கலிலியோ கலிலி - வானவியல் அறிவியலின் ஆரம்பம்
நவீன அறிவியலின் தந்தை ,அறிவியலுக்காய் தன்னையே அர்ப்பணித்த அந்த மனிதன் கலிலியோ கலிலியின் பிறந்தநாள் இன்று (கி பி 1642 ). அறிவியலின் பிறப்பு என்றும் சொல்லலாம் .கலிலியோ இறந்த தினத்தன்று 300 ஆண்டுகள் கழித்து பிறந்தவர் ஸ்டீபான் ஹவ்கிங் என்பது மேலதிக தகவல் .
படங்கள் :- Google
சூரியனை தொடர்ந்து அவதானித்து சூரியப்புள்ளிகளை கண்டுபிடித்தவர் .அதனாலேயே தனது கண் பார்வையை இறுதிக்காலத்தில் இழந்தவர் . மதத்தின் கொடும்கோல் ஆட்சி நிலவிய வேளையிலும் தனது கொள்கைகளை நிரூபிக்க தவறாதவர் பற்றி பெரிதாக அறிந்திராதவை பற்றி பார்ப்போம் .
அறிவியல் அவதானிகள் ,விஞ்ஞானிகள் வளர்ந்த காலம் அது . அவர்கள் மதங்கள் அழுத்தம் பிரயோகித்தன . விஞ்ஞான ,அறிவியல் வளர்ச்சியை அடக்கி ஒடுக்கிய காலம் அது .
அவரது முதல் கண்டுபிடிப்பு பைசா நகர தேவாலயங்களில் தொங்கிக்கொண்டிருந்த எண்ணெய் விளக்குகள் ஆடிக்கொண்டிருந்தன.அவர் அதன் நேரத்தை கணக்கிட்டார் .நேரத்தை கணக்கிட தனது நாடித்துடிப்பையே பயன்படுத்தினார் .அது பிற்காலத்தில் ஊசல் மணிக்கூடுகள் வர உதவின .
ஊசலை அதன் அலைவு வைத்து(அலைவில் எந்த நிறையை ஊசலில் கட்டினாலும் ஒரே மாதிரி தான் அலைவு இருக்கும் ) மேலிருந்து கீழே போடும் நிறைகள் எதுவாக இருந்தாலும் அது கீழே விழ ஒரே நேரம் தான் என முடிவுக்கு வந்தார் .சிலர் நினைக்க கூடும் பாரமான பொருட்கள் தான் உடனே கீழே விழும் என்று .அவ்வாறே எல்லோரும் அப்படி நினைத்து இதை ஏற்க்கவில்லை . அதனை அவர் பரிசோதனை மூலம் அப்போதே மக்களுக்கு நிரூபித்தார் .
பைசா கோபுரத்தின் மேலே ஏறி நின்று இரு வேறு பாரமான பொருட்களை கீழே போட்டார் .இரண்டும் ஒரே நேரத்தில் விழுந்தது .
1609 இல் வானியல் தொலைக்காட்டியை கண்டுபிடித்து அதன் உருப்பெருக்கும் வலுவையும் அதிகரித்தார் .அதன் மூலம் வியாழனின் 4 உப கோள்களையும் கண்டு பிடித்தார் .அவரே சந்திரனில் மேல் புறத்தில் இருக்கும் மலைகளையும் பள்ளங்களையும் கண்டறிந்தார் .
அவர் 1632 இல் பிரபஞ்சத்தின் பெரும் தொகுதிகள் எனும் ஆராய்ச்சியை வெளியிட்டார் . இவ்வளவு கண்டுபிடிப்புகளை செய்தவர் மகிழ்ச்சியாக வாழ்ந்தார் என்கிறீர்களா ? இல்லை என்பது தான் பதில் .
கலிலியோவின் நண்பன், இத்தாலியை சேர்ந்த Giordano bruno (ப்ருனோ )(கி பி 1548 -1600 ) எனும் வானவியலாளர் இந்த பிரபஞ்சம் முடிவிலி என்ற கூற்றை வெளியிட்டதற்கு கிறிஸ்தவ ஆட்ச்சியாளர்கள் அவரை தீ மூட்டி கொன்றனர் .
