Skip to main content

Posts

பிரிவோம் சந்திப்போம் : ஆனந்தத் தாண்டவம்

அவ்வப்போது ஆனந்தத்தாண்டவம் படத்தைப் பார்த்து யாராவது சமூக இணையத்தளங்களில் சிலாகித்துக்கொள்வார்கள். அப்போதெல்லாம் எனக்கு சுஜாதா எழுதிய 'பிரிவோம் சந்திப்போம்' நாவல்தான் நினைவுக்கு வரும். என்னைப்பொறுத்தவரை அந்தத் திரைப்படம் நாவலைப் பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்வேன். உண்மையிலேயே தமிழ்த் திரைப்பட உலகில்  நாவல்களைத் திருப்தி செய்த படமென்று ஒருசிலவற்றைத் தான் குறிப்பிடலாம். அதற்குக் காரணம், நாவலில் இருந்த ஆழமான தன்மை திரைபப்டங்கள்ல இருக்காது.  'இங்கு எல்லாமே மிகைப்படுத்தல்கள் தான்' என நாவலில் ஒரு வசனம் வரும். அது எவ்வளவு பெரிய உண்மை என்பது நான் சந்தித்த, எதிர்கொள்கிற மனிதர்களைப் பார்த்துப் புரிந்துகொண்டேன். மிகைப்படுத்தல்களை கண்மூடித்தனமாக நம்புகிற சமூகமாக மாறி வருகிறது. இவர்களாகவே காதலுக்கென்று ஒரு தியரி அமைத்துக்கொண்டு, எதிர்கால உலகினை  இப்படித்தான் அமைத்துகொள்வார்கள், வாழ்வார்கள்  என சுஜாதா எண்பதுகளிலேயே எழுதிய நாவல் இது. "ரகுபதி ஒரு இஞ்ச் உயரத்தில் மிதந்து சென்று வீட்டுக்கு வந்தான். மதுமிதாவைத் திறந்து மதுமிதாவை முகத்தில் இறைத்துக்கொண்டு, மதுமிதா போ...

விடிந்தாலும் பெண்ணழகு!

திருமணமாகிக் கிட்டத்தட்ட நான்கரை நாட்கள் நகர்ந்திருக்கும். இன்றைய அதிகாலைப்பொழுதுவரை கணக்கில் எடுத்துக்கொண்டால் என் கணிப்புச் சரியாக இருக்கும். இருளும் ஒளியும் கலவி கொள்ளும் விடிந்தும் விடியாத பொழுது அது. காற்று அல்ல, என் தலையை அவள்தான் கோதுகிறாள். மூச்சுக்காற்று என்னவோ நெஞ்சில்த்தான் பட்டுப் படர்ந்துகொண்டிருந்தது. அதோடு அவள் விரல் வருடும் சுகமும் பிடித்திருந்தது. இன்னும் கொஞ்சம் வருடட்டுமே என்றுதான் மெதுவாகக் கண் விழித்தேன்.  நிமிர்ந்து, என் கண்களைப் பார்த்துப் புன்னகை செய்தாள். ஆமாம் உதடுகளில் புன்னகையைச் செய்துகொண்டாள். இந்த முறை உதடு மட்டும்தான் சிரிப்புக்குரிய அறிகுறிகளைக் காட்டியதே தவிர, கண்கள் சிரிக்கவில்லை. சிரிக்கும்போது  அவள் கண்கள் ஒரு குட்டி ஹைக்கூ போல இருக்கும்.  இந்தமுறை அந்தக் கண்கள் 'என்னை ஆச்சரியப்படுத்து' எனக் கேட்பதுபோல இருந்தது. அந்தக் கண்கள் இப்படித்தான் புதுமை செய்து என்னை அடிக்கடி ஆச்சரியப்படுத்தும். சற்றும் எதிர்பார்க்காதபோது, ' விடியும் வரை பெண்ணழகு' என்றாரே உங்க கவிஞரு என்று கேட்டாள். அதுவும் இந்த நேரம் இந்தக் கேள்வியை நான் எதிர்பார்த்த...

காதல், காமம் : சுஜாதா

இணையத்தில் உலாவியபோது இந்தப் பகிர்வை வாசிக்கக் கிடைத்தது. எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்தைப் பற்றிச் சொல்லும் உதாரணங்களில் இதுவும் ஒன்று.. // காமத்தை பற்றி எத்தனையோ எழுத்தாளர்கள் என்னென்னமோ எழுதியுள்ளார்கள், எழுதிகிறார்கள். அதுவும் இப்பல்லாம் ரொம்ப நாராசமா, அருவருக்கத்தக்க விதத்தில எழுதுகிறார்கள். சுஜாதாவின் "மனைவி கிடைத்துவிட்டாள்" என்ற கதையில் ஒரு முதலிரவு காட்சி. ஏன் காட்சியென்று சொல்கிறேனா சுஜாதாவின் எழுத்துக்களை படித்தாலே காட்சிகள் கண்ணுக்கு முன்னால் விரிவடையும், அதான் சுஜாதாவின் ஆளுமை. இந்த கதையில் முதலிரவில் கணவனும் மனைவியும் கொஞ்சிக்கொண்டிருக்கும் போது மனைவி கேட்கிறாள், அவளது பெயர் வேணி. //"உங்களுக்கு பிடிச்ச புத்தகம் எது? " "வேணி" "படிங்க" முதலில் அட்டைப்படத்தைப் பார்த்தான், பிரித்தான், பொருள் அடக்கத்தைத் தேடினான், முதல் அத்தியாயத்தில் ஆரம்பித்தான், ஓவியங்களை ரசித்தான், கவிதைகளைத் தொட்டான், வார்த்தைகள், இடைவெளிகள், இடைசெருகல்கள்.// ஒரு முதலிரவை இவ்வளவு எளிமையாக, ரசிக்கத்தக்க வகையில் வேறு யாராலும் எழுதமு...

