பேய்கள் - விஞ்ஞான விளக்கம்

ந்த கடவுள் பேய் இரண்டும் சிறுவயதில் இருந்து குழந்தைகள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாதவர்கள் கிளப்பிவிட்ட புரளியாக இருந்தாலும் பேய்களின் பாதிப்பு வெளிநாடுகளில் நடந்தால் அவர்கள் வேற்று வழிகளை விட இப்போது அதற்கென்று  படித்த ஆய்வாளர்களை வைத்தே ஆராய்ச்சி  செய்கின்றனர் .

இதுவரை காரணம் தெரியாமல் இருந்திருக்கலாம் ,அதற்க்கான விஞ்ஞான அறிவியல் விளக்கங்களை கொஞ்சம் ஆராய்வோமே .

பேய் அடித்தல் அல்லது பிடித்தல் என்று சொல்லுமிடங்களில் ஆய்வாளர்கள் மின்காந்த சக்தியை அளந்து பார்த்திருக்கிறார்கள் . அதில் கிடைத்த அளவு  சாதாரண இடங்களில் இருக்கும் மின்காந்த சக்தியின் அளவை விட மிக அதிகம் . வழமைக்கு மாறான மிகப்பெரிய மாற்றம் என்றும் சொல்லலாம் . இது அருகில் இருக்கும் மின் சாதங்களில் இருந்து வரலாம் அல்லது பூமியின் காந்த சக்தியின் பாகமாக இருக்கலாம்.

ஆனாலும் சில ஆய்வாளர்கள் அதாவது Paranormal Investigators என்று சொல்லப்படுபவர்கள் .இது ஒரு அமானுஷ்ய சக்தி அதாவது Supernatural இருப்பதற்கான சான்று என்றும் பேய்கள் தான் இதை தோற்றுவிக்கின்றன என்று கூறுகிறார்கள் .

பொய்யோ உண்மையோ ஆனால் நாம் அனுபவித்திருக்கிறோம் அல்லவா சரியான விளக்கம் வரும் வரை அலசுவோம் . 

சிலரின் கருத்து இந்த மின்காந்த அலைகள் மனித மூளையினுள் ஊடறுக்கின்றன என்பதே . ஆனா படியால் தானே எந்த வித உடல் பாதிப்பும் இல்லாமல் உணர மட்டும் முடிகிறது . Hallucinations ,Dizziness அல்லது வேறு பல நரம்பியல் சம்மந்தமான பிரச்சனைகள் போன்றன இதனால் தான் ஏற்ப்படுகிறது . 

இந்த Hallucinations என்றால் நேரில் நடக்கும் விஷயம் போல உணர்வுகள் ,புலன்கள் இருக்கும்  ஆனால் மனத்தால் தோற்றுவிக்கப்படுவது .

உதாரணமாக அண்மையில் நீங்கள் விரும்பிய ஒருவர் இறந்திருந்தால் அவரின்  குரல் கேட்டல் ,அல்லது தெளிவாக அவரை பார்க்க கூடியதாக இருக்கும் .

இந்த Dizziness என்பது மயக்கம் ,அல்லது உறுதியற்ற தன்மை ,அறை சுழல்வது போல உணர்தல் போன்றன .

ஆனால் ஏன் இரவில் மட்டும் பேயின் தாக்கம் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு பதில் இதிலேயே இருக்கிறது .


இந்த சூரிய காற்று பூமியின் மின்காந்த அலைகளுடன் குறுக்கிடுகிறது .பூமியின் மின்காந்த சக்தி இரவில் வெளியில் விரிகிறது .மேலே உள்ள படம் தெளிவாக விளக்கும் .

இது தான் மனிதர்களுடைய மூளையில் மிகப்பெரும் தாக்கத்தை செலுத்துவன.


மேலும் பல பரிசோதனைகளில் Infrasound எனப்படும் 20 Hz இலும் குறைந்த ஒலி அலைகள் தான் இப்படி பிகளுடனான மனித தொடர்ப்புக்கு காரணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது . இந்த சத்தங்கள் தான் கண்களினூடு அதிர்வுகளை ஏற்ப்படுத்தி இல்லாத ஒரு விடயத்தை பார்க்க வைக்கிறது என்கிறது ஒரு ஆய்வு .

உண்மையில் சாதாரண மனித காதுக்கு 20 Hz க்கு கீழே உள்ள ஒலிகள் கேட்பதில்லை . அதனால் தான் கேட்பதை விட அதன் விளைவுகள் சாதராண மக்களை பாதிக்கின்றன  .  

ஆனாலும் ஒரு இடத்தில் ஆய்வாளர்கள் இந்த சிறிய ஒலி உருவான  இடத்தையும் கண்டுபிடித்தார்கள். அது மின் விசிறியில் இருந்து வந்தது .அந்த மின்விசிறியை திருத்தியவுடன் அந்த சிறிய ஒளியும் இல்லாமல் போனது .அதன் பின்னர் அந்த அறையில் இருந்தவர்களுக்கு பேய் அறிகுறிகள் தென்படவில்லை .("The Ghost in the Machine" by Vic Tandy and Tony Lawrence )

பிடிச்சிருந்தா கருத்து சொல்லுங்க ..தொடர்ந்து எழுதலாம் .. தொடரும் ...

