நீயா நானாவில் நல்ல தலைப்புக்கள் வரும் போது வார இறுதி நாள் ஒழுங்காக செல்லவில்லை என்ற குறையை அந்த இரவுகள் நிவர்த்தி செய்கின்றன .
அது போல இந்த ஞாயிற்றுக்கிழமை(31 /7 /2011 ) ஒளிபரப்பாகிய தலைப்பு மிகவும் சுவாரசியமானதும் ,எமது அன்றாட வாழ்க்கையில் கடந்து வரும் முக்கிய பிரச்சினையுமாகும் .காரணம் தொடர்பாடல் தான் இந்த காலத்தில் எமது வேலைகளையும் அனைத்தையும் கொண்டு செல்கிறது .
வெளிப்படியாக பேசுவது சரியா ? மறைத்து பேசுவது சரியா என்ற விடயத்தில் மிகவும் தெளிவாக இருபக்கம் ஆராயப்பட்டது .
வெளிப்படையாக பேசுபவர்கள் ஏமாளிகள் என்றும் அளந்து பேசுபவர்கள் வஞ்சம் வைத்து பேசுபவர்கள் என்றுமே ஒருவரையொருவர் நினைத்துக்கொண்டிருக்கிறோம் .
ஆனால் இதை பொதுவாக பார்ப்பவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் வெளிப்படையாக பேசுபவர்களை நம்பலாம் அமைதியாக ,கமுக்கமாக பேசுபவர்களை நம்ப முடியாது என்ற எண்ணமே நிலவுகிறது .
இந்த இரு பிரச்சனைகளாலும் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் . வெளிப்படையாக பேசுதல் கூடுதலானோரை பாதித்து விடுகிறது .
முன் வைக்கப்பட்ட சில கருத்துகள் மிக பயனுள்ளதாக இருந்தது . வெளிநாட்டவர்கள் கலாச்சாரம் எப்படி வெளிப்படையாக பேச வேண்டும் என்று கற்று தந்திருக்கிறது ஆனால் எமது காலாசராம் எப்படி மறைத்து பேச வேண்டும் என கற்றுத்தந்திருக்கிறது . உண்மையாக ஒரு சமூகம் வெளிப்படையாக பேசுவதை புரிந்துகொள்ளும் அளவுக்கு முன்னேறாத போது நாமும் அதனை குறைத்துகொள்வது நல்லது .
நாம் வெளிப்படையானவர்கள் என்பதை காட்டிக்கொள்ள தேவையற்ற இடங்களில் அவர்களுக்கு அந்த விடயங்கள் தேவையில்லாத சந்தர்ப்பங்களில் பேசுவது தவறு .ஒருவர் வெளிப்படையாக பேசும் பொது அவரின் நிலையும் மிகவும் முக்கியமானது .
மிகவும் பயனுள்ள தலைப்பாக இருக்கும் . பார்க்க
Comments