Skip to main content

Posts

சைபைகூ வகை கவிதைகளின் தொகுப்பு

சைபிகூ வகை கவிதைகள் என்பது விஞ்ஞான கற்பனைகள் பற்றி ஹைக்கூ வடிவில் எழுதுவது . உதாரணமாக எதிர்கால நூற்றாண்டு கவிதைகள் எப்படி இருக்கும் /எப்படி எழுதப்படும் என கற்பனையாக எண்ணி எழுதுவது .  அந்த வகையில் எழுதிய சில சைபைகூ கவிதைகளை தொகுத்துள்ளேன் .  சைபைகூ கவிதைகளில் நல்ல தகவல்களும் இருக்க வேண்டும்/பயனுள்ளதாக இருக்கக் வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டவை இவை . தெரியாத விடயங்கள் இருந்தால் கூகிள் செய்து பாருங்கள் :)  சைபைகூ  இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் ; எம் தியரியும் எம்(M) தியரியும் ஒன்று தான் .  சிந்தடிக் டெலிபதியில் பேசிக்கொண்டன இரு மனங்கள் சிந்திக்காத காதல் என்பது பிழையானது  இருபத்தியிரண்டாம் நூற்றாண்டில் .. செவ்வானத்தின் வனப்பு : வாங்கிப் பொருத்திய கண்களினூடு ஊறியது  நேரத்தில் பயணித்து இறந்தகாலம் சென்றுவிட்டேன் ;  அடையாளம் தொலைத்துவிட்டேன் ; காலம் காட்டும் கடிகாரங்கள் அங்கில்லை .! பொதுவான சில கவிதைகள்  மெய்யின் மையத்தில் மையல் கொள்ளும்  இதயம் தைக்கும் தையலின் கொள்ளை #காதல் வளி ஊடுருவும் இதயத்தில் வலிகள...

7 ஆம் அறிவு - நம்மை இங்கு நாம் தொலைத்தோம் ! தொலைப்போம் !

 ஒரு முறை சுஜாதா அவர்களிடம் ஒருவர் 7 ஆவது அறிவு என்னவாக இருக்கும் என கேட்டதற்கு தொழிநுட்பத்தை .ஊடகங்கங்களை பயன்படுத்தி செய்யப்படுவது என கூறினார் . உதாரணமாக மனிதன் உருவாக்கிய கணணி மனிதனை விட வேகமாக வேலைகள் செய்யும் . அதே போல இயற்கை ஊடகங்களை(சக்திகளை ) பயன்படுத்தும் திறன் சித்தர்களுக்கு இருந்திருக்கிறது .அதானால் தான் இந்த பெயராக இருக்க வேண்டும் . 7 ஆம் அறிவு திரைப்படம் பற்றி விமர்சனமாக இந்த பதிவை வைக்க போவதில்லை . சில விமர்சகர்கள் என்போரின் விமர்சனங்களுக்காக எழுதும் பதிவு . அதற்கு முதல் இப்போது இருக்கும் தமிழ் மேதைகள் கூட்டம் பற்றி ஒரு வித அறிமுகம் கொடுக்கிறேன் . இந்த மேதைகள் கூட்டத்தால் எந்த பயனும் இதுவரை காலமும் தமிழுக்கு, சைவத்துக்கு இருந்ததில்லை . எழுத்துலக பிரம்மாக்கள் என்பவர்கள் இலக்கிய சொட்ட சிறு கதையையும் ,கவிதைகளையும் இணையம் முழுக்க கொட்டி வைத்திருக்கிறார்கள் . கவிதைகளுக்கு ,கதைகளுக்கும்,முக்கியமாக சினிமாவுக்கும் இணையத்தில் பஞ்சமில்லை . ஒரு விஞ்ஞானம் பற்றிய விடயமோ ,அது பற்றிய ஆராய்ச்சிகளோ இணையத்தில் இல்லை .தமிழை,தமிழின் தொன்மைகளை விஞ்ஞான பார்வையில...

பாரதியை முழுமையாக படியுங்கள் !

