Skip to main content

Posts

தமிழர் அரசியலும் சர்வதேசமும் 2..

ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றுச்  சில நாட்களே ஆகிறது. இந்நிலையில், இலங்கையின் முக்கிய பிரச்சனையான இனப்பிரச்சினை தொடர்பில் அரசிடமிருந்து எவ்வாறான பதில்கள் கிடைக்கப்பெற்றிருக்கிறது  என்பதனை ஆராய்வது அவசியமாகும். சாதகமான ஆட்சிமாற்றம் நிகழ்ந்திருக்கிற வேளையில் இனப்பிரச்சனை தொடர்பில் சர்வதேசம் என்ன அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது எனத் தெரிந்துவைத்திருப்பதும்  அவசியம். இனப்பிரச்சனையும் உள்நாட்டு அரசியலும் ஜனவரி 17ல் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தபின்னரும்கூட  உள்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை நிச்சயமற்ற தன்மை தொடர்ந்தது. இதன் காரணமாக, இனப்பிரச்சனை தொடர்பில் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளையோ, கருத்துகளையோ யாரும் முன்வைக்கவில்லை. எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல், ஒருவித புரிந்துணர்வின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டது.  வெளிப்படையான பேச்சுகளை முன்னெடுத்திருந்தால், அவை தென்னிலங்கையில் மிகப்பெரும் அரசியற் பிரச்சாரமாக உருவெடுத்திருக்கும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைகூட மார்ச்சில் வெளியாகவிருந்த மனித உரிமை அ...

தமிழர்களின் அரசியலும் சர்வதேச நகர்வுகளும்!

இந்தக் கட்டுரையானது, தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த காலகட்டத்திலிருந்து, இலங்கை மீது விழுந்திருக்கும் சர்வதேசப் பார்வையை ஆராய்வதோடு, உள்நாட்டு அரசியல் களநிலவரங்களையும் ஆராய்கிறது. இந்தியா, அமெரிக்கா உட்பட  மேற்குலக நாடுகளினதும் கொள்கைகள் மாறியிருக்கிற காலகட்டத்தில், அவற்றை நன்றாகப் பயன்படுத்தி, தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உண்டாக்கித் தரவேண்டியது அரசியற் தலைவர்களினது கடமையாகும். அதற்குத் தகுதியான, சர்வதேச நாடுகளிடையே சிறந்த உறவைப் பேணக்கூடிய உறுப்பினர்களை, பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யவேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது. அமெரிக்கா போலே Soft power இலிருந்து Smart Power எனும் கொள்கையை அடையவேண்டும். அதனை அடைவதற்கு ஒற்றுமையும் உழைப்பும் அவசியம். சர்வதேச அரசியல் பற்றிய அறிவினைச்  சாதாரண மக்களும் பெற்றிருக்கவேண்டும். இலங்கையில், 2015ம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிற வேளையில், வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல் களங்களும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அதற்கான  காரணம், உள்நாட்டில் நிலவுகிற  இனப்பிரச்சனை.  இதி...

தமிழர்களும் சர்வதேசமும் - Soft Power to Smart Power

இந்தக் கட்டுரையானது, தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த காலகட்டத்தில் இருந்து, இலங்கை மீது விழுந்திருக்கும் சர்வதேசப் பார்வையை ஆராய்வதோடு, உள்நாட்டு அரசியல் களநிலவரங்களையும் ஆராய்கிறது. இந்தியா, அமெரிக்கா உட்பட  மேற்குலக நாடுகளினதும் கொள்கைகள் மாறியிருக்கிற காலகட்டத்தில் அவற்றை நன்றாகப் பயன்படுத்தி, தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உண்டாக்கித் தரவேண்டியது அரசியற் தலைவர்களினது கடமையாகும். அதற்குத் தகுதியான, சர்வதேச நாடுகளிடையே சிறந்த உறவைப் பேணக்கூடிய உறுப்பினர்களை, பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யவேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது. அமெரிக்கா போலே Soft power இலிருந்து Smart Power எனும் கொள்கையை அடையவேண்டும். இலங்கையில், 2015ம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிற வேளையில், வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல் களங்களும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அதற்கான  காரணம், உள்நாட்டில் நிலவுகிற  இனப்பிரச்சனை.  இதில் தமிழர்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் அனுசரணை, வழி...

அகமருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம் : சிறுபேச்சு 6

மலையாளத் திரைப்படங்களைப் போலவே மலையாளப் பாடல்களும் இசை, மொழி அடிப்படையில் மென்மையை இழந்துவிடவில்லை. இயல்பிலேயே இனிமையான மொழிக்கு, வரிகளைப் பார்த்துப் பார்த்துச் சேர்க்கும் கவிஞர்கள் மயக்குகிறார்கள். சில நாட்களாகவே இந்த இரண்டு பாடல்களையும் மனதில் இருந்து நீக்கமுடியவில்லை. ஒன்று, அல்போன்ஸ் புதிரன் இயக்கிய 'பிரேமம்' என்கிற திரைப்படத்தில் இடம்பெற்ற 'மலரே' என்கிற பாடல்.  விஜய் ஜேசுதாஸின் குரலில் ஒரு அனுராக கீதம். ♫  குளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம் மனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம் அகமருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம் என் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்  ♪ ♫   இரண்டாவது, 1983 என்கிற படத்தில் இடம்பெற்ற  ஜெயச்சந்திரனும் வாணி ஜெயராமும் இணைந்து பாடிய 'ஓலன்ஞாளிக் குருவி' என்கிற பாடல். நிறைய வருடங்களுக்குப் பிறகு  வாணி ஜெயராமும் ஜெயச்சந்திரனும் இணைந்து பாடிய பாடல். மெட்டுப்போலவே பாடலில் இழையோடுகிற கொஞ்சல் அழகு.

