன் ;
அடையாளம் தொலைத்துவிட்டேன் ;
காலம் காட்டும் கடிகாரங்கள் அங்கில்லை .!
பொதுவான சில கவிதைகள்
மெய்யின் மையத்தில் மையல் கொள்ளும்
இதயம் தைக்கும் தையலின் கொள்ளை #காதல்
வளி ஊடுருவும் இதயத்தில் வலிகள் சுமக்கிறான் மனிதன் ,
சிறகுகள் கொண்டு வளியை கிழித்து வழி அமைக்கின்றன பறவைகள் .
இரவி இல்லா இரவில் ;
ஒளிரும் இரவல் வாங்கி :) #நிலவு
Comments
எம் தியரியும் எம்(M) தியரியும் ஒன்று தான் .
//
அருமை
பதிவை படி….பரிசை பிடி……(இலவச இன்டர்நெட் )
வாங்கிப் பொருத்திய கண்களினூடு ஊறியது