ராதாமோகனின் வேகமான பயணம் போகலாம் (எனது பார்வையில்)
//இலங்கையில் பல மசாலா படங்களை நடிகர்களுக்காக அவர்கள் ரசிகர்களுக்காக வெளியிடும் திரையரங்குகள் இதை வெளியிடாததால் ராதாமோகனின் "பயணம்" பார்க்கும் ஆர்வத்தில் திருட்டு வி சி டியில் பார்த்த அனுபவம் .DVD வந்ததும் ஒளிப்பதிவை ரசிப்பதற்கு மீண்டும் பார்க்க வேண்டும் //
பிரகாஷ் ராஜின் பணச்செலவில் ராதாமோகன் வேகமாகவும் விறுவிறுப்புடனும் தமிழ் சினிமா காணாத, காட்டாத நிலைக்கு விமானத்தில் பட குழுவுடன் சேர்ந்து கூட்டிச்சென்றுருக்கிறார் . இடையிடையே பயணத்துக்குள் ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையின் பயணத்தையும் சேர்த்து நகைச்சுவையாக கேலியான தமிழ் சினிமாவையும் பார்த்த படியே பயத்துடன் சிரிப்பு கலந்த பயணம் இனிது .
பிரகாஷ் ராஜின் பணச்செலவில் ராதாமோகன் வேகமாகவும் விறுவிறுப்புடனும் தமிழ் சினிமா காணாத, காட்டாத நிலைக்கு விமானத்தில் பட குழுவுடன் சேர்ந்து கூட்டிச்சென்றுருக்கிறார் . இடையிடையே பயணத்துக்குள் ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையின் பயணத்தையும் சேர்த்து நகைச்சுவையாக கேலியான தமிழ் சினிமாவையும் பார்த்த படியே பயத்துடன் சிரிப்பு கலந்த பயணம் இனிது .
சென்னையில் இருந்து டெல்கி செல்லும் பயணிகளை பாகிஸ்தான் கடத்திச்செல்லும் தீவிரவாதிகள் யூசுப் கான் எனும் இன்னொரு தீவிரவாதியை விடுதலை செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்து தமது கோரிக்கையை முன் வைக்கின்றனர் . இந்த வழமையான சினிமா திரைக்கதையில் யதார்த்தமான மாற்றம் ஏற்ப்படுகிறது .அது ராதாமோகனின் சாமர்த்தியம் . இடையே தீவிரவாதி சுட்டதில் விமான கட்டுப்பாட்டில் பாதிப்பு ஏற்ப்பட்டு திருப்பதியில் தரையிறக்கப்படுகிறது . மிகுதி திரைக்கதையை வேகமாக திருப்பிய திருப்பங்களை படத்தில் பாருங்கள் .
விமானத்துக்குள் ,வெளியில் ,பத்திரிக்கை நிருபர்கள் என பல கோணங்களில் கதையை ,திரைக்கதையை கச்சிதமாக கொண்டு சென்றுள்ளனர் .திரைக்கதை யதார்த்தமாக இருக்க முயற்சி செய்துள்ள இயக்குனர் ராதாமோகனிட்க்கு பாராட்டுகள் .
இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயின் எனும் தமிழ் சினிமா வட்டம் இல்லாதிருந்தும் படத்தில் வரும் அனைத்து பாத்திரங்களும் மனதில் ஒட்டிக்கொள்கின்றன ,கூடவே திரைக்கதையும் ஒரு பாத்திரமாக .நாகர்ஜுன் ,பிரகாஷ்ராஜ் ,டீலா நோ டீலா ரிஷி ,சனாகான் ,தலைவாசல் விஜய் ,பாஸ்கர் ,ரமணி VS ரமணி புகழ் பப்லு என அனைவருமே இதில் ஹீரோக்கள் . இது படத்திற்கு மிகப்பெரிய வெற்றி .
ஒரு சினிமா நடிகரின் முகத்திரையை எம்மை அனுபவிக்க வைப்பதன் மூலம் கிழித்து எறிந்திருக்கிறார் ராதாமோகன் . சினிமாவில் நடிக்கும் ஹீரோவிடம் இருந்து நிஜ வாழ்க்கையில் ஹீரோயிசத்தை எதிர்பார்க்கும் ஒரு சாதாரண ரசிகனையும் கரப்பான் பூச்சிக்கே பயப்படும் ,அந்த நிஜ வாழ்க்கையில் ஹீரோ அல்லாத நிழல் வாழ்க்கை ஹீரோவையும் தனியே காட்டியிருக்கிறார் .
