நீங்க யாரும் நிச்சயம் கனவு காணாம இருந்திருக்க மாட்டீர்கள் . ஆனால் அதை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை எனலாம் . தேஜாவு போல . அதாவது சில நேரங்களில் சில இடங்கள் நிகழ்வுகள் ஏற்க்கனவே பார்த்தது போல இருக்கும் .ஆனால் இவை இரண்டும் அடிக்கடி அனைவருக்கும் நடப்பது . இதுவரை விடை காணாத புதிராய் இருப்பது கனவுகள் தான் . மருத்துவம் ,அறிவியல்,மனோதத்துவம் என பல பக்கங்களில் இருந்தும் விளக்கங்கள் குவிகிறது .
இந்த வகையில் சில கனவுகள் நாம் காணும் போது அவை கனவு தான் என தெரியும் . ஆனால் சில கனவுகள் காணும் போது நிஜமாக நடப்பது போலவே இருக்கும் . அந்த வகை கனவுகள் எளிதில் மறக்க முடியாதது . உங்களால் அனைத்தையும் உணர்ந்து விளக்கமாக பார்க்க முடியும் .
அது தான் லூசிட் கனவுகள் . லூசிட் கனவுகளை நீங்கள் உணர்ந்து கனவு தான் காண்கிறீர்கள் என உணர்ந்து அனுபவிக்க முடியும் . இன்செப்ஷன் படம் பார்த்தவர்களுக்கு கிட்டத்தட்ட அதே போல இருப்பது போல தோன்றும் .
லூசிட் கனவுகளை எமக்கு ஏற்றது போல அமைத்துக்கொள்ளலாம் .விரும்பிய இடங்களுக்கு செல்லலாம் .இதன் முக்கியத்துவத்திட்க்காக ஒரு உதாரணம் சொல்கிறேன்.
இந்த லூசிட் கனவுகள் பல முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டது என்பது உண்மை . நீல் போர் கண்ட கனவு அவருக்கு நோபெல் பரிசை பெற்றுக்கொடுத்தது .எமது கோள்கள் சூரியனை சுற்றுவது போல அணுவை சுற்றி இலத்திரன்கள் காணப்படுவதை கனவிலேயே அவர் கண்டார் .
இந்த கனவு REM உறக்க நிலையிலேயே வரும் . அதாவது உறக்கத்தின் 5 நிலைகளில் 5 ஆவது நிலையில் .
இந்த லூசிட் கனவுகளின் பின்னணியை அலசினால் கொஞ்சம் தெளிவு பிறக்கும் . இது புராதன காலம் தொட்டே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இனத்தவர்கள் பலரிடமும் நிலவிய கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்தது . அமெரிக்க பழங்குடிகள் இந்த கனவுகளை அவர்கள் இறைவனை அடைய ,தேவதைகள் ,ஆவிகளின் உலகத்துடனான வாசல் போல நினைத்திருந்தனர் .

Aborigines எனப்படும் அவுஸ்திரேலிய மூத்த பழங்குடிகள் உலகின் தோற்றத்தை ஒரு கனவாக தமது குறிப்புகள் ,கதைகளில் குறிப்புட்டுள்ளனர் . சிலர் தாம் காணும் கனவை குறியீடுகளாக வரைந்து வைத்துள்ளனர் .
இதிலிருந்து லூசிட் கனவுகள் புதியவை இல்லை என்பது தெரிகிறது ..அரிஸ்டாடில் இந்த கனவுகள் பற்றி எழுதியிருக்கிறார் ஆனால் சரியான பதம் இல்லை .
ஆனால் திபெத்திய புத்தர்கள் பலர் இந்த லூசிட் கனவுகள் போல சிலவை பற்றி நீண்டகாலம் பயிற்சி,ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அது dream yogaa (யோகா ) .
உங்கள் நிலையை உணர்த்தி எப்போதும் விழிப்புடன் இருக்க மிகவும் உதவும் டிரீம் யோகா . எப்போதும் புத்த சமயத்தில் உள்ள நம்பிக்கை நிஜத்தை உணர்தல் .மாயையில் இருந்து விலகி இருத்தல் . லூசிட் கனவு காண்பவரால் அது கனவு உலகம் என அறிய முடியும் . கனவு காணும் போது அவர்களுக்கு விருப்பமானது போல கனவை ,நிகழ்வுகளை செலுத்தலாம் .
டச்சு மனோதத்துவவியலாளர் Frederik van Eeden என்பவரே அதற்க்கான விளக்கங்களுடன் வந்தார் . சாதாரண கனவுகள் தொட்டு கனவில் 9 வகைகள் இருப்பதை கூறினார் .அவர் தனது லூசிட் கனவுகள் பற்றியும் குறித்துள்ளார் .ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பாலியல் உறவு சம்மந்தப்பட்ட கனவுகளே கூடுதலாக வந்துள்ளது .
ஆனால் இது பிரசித்தி பெற்றது ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மனோதத்துவவியலாளர் Stephen Laberge
என்பவராலே .இவர் தான் கனவுகளை நாம் எமது படைப்புகள் ,கண்டுபிடிப்புகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என கூறியவர் .
Comments
வித்தியாசமான தகவலாகவும், சுவாரகசியமாகவும் இருந்தது
நன்றிகள், பாராட்டுக்கள்.
//Superb Post.
வித்தியாசமான தகவலாகவும், சுவாரகசியமாகவும் இருந்தது
நன்றிகள், பாராட்டுக்கள்//
மிக்க நன்றி ஜனா :-)
//கனவு குறித்த தகவல்களை படிப்பதில் எனக்கு அதிக விருப்பம்... தொடருங்கள்..//
நன்றி ..நிச்சயம் தொடருவேன் :-)