பாகுபலி

நீங்கள் வரலாற்றுப் படங்களிலும் அதன் காட்சியமைப்பிலும் திளைப்பவராக இருந்தால் இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்கலாம். சின்ன வயதில் மகாபாரதக் கதைகளைப் படித்து, குருச்சேத்திரப் போரைக் கற்பனையில் நிகழ்த்திப் பார்த்த அனைவருக்கும் இந்தப் படம் நிச்சயம் மிகப் பிடித்தமானதாக அமையும். எங்கள் வரலாற்றிலும் சூப்பர் ஹீரோக் கதைகள் உண்டு. அதைக் கற்பனை கலந்து நேர்த்தியான 'பிரமாண்டம்'  கொடுக்க யாரும் முன்வர மாட்டார்களா என்கிற ஏக்கம் பலருக்கும் இல்லாமல் இல்லை. 'நான் ஈ' என்கிற காதல், fantasy கலந்த திரைப்படத்துக்குப் பிறகு ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியிருக்கிற படம்தான் 'பாகுபலி'. தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. இந்தப் படத்துக்காகக் கிட்டதட்ட மூன்று வருடங்கள் மெனக்கெட்டிருக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படமானது  ராஜமௌலியின் பதினோராவது படம். 'பாகுபலி' ஒரு  கற்பனை கலந்த வரலாற்றுக் கதையாக அமைகிறது. இரண்டு பாகங்களைக் கொண்ட இந்தத் திரைப்படத்தின் முதலாவது பாகம் தான் இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது. பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா,...

ஜூலை மலர்களே!

ஜூலை மாதம் என்றாலே சட்டென்று இரண்டு பாடல்கள் நினைவைத் தட்டும். ஒன்று, ரஹ்மானின் இசையில் அனுபாமா பாடிய "ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் மனசு" என்கிற பாடல். இன்னொன்று, "ஜூலை மலர்களே... ஜூலை மலர்களே...உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்" என்கிற பா.விஜயின் வரிகள்.  கொன்றைப் பூக்கள் ஜூலை மாதத்தில் பூக்கும். மரம் முழுவதும் நிறைந்திருக்கும். அதனால் "ஜூலை மலர்கள்" என்கிறார் பா.விஜய். கொன்றைப் பூக்களைத் தான் "ஜூலை மலர்கள்" என்றிருக்கவேண்டும். கொன்றைப் பூக்கள் அவ்வளவு அழகு. ஆனால் சிங்கள மொழியில் இதனை "Esala Mal" என்று அழைப்பார்கள். அதாவது ஜூலை மலர் என்று அர்த்தம். "கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்" சங்ககாலத்தில் கொன்றைப் பூவின் நிறத்தை பெண்களின் மேனி நிறத்துக்கு ஒப்பிடுவார்கள்.  சிவனுக்குப்  பிடித்தமான பூ என்பதால் சிவனைக் 'கொன்றை வேந்தன்' என்றும் அழைப்பதுண்டு. வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு  பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்        கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக்     ...

பாபநாசம்

கமல்ஹாசன் நடித்த பாபநாசம் என்கிற திரைப்படத்தை வெளியிடப்பட்ட தினமான இன்றே பார்க்கக்கிடைத்தது. கமலுக்கு ஒரு தரமான சினிமா அமையவேண்டும் என்பதுவே எனது  நீண்டநாள் எதிர்பார்ப்பு. இந்தத் திரைப்படம் அதனைப் பூர்த்தி செய்திருக்கிறது.  பாபநாசம் என்கிற ஊரில் மகிழ்ச்சியாக இருக்கிற ஒரு குடும்பத்தின் வாழ்க்கையில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்தப் பிரச்சனை  ஒரு குற்றச்செயலில் போய் முடிகிறது. குற்றத்தை மறைத்து தனது குடும்பத்தைக் காப்பாற்ற நினைக்கும் ஒரு மனிதனைப் பற்றிய கதை.  ஒரு சாதாரண மனிதனின் புத்திசாலித்தனத்துக்கும் போலீஸ், சட்டம் போன்ற அமைப்புக்கும் இடையிலான போராட்டம்தான் இந்தப்படம். மோகன்லால் நடித்த  'திருஷ்யம்' என்கிற திரைப்படத்தின் ரீமேக்தான் இந்தத் திரைப்படம். இரண்டுக்கும் சுவாரசியமான திரைக்கதை அமைத்து  இயக்கியது ஜீது ஜோசெப் என்கிற இயக்குனர்.  நடிப்பைப் பொறுத்தவரையில் அந்தந்தக் கதாப்பாத்திரங்கள் சிறப்பாக நடித்திருந்தாலும் கமலின் நடிப்புத்தான் ஒட்டுமொத்தப் படமுமே என்றும் சொல்லலாம். ஒரு சாதாரண மனிதனின் நிலை தடுமாற்றம் காணவேண்டிய இடத்தில் தடுமா...