tag:blogger.com,1999:blog-7893106856209179811.post8154230464582494750..comments2024-01-08T14:21:56.164+05:30Comments on பிம்பம்: உகரச்சுட்டும்(முன்மைச்சுட்டு )ஈழத்தமிழும்சுதர்ஷன் http://www.blogger.com/profile/07423079669232416213noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7893106856209179811.post-71605356989688459312012-08-24T20:02:35.878+05:302012-08-24T20:02:35.878+05:30ஆகா நண்பா . இவ்வளவு நீள பின்னூட்டமா :-)
நீங்க இன்...ஆகா நண்பா . இவ்வளவு நீள பின்னூட்டமா :-)

நீங்க இன்னும் அழகா விபரிச்சு இருக்கீங்க :)சுதர்ஷன் https://www.blogger.com/profile/07423079669232416213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7893106856209179811.post-78668295005754647162012-08-20T01:18:03.529+05:302012-08-20T01:18:03.529+05:30அதாச்சும்…
1st Person = தன்மை
2nd Person = முன்னில...அதாச்சும்…
1st Person = தன்மை
2nd Person = முன்னிலை
3rd Person = படர்க்கை
உவன் = படர்க்கை போல் வரும் முன்னிலைச் சுட்டு!

பொதுவா
இ = முன்னிலை
அ = படர்க்கை
உ = நடுவில் வருவது!

இவன், இவள், இது, இவை
அவன், அவள், அது, அவை
உவன், உவள், உது, உவை

மலையாளத்திலும் உவன் உண்டு-ன்னு நினைக்கிறேன்; அறிந்தவர், அறியத் தாருங்கள்
ஆயாளு அறியும், இவனும் உவனும் அறிகில்லா!

அ=சேய்மை, இ=அண்மை
இது ஆ, ஈ -ன்னு மலையாளத்தில் நீளும் = ஆயாளு, ஈயாளு
தமிழில் கூட நீளும்
அங்கு=ஆங்கு, இங்கு=ஈங்கு!

ஒடனே கேப்பீங்களே, உங்கு=ஊங்கு இருக்கான்னு?:))

உங்கும் இருக்கு!
ஊங்கும் இருக்கு:)

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் “ஊங்கு இல்லை கேடு!

அதே போலத் தான்
அப்பக்கம், இப்பக்கம், உப்பக்கம்

ஊழையும் “உப்பக்கம்” காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்!

இடக் குறியீடுகளுக்கு “அ”/ “இ” போடுவது போலவே, “உ”-வும் போடலாம்
உங்ஙனம், உவ்விடம், உங்கு, உப்பக்கம்…Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7893106856209179811.post-12482194059049507252012-08-20T01:15:51.620+05:302012-08-20T01:15:51.620+05:30உகரச்சுட்டு பதிவு அழகு! வாழ்த்துக்கள்!:)
ஈழத் தமி...உகரச்சுட்டு பதிவு அழகு! வாழ்த்துக்கள்!:)

ஈழத் தமிழில் இந்த “உவன், உவள்” புழக்கம் நிறைய உண்டு! நாம தான் உவனைத் தொலைச்சிட்டோம்:(

ஈழத் தமிழ்: அட பெடியன்களா, “அந்த” வடிவான பெட்டைய, இந்த ஒளிஞ்சான் “உவனுக்கு”ப் பிடிச்சிருக்குதாம்:)

சென்னைத் தமிழில்: டேய் மச்சி, அந்த பிகரை, இதோ ஒளிஞ்சிக்கிட்டு இருக்கானே, இவன் (உவன்) ரூட் வுடறான்:)

ஆங்கிலத்தில் பார்த்தீங்க-ன்னா ஒருத்தன் தொலைவில் இருந்தாலும் He தான்! கிட்டக்க இருந்தாலும் He தான்!
தமிழில் இடம் பொருள் ஏவல் உண்டு:)

எடுத்துக்காட்டாச் சொல்லட்டுமா?
நானும் TPKDஉம் பெங்களூருவில் நேரில் பேசிக் கொள்ளும் போது,

* ராகவன் அதே டேபிளில் கிட்டக்கவே உணவு உண்டால்
= “இவன்” புட்டு விரும்பிச் சாப்புடுவான்”
* ராகவன் அப்போ சென்னையில் இருந்தா
= “அவன்” புட்டு விரும்பிச் சாப்பிடுவான்!

* ராகவன் கிட்டக்க தான் இருக்காக, ஆனா டேபிளில் இல்ல, எனக்கும் TPKD க்கும் chicken vindaloo வாங்கியாற counter-க்கு போயிருக்காங்க-ன்னா
= “உவன்” புட்டு விரும்பிச் சாப்பிடுவான்
= உவனே பில்லும் கட்டீருவான்:))

உவன் = அண்மையில் சேய்மை! அருகில் தொலைவு:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com