பாரதி கண்ட புதுமைப்பெண்,பாரதியின் கனவு,பாரதியின் கவிதைகள் என மூச்சுக்கு ஒரு முறை பாரதி பற்றி பேசுகிறோம் .ஆனால் பெரும்பாலும் பாரதி கூறியதில் ஒரு பகுதியை தான் எடுத்துக்கொள்கிறோம் .அது எம் மனோநிலையின் வெளிப்பாடோ தெரியவில்லை .பாரதியின் நினைவு தினத்தில் ,அவன் எண்ணங்கள் இறக்காத தினத்தில் இதை பதிகிறேன் . பாரதியை ஒரு சாதாரண நுகர் பொருள் கலாச்சாரத்தில் சிக்கிய மனிதர்கள் வட்டத்துக்குள் சேர்க்க முடியாது .தன் குடும்பம் தன் வட்டம் என்று நினைக்காத "வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே" என்ற வரிகளே பாரதியின் எண்ணத்தின் உயர்வை சொல்லும் . நேரடியாக விடயத்திற்கு வருகிறேன் . எப்போதும் நாம் பாரதி கூறியதில் பாதியை தான் நினைவில் வைத்திருக்கிறோம் .சில கருத்துகளை அப்படியே எம் தன்மைக்கு ஏற்ப மாற்றியிருக்கிறோம் .பாரதி கண்ட புதுமை பெண்களை உதாரணமாக  சொல்லலாம் .  முக்கியமாக "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று நாம் வெறுமனே கூறுவதுண்டு .பாரதி கூறியது இப்படி சொல்ல கூடாது என்றே !  புத்தம் புதிய கலைகள்-பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்; மெத்...

மங்காத்தா பாடல்களில் ரசித்தவை -இனிமையான வரிகளின் நினைவுகள்

அண்மையில் வெளியான மங்காத்தா பாடல்களில் மென்மையான பாடல்கள் இரண்டு ரசிக்க கூடியதாக இருந்தது . ஒன்று என் நண்பனே ,மற்றொன்று கண்ணாடி நீ கண் ஜாடை நான் . "என் நண்பனே" பாடலின் வரிகளுக்கு கவிஞர் வாலி பலம் ,பாடலுக்கு யுவனின் குரல் பலம் . கண்ணாடி நீ கண் ஜாடை நான் பாடலுக்கு நிரஞ்சன் பாரதியின் வரிகளில்   சரணின் குரலும் ,பவதாரனியின் குரலும் சிறந்த மெல்லிசை பாடலை தந்திருக்கிறது . பாடலை கேட்க்க  கண்ணாடி நீ கண் ஜாடை நான் என் வீடு நீ உன் ஜன்னல் நான் என் தேடல் நீ உன் தேவை நான் என் பாடல் நீ உன் வார்த்தை நான் என் பாதி நீ உன் பாதி நான் என் ஜீவன் நீ உன் தேகம் நான் என் கண்கள் நீ உன் வண்ணம் நான் என் உள்ளம் நீ உன் எண்ணம் நான் என் மேனி நீ உன் ஆடை நான் என் பேச்சு நீ உன் மேடை நான் என் பாதை நீ உன் பாதம் நான் என் தென்றல் நீ உன் வாசம் நான்  நான் தான் நீ என்பதை சற்று வித்தியாசமாக வரிகளில் காதல் கலந்து இருக்கும் வரிகள் இவை . இதனை எழுதியவர் கவிஞர் நிரஞ்சன் பாரதி அவர்கள். இவர் வேறு யாரும் அல்ல மகாகவி பாரதியாரின் இரத்தவழி உறவு  . மகாகவியின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும் . இந்த தலைமுறைக்கு ஏற்ற படி...

நேரத்தில் விஜயின் நெடும்பயணம்- கி பி 2050

திண்ணை இணைய வாரப்பத்திரிகையில் வெளியான எனது கதை ... http://puthu.thinnai.com/?p=3070 பாரிய அணு உலைகள் ,செயற்கை பசுமை, பறக்கும் மின்சார வாகனங்கள்  என  கி .பி 2050 இல் ஒரு இயந்திரச்சாலை போலவே  காட்ச்சியளித்தது ஜப்பானின் தலைநகரம் டோக்கியோ .இயந்திரங்களிடையே சில சில இடங்களில்  மனித நடமாட்டமும் இருந்தது .மனிதர்கள் புன்முறுவலுடனும் ஆச்சரியம் கலந்த முகத்துடனும் ஆங்காங்கே குழுக்களாக நின்று சாலையின் பாரிய திரைகளில் செய்தியை பார்த்துக்கொண்டிருந்தார்கள் . அவர்களின் எதிர்பார்ப்பு, மகிழ்ச்சிக்கு காரணம் உலகையே தமது பக்கம் திருப்பும் வேலையில் அவர்களின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுக்கொண்டிருப்பது தான் .  மத்திய விஞ்ஞான தொழில்நுட்ப மையத்தில் மும்முரமாக வேலைகளில்  ஈடுபட்டிருந்த விஜய்க்கு, இருந்த இடத்தில் ரோபோக்களின் உதவியால் உடல் அசையாத வேலை என்றாலும் மூளை படுவேகமாக இயங்கிக்கொண்டிருந்தது . காரணம் அடுத்த நாள் ஒளியின் வேகத்துக்கு இணையாக செல்லவிருக்கும் விண்வெளிக்கப்பல்  பயணத்திற்கு தயார்நிலையில் ஒரு குழுவே இயங்கிக்கொண்டிருந்தது .அதில் தொழில்நுட்...

