அர்த்தமுள்ள இந்து மதம் : போகி - தைப்பொங்கல் அர்த்தம்

//அர்த்தமுள்ள இந்துமதத்தின் விளக்கத்தையும் அதனோடு விஞ்ஞான விளக்கத்தையும் ஆராய்ந்து எழுதும் 8 ஆவது பதிவு //
முன்னைய ஏழு பதிவுகள் : அழுத்துக 

வேறு எல்லா மதங்களும் தமது இறைவன் பிறந்த நாளை அல்லது அதனோடு ஒட்டிய நாளை பிறந்த தினமாக/புதுவருடமாக  கொண்டாடும் போது தமிழன் உழவுக்கு முக்கியத்துவம் கொடுத்து உழவர் திருநாளாக தைப்பொங்கலை கொண்டாடி வருகிறான் . தற்ப்போது உழவர்களுக்கு மரியாதை இல்லை என்பதும் மரியாதை கொடுக்கும் சீனா எப்படி வளர்ந்திருக்கிறது என்றும் பார்த்தாலே தெரியும் .

இந்த தைப்பொங்கல் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது . இந்த நான்கையும்  பற்றி பலர் தவறாகவே புரிந்து வைத்துள்ளனர் .

போகி நாள் என்பதை "போக்கி" நாள் என்கிறார்கள் . அதாவது வீட்டில் உள்ள கழிவுப்பொருட்கள் பழையனவற்றை போக்கும் நாள் என்கிறார்கள் .இது முதலாவது தவறு . 

எப்போதும் சுத்தப்படுத்தும் நாளை ஒரு திருநாளாக கொண்டாடியதில்லை .இதென்ன உழவர் சம்மந்தமான நாளில் சம்மந்தமே இல்லாமல் இந்த போகி வருகிறது என சிந்தித்து பார்த்ததில்லையா .

"போகி" என்ற வார்த்தையை தெளிவாக கவனித்தால் தெளிவு பிறக்கலாம் . விளைச்சல் என்பது போகம் . போகத்துக்குரியவன் நிலத்தின்  சொந்தக்காரன் . அதனால் தான் அந்த விழா நிலம் உள்ளவர்கள் வீட்டில் நடக்கும் .

போகத்துக்குரியவனின் விழா "போகி" விழா .


வயலில் இறங்கி உழைக்கும் விவசாயிக்கு உள்ள விழா பொங்கல் விழா ,அவனுக்கு பயன்படும் மாடுகளுக்கான விழா மாட்டுப்பொங்கல் விழா .

அந்த உணவை பகிர்ந்துகொள்ளும் நிலமும் இல்லாத ,விவசாயமும் செய்யாத போது மக்களின் விழா "காணும் பொங்கல்" விழா .

கவனித்துப்பார்த்தால் இது தான் சரியான வரிசை

நிலத்துக்குரியவன் 
விவசாயி 
காளைமாடு 
பொதுமக்கள் 

இந்த ஒழுங்கு பொருத்தமாக வரும் . இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்த தமிழன் சூரியனுக்கு நன்றி செலுத்த ,உழவனுக்கு நன்றி செலுத்த கொண்டாடிய அர்த்தமுள்ள விழா இது . 

Comments

வடை வாங்க வந்துட்டோம்ல ...
அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....
Tamil10, Tamilmanam என்னாச்சு?
Jana said…
உண்மைதான் பலர் இந்த நான்கு பொங்கலுக்கும் தவறான விளக்கங்களையே கொண்டுள்ளனர். ஏன் நான்கு பொங்கல்கள் என்று நானும் குழம்பிய சந்தர்ப்பம் உண்டு. நல்ல தகவல்கள்.
அருமையான பகிர்வு சுதர்சன் நல்லதொரு விளக்கத்தை கண்ணதாசன் போல் அருமையாய் பகிர்ந்திருக்கிறீர்கள்...
ராஜி said…
இப்படியொரு தளம் இருப்பதை அறியாமலே இருந்துவிட்டேன்.இனி அடிக்கடி வருவேன். அனுமதி கிடைக்குமா சகோதரா?
ஏதோ நாலுந்தெரிஞ்சவங்க சொல்றீஹ..கேட்டுக்குவோம்..
@ sakthistudycentre-கருன்

வழமை போல முன்னாடியே வந்துட்டீங்க ..நன்றி :)
@ Pranavam Ravikumar a.k.a. Kochur
நன்றி ..

//Kurinji said...
சூப்பர்....//

நன்றி Kurinji..:)

Jana said...
//உண்மைதான் பலர் இந்த நான்கு பொங்கலுக்கும் தவறான விளக்கங்களையே கொண்டுள்ளனர். ஏன் நான்கு பொங்கல்கள் என்று நானும் குழம்பிய சந்தர்ப்பம் உண்டு. நல்ல தகவல்கள்//

உங்க குழப்பத்திற்கும் இப்போ ஒரு முடிவு வந்திருக்கும் ..நன்றிகள் Jana :)
//ம.தி.சுதா said...
அருமையான பகிர்வு சுதர்சன் நல்லதொரு விளக்கத்தை கண்ணதாசன் போல் அருமையாய் பகிர்ந்திருக்கிறீர்கள்.//

அவருடைய எழுத்து தந்த பரிசு நன்றி மதி சுதா :)

ராஜி said...
//இப்படியொரு தளம் இருப்பதை அறியாமலே இருந்துவிட்டேன்.இனி அடிக்கடி வருவேன். அனுமதி கிடைக்குமா சகோதரா?//

என்ன இப்பிடி கேட்டீங்க நீங்கெல்லாம் வந்தா தான் எனக்கு மகிழ்ச்சி ...உங்களுக்காக தானே ..தாரளமாக ..நன்றி :)
சின்னப்பயல் said...
//ஏதோ நாலுந்தெரிஞ்சவங்க சொல்றீஹ..கேட்டுக்குவோம்.//

வாங்க சின்னப்பயல் ...நான்கை பற்றி தான் சொல்லியிருக்கேன் :)
Speed Master said…
இதோ வந்துட்டேன்
இந்து பண்டிகையை பற்றி அரிய தகவல்கள் தெரிந்துக் கொண்டேன்..
அன்பு நண்பர் சுதர்சனுக்கு...

“அர்த்தமுள்ள இந்து மதம்” என்று சொன்னாலே அது கண்ணதாசனைதான் ஞாபகம் படுத்துகிறுது.. ஆகையால் இந்த தொடர் பதிவுக்கு ஏதாவது ஒரு புதுமையான புதிய தலைப்பை கொடுத்து தனித்து இருங்கள்..

தொடர்ந்து இருப்போம்.. தொடர்பில் இருப்போம்..

வாழ்த்துகளும் வாக்குகளும்..
# கவிதை வீதி # சௌந்தர் said...
//இந்து பண்டிகையை பற்றி அரிய தகவல்கள் தெரிந்துக் கொண்டேன்//.

மிக்க நன்றி ..நிச்சயம் ..ஒரு தலைப்பை தேடி பிடிக்கிறேன் :)
உழ்வுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!
வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்!!
அர்த்தமுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

ராதாமோகனின் வேகமான பயணம் போகலாம் (எனது பார்வையில்)

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்