இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்
முதல் பதிவு -பேய்கள் விஞ்ஞான விளக்கம் -தொடர்ச்சி
இந்த நிகழ்வு உங்கள் அனைவருக்கும் நிகழ்ந்திருக்கும். ஆனால் சிலர் பேயின் தாக்குதல் என்றும் சிலர் அதை பற்றி வெளியில் கேட்க்கமுடியாமலும் அலட்ச்சியமாகவும் இருந்திருப்பீர்கள் .
நீங்க விழித்திருப்பது போன்ற உணர்வும் ஆனால் எழும்ப இயலாத படி உறைந்தது போன்ற உணர்வும் ஏற்ப்பட்டிருக்கும் .கத்துவதற்கு முயல்வோம் ஆனால் கத்த முடியாது .
யாராவது வருவது போன்ற உணர்வு ,பேய் போன்ற ஒரு உருவம் தெரியும் அல்லது யாரோ நெஞ்சின் மீது அமர்த்திருப்பதோ அமத்துவது போன்ற உணர்வு ஏற்ப்படும் .
ஆனால் வரலாற்றில் இதை பேயின் தாக்குதல் என்றே அழைத்து வந்தனர் .ஆனால் இந்த அதிர்ச்சியான நிகழ்வை விளக்க விஞ்ஞானம் தயார் .
சில செக்கன்கள் அல்லது நிமிடங்கள் உடல் முழுதும் உறைந்த நிலையில் சிறிதளவு சுவாசமும் ,வேகமான கண் அசைவும் இருக்கும் .
தொடரும் ....
மேலே குறிப்பிட்ட இந்த பாதிப்புகள் அவர்களை பேயின் மீது நம்பிக்கை கொள்ள வைக்கிறது . நரம்புகளில் இருந்து மூளைக்கு செய்திகள் தவறாக அனுப்பபடுவதால் இந்த sleep paralysis ஏற்ப்படுகிறது.
சுருக்கமாக இந்த நிகழ்வை விவரிக்கிறேன் . ஒருவர் உறங்கும் போது ,அவரது மூளை தசை சுருக்கங்களை அடக்க தகவல்களை அனுப்பும் .
ஆனால் இதே தசைகளை செயல்ப்படுத்த மூளை தகவலை அனுப்ப முதல் ஒருவர் சுய நினைவுக்கு வந்தாராயின் அப்போதே இந்த உறைந்திருப்பது போன்ற உணர்வு ஏற்ப்படுகிறது. அவரால் உடலை அசைக்க முடியாமல் இருக்கும் .
ஒருவர் முழித்திருக்கும் போது எப்படி உடல் உறைநிலை அடைகின்றது என்பதை விபரமாக அறிய வேண்டுமானால் முதலில் உறக்கம் பற்றி ,அதன் நிலைகள் பற்றி தெளிவு இருக்க வேண்டும் .
இந்த பாலூட்டிகள் உறங்கும் போது மூளை இரண்டு நிலைகளை அடைகிறது .ஒன்று Non REM உறக்க நிலையும் அடுத்தது REM உறக்க நிலை .இந்த NREM மற்றும் ரேம் உறக்க நிலைகள் ஒரு வட்டம் போல மாறி மாறி ஏற்ப்படுகின்றன .
5 ஆவது உறக்க நிலை -ரேம்(Rapid eye movement ) நிலை
இரவு நேர உறக்கத்தில் மனிதன் 80 நிமிடங்கள் NREM உறக்க நிலையிலும் 10 நிமிடம் REM உறக்க நிலையிலும் இருக்கிறான் . மொத்தமாக இந்த 90 நிமிட நிகழ்வு மீண்டும் மீண்டும் 3 தொடக்கம் 6 தடவைகள் நிகழ்கிறது .
இந்த NREM உறக்க நிலையில் உடல் சிறு அசைவுகளையே ஏற்ப்படுத்துகிறது .இதன் போது தான் தூக்கத்தில் நடத்தல் உளறல் போன்ற நிகழ்வுகள் ஏற்ப்படுகின்றன .
இந்த REM உறக்கத்தின் போது தான் இதயத்துடிப்பு ,சுவாச வீதம் ,இரத்த அழுத்தம் போன்றன வேறுபடுகின்றன .கண்களின் துடிப்பு அதிகமாக இருக்கும் காரணம் இதன் போது தான் கூடுதலான கனவுகள் ஏற்ப்படுகிறது .உறங்குபவர் இதன் போது தான் அசையும் கனவில் இருப்பார் .
தொடரும் ....
Comments
:):)
//nice., useful post., Thanks for sharing.//
மிக்க நன்றி :)
FOOD said...
//வித்யாசமான தகவல்கள். தொடரட்டும்//
நன்றி ..நிச்சயமாக ஊக்கம் இருக்கும் வரை தொடர்ந்து வித்தியாசமான தகவல்கள் தருவேன் :)
//nice., useful post., Thanks for sharing..
:):)//
சின்னப்பயல் said...
//ஃப்ராய்டு ரொம்ப படிக்கிறீங்களோ சுதா...? நல்ல தகவல் தான்.தொடருங்க.//
சில நேரங்களில் படிப்பேன்..ஆனால் இது மனதில் இருந்த கேள்வியை தேடிய போது கிடைத்த தகவல்கள் :-)
உங்களின் விஞ்ஞான ரீதியிலான விளக்கம் அருமை.
//வணக்கம் சகோதரம், இன்று தான் உங்களின் பிம்பஙளை முதன் முதலாகத் தரிசிக்கிறேன்.உங்களின் விஞ்ஞான ரீதியிலான விளக்கம் அருமை//
மிக்க நன்றி சகோதரர் நிரூபன் ... haha அம்மா ,அப்பாக்கு இனி விளக்கமா சொல்லுவீங்க என்று நினைக்கிறேன் .... உங்கள் வாழ்த்துக்களுக்கு ஊக்கத்திற்கு நன்றி :)
அருண் காந்தி said...
//அருமை நண்பரே!நான் பலமுறை அனுபவித்த விடயத்தை அறிவியல் ரீதியில் விளக்கியுள்ளீர்கள்! வாழ்த்துகள்...//
நன்றி அருண் காந்தி :-)
//good post sudharshan//
நன்றி ரியாஸ் :)
Speed Master said...
//யப்பா இவ்வளவு மேட்டரா//
ஆமா அமா :)
எனக்கு இதில் நிறைய அனுபவம் இருக்கிறது....