கால பயணம் (Time travel)- இறந்த காலத்துக்கு செல்வதில் பரடோக்ஸ் பிரச்சனை

கால பயணம் பற்றிய முன்னைய ஆக்கம் . காலபயணம் பற்றிய அடிப்படை இல்லாவிட்டால் வாசிக்கவும் - அழுத்துக காலத்தில் பயணம் செய்வதில் உள்ள பிரச்சனை இறந்த காலத்துக்கு பயணம் செல்வது தான் . எதிர்காலத்தில் பயணம் செய்வதை இதுவரை யாரும் விமர்சிக்கவில்லை. இந்த பிரச்னையை இலகுவாக விளக்குவதானால் ,உதாரணத்திற்கு நீங்கள் 200 வருடங்கள் பின்னோக்கி  சென்று விட்டீர்கள் என்று வைத்துக்கொண்டால் நீங்கள் உங்கள் பிறப்புக்கு முன்னரான  காலப்பகுதியில் இருக்கிறீர்கள் .  அதாவது ஒரு விளைவுக்கு (பிறப்பு ) முன்னரே நிகழ்வு (வாழ்தல் ) நடக்கிறது . இது மிகவும் முரண்பாடானது . இதனை  விளக்குவது தான் பிரபலமான கிராண்ட் பாதர் பரடொக்ஸ். உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் இறந்த காலத்துக்கு சென்று விட்டீர்கள் .அந்த காலத்தில் நீங்கள் உங்கள் சொந்த தாத்தாவையே கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது . நீங்களும் ஒரு துப்பாக்கியை  எடுத்து சுட்டு விட்டீர்கள் . ஆனால் நீங்கள் உண்மையிலேயே பிறக்கவில்லை . உங்கள் தாத்தா உயிரோடு இருந்தால் தானே உங்கள் தந்தை பிறப்பார்  .தந்தை இருந்தால் தானே நீங்கள். ஆகாவே இந்த தொடர்பு வட்...

வெளிப்படையாக பேசுதல்? மறைத்து பேசுதல் ? - நீயா நானா

நீயா நானாவில் நல்ல தலைப்புக்கள் வரும் போது வார இறுதி நாள் ஒழுங்காக செல்லவில்லை என்ற குறையை அந்த இரவுகள் நிவர்த்தி செய்கின்றன .  அது போல இந்த ஞாயிற்றுக்கிழமை(31 /7 /2011 ) ஒளிபரப்பாகிய தலைப்பு மிகவும் சுவாரசியமானதும் ,எமது அன்றாட வாழ்க்கையில் கடந்து வரும் முக்கிய பிரச்சினையுமாகும் .காரணம்  தொடர்பாடல் தான் இந்த காலத்தில் எமது வேலைகளையும் அனைத்தையும் கொண்டு செல்கிறது . வெளிப்படியாக பேசுவது சரியா ? மறைத்து பேசுவது சரியா என்ற விடயத்தில் மிகவும் தெளிவாக இருபக்கம் ஆராயப்பட்டது . வெளிப்படையாக பேசுபவர்கள் ஏமாளிகள் என்றும் அளந்து  பேசுபவர்கள் வஞ்சம் வைத்து பேசுபவர்கள் என்றுமே ஒருவரையொருவர் நினைத்துக்கொண்டிருக்கிறோம் . ஆனால் இதை பொதுவாக பார்ப்பவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் வெளிப்படையாக பேசுபவர்களை நம்பலாம் அமைதியாக ,கமுக்கமாக பேசுபவர்களை நம்ப முடியாது என்ற எண்ணமே நிலவுகிறது .  இந்த இரு பிரச்சனைகளாலும் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் . வெளிப்படையாக பேசுதல் கூடுதலானோரை பாதித்து விடுகிறது .  முன் வைக்கப்பட்ட சில கருத்துகள் மிக பயனுள்ளதாக இருந்தது . வெளிநாட்டவர்கள் க...