Source
http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/003093.htm -Dizziness
http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/003258.htm -Hallucinations
http://en.wikipedia.org/wiki/Infrasound -Infrasound

Comments

Jana said…
சிறப்பான, எனக்கு சுவாரகசியமான அதேநேரம் அறிவியலுடனான தேடல்..
(பேய் இல்லை என்று நிரூபிக்க தொடங்கினீர்கள் என்றால், அதுக்கு கோபம் வந்திடும் கவனம்!)
நல்ல அலசல். பகிர்விற்கு நன்றி
Valaakam said…
சுப்பரான ஒரு பதிவு...
என்ன கேள்வி இது... நிச்சயம் தொடரனும் இந்த பதிவை... :)
மிகவும் சுவாரசியமான பகுதி சுதர்சன்... இதில் இன்னும் எனக்கு சரியான தெளிவில்லை காரணம் நான் சந்தித்த சம்பவங்கள் தேவையானால் உங்களைப் போன்ற அறிவியல் அர்வலருடன் வாதிட்டால் அதற்கான சரியான விஞ்ஞான காரணத்தை ஆராய முடியும் காரணம் நானும் அஞ்ஞானத்தை விட விஞ்ஞானத்தை அதிகம் விரும்புபவன்....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன
மிக நல்ல பதிவு... பேய்களை பற்றிய உண்மை சம்பவங்களை தொகுத்து மதன் எழுதிய "மனிதனும் மர்மங்களும்" புத்தகத்தினை வாசித்திருகின்றீர்களா?
நல்ல அறிவுபூர்மான விளக்கமும் பதிவும் நன்றி
உங்கள் பதிவையும் மாதேவியின் வல்லைவெளி முனியப்பர் பற்றிய பதிவையும் கருத்தொற்றுமைக்காக எனது Facebook ல் பகிர்ந்துள்ளேன்.
அருமையான கட்டுரை... கண்டிப்பாக தொடர வேண்டும்!
நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள் தொடருங்கள்.
மிக நல்ல பதிவு.தொடருங்கள்.
sakthistudycentre-கருன் said...
//சரியான அலசல்..//
மிக்க நன்றி :)

//சிறப்பான, எனக்கு சுவாரகசியமான அதேநேரம் அறிவியலுடனான தேடல்.//
நிச்சயம் தொடரும் :)

//பேய் இல்லை என்று நிரூபிக்க தொடங்கினீர்கள் என்றால், அதுக்கு கோபம் வந்திடும் கவனம்!//

அப்பவாவது நேர வந்தா சந்தோசம் தான் :)
FOOD said...
//நல்ல அலசல். பகிர்விற்கு நன்0றி//
மிக்க நன்றி :)

வளாகம் said...
//சுப்பரான ஒரு பதிவு...
என்ன கேள்வி இது... நிச்சயம் தொடரனும் இந்த பதிவை... :)//

நன்றி வளாகம் ..நிச்சயம் தொடர்கிறேன் :)
ம.தி.சுதா said...
//மிகவும் சுவாரசியமான பகுதி சுதர்சன்... இதில் இன்னும் எனக்கு சரியான தெளிவில்லை காரணம் நான் சந்தித்த சம்பவங்கள் தேவையானால் உங்களைப் போன்ற அறிவியல் அர்வலருடன் வாதிட்டால் அதற்கான சரியான விஞ்ஞான காரணத்தை ஆராய முடியும் காரணம் நானும் அஞ்ஞானத்தை விட விஞ்ஞானத்தை அதிகம் விரும்புபவன்....//

மிக்க நன்றி மதிசுதா ..நிச்சயம் .. இருந்தால் பகிருங்கள் :)

முத்துசிவா said...
//மிக நல்ல பதிவு... பேய்களை பற்றிய உண்மை சம்பவங்களை தொகுத்து மதன் எழுதிய "மனிதனும் மர்மங்களும்" புத்தகத்தினை வாசித்திருகின்றீர்களா?//

மிக்க நன்றி முத்து சிவா ..இல்லையே ..நிச்சயம் வாசிக்க வேண்டும் :)
Dr.எம்.கே.முருகானந்தன் said...
//நல்ல அறிவுபூர்மான விளக்கமும் பதிவும் நன்றி//

மிக்க நன்றி டாக்டர் :)

Dr.எம்.கே.முருகானந்தன் said...
//உங்கள் பதிவையும் மாதேவியின் வல்லைவெளி முனியப்பர் பற்றிய பதிவையும் கருத்தொற்றுமைக்காக எனது Facebook ல் பகிர்ந்துள்ளேன்.//

நிச்சயம் ..அந்த பதிவை நான் வாசிக்க முடியுமா ?
:)
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//அருமையான கட்டுரை... கண்டிப்பாக தொடர வேண்டும்!//

நிச்சயம் தொடர்வேன் ..மிக்க நன்றி :)
நிச்சயம் ..மிகக் நன்றி மாதவி :)

மாதேவி said...
//நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள் தொடருங்கள்.//

ஆயிஷா said...
//மிக நல்ல பதிவு.தொடருங்கள்//

நன்றி ஆயிசா :)
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : தைரியசாலிகள் மட்டும் வந்து இந்தப் பதிவைப் படிங்க!

Popular posts from this blog

ராதாமோகனின் வேகமான பயணம் போகலாம் (எனது பார்வையில்)

அர்த்தமுள்ள இந்து மதம் : போகி - தைப்பொங்கல் அர்த்தம்