கண்ணாடி....


சொல்கிறேன்
கண்ணாடியில் தெரிந்துகொள்
எவ்வளவோ ..

சந்தர்ப்பத்தை எதிர்பார்ப்புக்கு
சாதகமாக்கு ..
உன்னுடன் முரண்படு
சரியா?தவறா?
உன் பெண்மையிடம் மட்டும் கேள்

கனவுகளுக்கு வடிவம் கொடு
வசனங்களுக்கு செயல் கொடு

உணர்வுகளை விற்காதே..
சமூகத்தை அறுத்தெறி
வெறி வேண்டாம் உனக்கு...
ஆயிரம் சொல்லட்டும்
உனக்கு நீ
நீ மட்டும்.....

தனிமையில் உன்னை அறி
கற்பனைகளுடன் பேசு
ரசனைகளுக்கு உயிர் கொடு
காதலோடு ரசி
இசையோடு சுவாசி

கண்களில் காதல் பார்
காற்றோடு புன்னகை
அழுது அழுது
அனைத்தையும் அழி

எண்ணத்தில் நம்பிக்கை வை
எண்ணி எண்ணி
காலம் கழிக்காதே
ஏன் என்று கேள்
பதில் கிடைக்கும்

ஏமாற்றத்தில் எதிரிகளை அறி
உண்மைக்காதலை
பகுத்தறிவால் அறி
காத்திருப்பு வேலைக்கு ஆகாது
உயிரைத்தருவேன் வாய்ப்பேச்சு

மழையோடு வெய்யிலாய் இரு
வானவில்...
மூங்கிலில் துளையாய் இரு
புல்லாங்குழல்...
அழகும் ரசனையும் உன்னோடு

சொல்கிறேன்
கண்ணாடியில் தெரிந்துகொள்
எவ்வளவோ ..

Comments

Anonymous said…
awesome! am happy a guy came up with this!
S.Sudharshan said…
மிக்க நன்றி :-)

Popular posts from this blog

கண்ணாளனே...!

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

கலாவல்