ஒரு பயணியாக வரும் குமாரவேல் ஜோசியராக வரும் பாலாவுக்கு அண்மையில் இருந்து பயணிக்கிறார் . ஏன் தம்பி தீவிரவாதிகளிடன் கோவப்படுகிறாய் என்று ஜோசியன் கேட்க்க ,உங்களை மாதிரி ஜோசியம் படிச்சிருந்தா பரவாயில்லை ,காந்தியையும் கார்ல் மாக்சையும் படிச்சா இப்பிடி தான் என்று கூறுமிடம் அருமை .தனித்து தெரியும் வசனம் எழுதியவருக்கு பாராட்ட வேண்டும் .
படத்தில் நடிக்கும் நிஜ ஹீரோ தீவிரவாதிகளை பார்த்து பயந்துகொண்டிருக்க
சாம்ஸ் ஹீரோவை பார்த்து : ஏதோ பிளான் பண்றீங்க ? புரியுது ..அஞ்சே அஞ்சு பேர் தான் சேர் .."நீங்க பாத்தா சயிலேன்ட் பாஞ்சா வயலேன்ட் " இது உங்க படத்திலை நீங்க சொன்ன பஞ்ச சேர் - பப்லுவின் முகபாவமும் ,சாம்சின் நடிப்புமே வயிறுகுலுங்க சிரிக்க வைத்தது .
ஜோயிசர்:-சாமி கோயில் இதெல்லாம் இல்லைன்னா ஜனங்க என்ன பண்ணுவாங்க சொல்லு ?
குமாரவேல் :-தானா உழைச்சு முன்னுக்கு வந்திருப்பாங்க .... எனும் வசனங்களும் வசனகர்த்தாவின் அடையாளம் .
இவ்வளவு விடையங்களை தாண்டி அனைத்தையும் நிழல்ப்படம் போல மனதில் பிடித்து வைத்திருக்கிறது மனது .பயணங்களில் மேடுபள்ளங்கள் இருந்தாலும் அதை விட்டு விட்டு பயணத்தை மாத்திரம் ரசிப்போம் இல்லையா அதே போல குறைகளை விட்டு தமிழுக்கு வந்திருக்கும் புதிய சினிமாவை வரவேற்ப்போம் .. நல்ல சுவாரசியமான பயணம் .
இவ்வளவு விடையங்களை தாண்டி அனைத்தையும் நிழல்ப்படம் போல மனதில் பிடித்து வைத்திருக்கிறது மனது .பயணங்களில் மேடுபள்ளங்கள் இருந்தாலும் அதை விட்டு விட்டு பயணத்தை மாத்திரம் ரசிப்போம் இல்லையா அதே போல குறைகளை விட்டு தமிழுக்கு வந்திருக்கும் புதிய சினிமாவை வரவேற்ப்போம் .. நல்ல சுவாரசியமான பயணம் .
Comments
ராதாமோகனின் படங்கள்போலவே.
//வித்தியாசமான பார்வை.. விமர்சனம் அருமை.//.
நன்றிகள் :)
குறிஞ்சிகுடில்
படம் இன்னும் பார்க்கவில்லை. நல்ல DVD வரட்டும் போர்ப்போம்.
//டி.வி.டி. பாக்கிறமாதிரி இருக்கா? வாங்கணுமே?//
இல்லை ,ஒளிப்பதிவு ஒலிப்பதிவு அவ்வளவு தரம் என்று சொல்ல முடியாது ..ராதாமோகனின் படம் பார்க்க வேண்டும் என்ற அவசரத்தில் பார்த்துவிட்டேன் :)
//நல்ல விமர்சனம். உண்மைதான் ராதாமோகனின் அழகியதீயே, மொழி, அபியும் நானும் என்ற உணர்வோட்டமான படங்களிலிருந்து வித்தியாசமான ஒரு அனுபவமாக பயணம் உள்ளது. இந்த திரைப்படம் திரையரங்கில் இலங்கையில் வெளிவராதது உங்களைப்போல எனக்கும் மிகப்பெரும் ஏமாற்றமே.
படம் இன்னும் பார்க்கவில்லை. நல்ல DVD வரட்டும் போர்ப்போம்//
நன்றி ஜனா..:) ஆர்வத்தில் பார்த்து விட்டேன் டி வி டி வரட்டும் மீண்டும் பார்க்க வேண்டும் ..:).
//நல்ல விமர்சனம். நானும் டிவிடி வாங்க வேண்டியிருக்கு//
நன்றி டாக்டர்...:)
"you are jst old. nt experienced"
”உங்க ராணுவத்திகிட்டையும் போலிசுகிட்டையும் மூணு நாளா ஒரு பொன்னிருந்தா என்னவாகும். விட்டுப்பார். அப்பத்தெரியும்”
இன்னும் எத்தனையோ....
செம வசனம்... நான் இன்னும் படம் பார்க்கலை... ஏனோ பார்க்கும் எண்ணம் இல்லை...