வைரமுத்து : அடுத்த படைப்பு

தந்தி டிவியில் ஒளிபரப்பாகிய வைரமுத்துவுடனான நேர்காணல் நிகழ்ச்சியில், தனது அடுத்த படைப்பைப் பற்றி அவர் கூறிய செய்தி கொஞ்சம் மகிழ்வைத் தந்தது. அடுத்த படைப்பு எப்போது வெளியாகும்! "என்னுடைய அடுத்த படைப்பு 'ஈழத்தமிழ்' என்று முடிவு செய்திருக்கிறேன். ஈழம் தான் என்னுடைய அடுத்த படைப்புக்கான களம். அதுதான் என் நெஞ்சிலும் மூளையிலும் கனத்துக்கொண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய மனிதப்படுகொலை ஈழம்தான். அவர்களின் நியாயம் இன்னும் தீரவில்லை. அந்தப் போராட்டம் தோற்றிருக்கலாம், காரணங்கள் இன்னும் தோற்கவில்லை. அந்தப் போராட்டம் முடிந்திருக்கலாம் அல்லது முடிக்கப்பட்டிருக்கலாம் . அதற்கான கண்ணீர் இன்னும் காயவில்லை. அந்தக் கண்ணீரை, ரத்தத்தை, உள்ளிருக்கும் நியாயத்தை போர் முடிந்த பின்னும் தொடரும் அவலத்தை அந்த மனிதகுலத்துக்கான மீட்சியை என் படைப்புக்குள் கருவாக அமைத்து படைக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அந்தப் பணி சாதாரணமானதல்ல. ஏதோ கற்பனைக் குதிரையை தட்டிவிட்டால் கவிதை வந்துவிழுந்துவிடும். ஒரு வெண்ணிலா இரவில் மாலை 7 மணிக்கு தொடங்கினால் அதிகாலை 5 மணிக்குள் என் படைப்பு முடிந...

விழியும் விழியும் நெருங்கும் பொழுது..

'விழியும் விழியும் நெருங்கும் பொழுது' எனும் பாடலை மிகவும் பிடிக்கும். வித்தியாசாகரின்  இசையில் வரிகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். அறிவுமதியின் வரிகள் இன்னும் பிடிக்கும். அதில் ஒரு வரிக்கு இப்படியொரு விளக்கம் பேஸ்புக்கில் படிச்சேன். \\\ ’விழியும் விழியும் நெருங்கும் பொழுது’ - சதுரங்கம் படப்பாடல். கவிஞர் அறிவுமதி எழுதியது. அதில் நாயகன் பாடும் ஒரு வரி: ‘இமையில் நிலவு நுழையும் பொழுது’ இரவு நேரத்தைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறார் என்று எண்ணினேன். ஒரு சந்தேகமும் வந்தது. “இது உறவின்போது பாடப்படும் பாடல். நாயகியின் கண்களில் நிலவு தெரிகிறதென்றால்.. வெளியிலா நடக்கிறது கலவி? அல்லது பால்கனியோ..” என்றெல்லாம் நினைத்தேன். ஆனால் கவிஞர் சொன்ன விளக்கம் கேட்டு அசந்துவிட்டேன். அதாவது.. கிறக்கத்தில் இருக்கும்போது, நாயகியின் கண் கருமணிகள் மேல் செல்வதால்.. கண்ணைப் பார்க்கும்போது நிலவைப் போலவே இருக்குமாம்! - Parisal Krishna Kumar \\

இரண்டாம் உலகம் - Universe or Multiverse ?

இரண்டாம் உலகம் திரைப்படம், Multiverse theory, Membrane theory போன்றவற்றை அடிப்படையாக் கொண்ட திரைப்படம். படத்தில், தியரி பற்றி பெரிய அறிமுகம் ஏதும் கொடுக்கப்படவில்லை. Michio kaku மற்றும் ஐங்ஸ்டைன் சொல்லிய கோட்பாட்டை டைட்டிலில் எளிமையாகப் போட்டார்கள். முக்கியமாக ஐங்ஸ்டைன் முடிக்காமல்( Theory of everything ) விட்டுப்போன கோட்பாடுகளில் ஒன்று. அதில் ஆர்வம் கொண்ட Michio kaku பின்னர் தானும் ஆய்வில் இறங்கினார். நம்மைப் போலவே நிறைய உலகங்கள் இருக்கின்றன, அதில் நம்மைப் போலவே பலர் இருப்பார்கள் என்கிற தியரி. உதாரணமாக, நீங்கள் இதை ஆர்வமாகப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள், நீங்களே வேறொரு உலகில் இருந்து திபெத்திய போராட்டம் பற்றி வாசித்துக்கொண்டிருக்கலாம். இன்னொரு உலகில், இணையமே இன்னமும் அறிமுகமாகாமல் இருக்கலாம். இன்னமும் நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கிறது.அங்கிருப்பவர்கள் தமிழை மொழியாகக் கொண்டவர்களாகவும் இருக்கலாம். அங்கு இயற்பியல் விதிகள் வேறுமாதிரியாகவும் இருக்கலாம். நம்மைப் போன்றவர்களை, அவர்களின் உலகை பார்க்க முடியாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. சூரிய குடும்பத்தில் பூமி இருப்பது...

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒர...