அவள் தமிழ் நிறத்தினாள்

காலைக் கருக்கலில், 
மங்கும் பனிமதியில், 
சோலைச் செருக்கில், 
வண்டு சுழன்று ஞிமிறும் ஞால ஒழுங்கில் எல்லாம், 
நாளும் உந்தன் பேரழகு புலருமடி


விரியும் மலரில்,
தோயும் பனியில், 
தென்றல் அணவும் காரியத்தில், 
அமுதமாய் முத்தி விழும் மதுரம் அள்ளி 
உன்னைத் தமிழால் மட்டும் தொழுதிருப்பேனோடி

Comments

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்

இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்