கலிலியோ கலிலுக்கு தெரிந்திருந்தது அந்த நேரத்தில் உண்மை எவ்வளவு ஆபத்தானது என்று . காரணம் கத்தோலிக்க தேவாலயங்கள் 1000 வருடங்களுக்கு மேலாக சூரியன்,மாற்ற கோள்கள் தான் தான் பூமியை சுற்றி வருகிறது என கற்றுக்கொடுத்துக்கொண்டிருன்தனர் .
ஆனால் பூமியையும் சூரியனையும் பிரபஞ்சத்தையும் அவதானித்து கலிலியோ கலிலி தான் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் . பூமி தான் சூரியனை சுற்றுகிறது என்று .அதனை முதலில் நண்பர்கள் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை . அப்படி உலகம் சூரியனை சுற்றுகிறது என்றாள் நாம் அதை உணர வேண்டும் என கேள்வி கேட்டனர் ?
ஒரு நீர் ஊற்றப்பட்டு மீன் போடப்பட்ட குடுவையை சுற்றி அசைத்தால் மீன் அப்படியே தான் இருக்கும் . அதே போலவே பூமியின் அசைவு நம்மை கடினப்படுத்தாத வகையில் நிகழ்கிறது என விளக்கினார் .ஆனாலும் அந்த நேரம் இதை வெளியிடுவது ஆபத்து என்று கலிலியோவுக்கு தெரிந்திருந்தது .
அவர் தனது விளக்கங்களை புத்தகமாக வெளியிட்ட போது மக்களிடையே வரவேற்ப்பு பெற்றது . இந்த விடயம் போப்பை கோவத்துக்கு உள்ளாக்கியது . கலிலியோவை வீட்டுக்காவலில் வைத்து அவரது படைப்புகளை தடுத்தனர் . அங்கேயே அவர் இறந்தார் .அவருக்கு போது மரண சடங்கு நடத்த தேவாலயம் அனுமதிக்கவில்லை .
அந்த மனிதனின் இறுதி காலம் ,அறிவியலின் ஆரம்பம் அன்று முடிந்து போனது . ஆனால் அறிவியலை மதங்களால் நிரந்தரமாக தடுக்கமுடியவில்லை என்பது நவீன காலத்தில் தெரிகிறது .(ஆனாலும் அண்மையில் டேஸ்ட் டியூப் பேபியை கண்டுபிடித்தவருக்கு நோபெல் பரிசு அளித்ததை வத்திக்கான் எதிர்த்தது உண்மை )
படங்கள் :- Google
Comments
மிக்க நன்றி ,நிச்சயம் ..உங்களை போன்றோர் ஊக்கத்தில் மேலும் பயனுள்ள விடயங்கள் எழுதுவேன்
பகிர்வுக்கு நன்றி சுதர்ஷன், இப்போதும் என்னால் நம்பமுடியுமா என்பது சந்தேகம் தான், நாளை சோதிக்க வேண்டும், ஒரு பஞ்சையும் அல்லது காகிதத்தையும் அதற்க்கு மாற்றாய் ஒரு கல்லையும் என்வீட்டு மாடியிலிருந்து கீழே விட்டு!! சோதனைக்கு முன்பே ‘கமென்டியது‘ தவறுதான், இருந்தாலும் என்ன செய்வது, ஆர்வக்கோளாறுதான். இப்படி வெளி நாட்டு அறிஞர்களை கொண்டாடும் நாம் நம் உள்நாட்டுக்காரர்களை கண்டுகொள்கிறோமா?? உங்கள் நாட்டிலேயே, சித்தர்கள் ராஜ்ஜியம் என்று ஆராய்ந்து எழுதுகிறார், பாருங்களேன் நம் தமிழர்களின் ஆராய்ச்சி திறமையையும். கொஞ்சம் அதிகம் எழுதிவிட்டேனோ?? யோசித்து பிரசுரியுங்கள்.. தவறிருந்தால் மன்னிக்கவும்.
மிக்க நன்றி சதீஷ் குமார் :)
நன்றி சமுத்ரா :)
//தெரியாத பல விவரங்களை தந்திருக்கிறீர்கள் நண்பரே.. மிக்க நன்றி//
நன்றி பாலா நிச்சயம் இது தொடரும் :)
//நல்ல தகவல்கள் பகிர்ந்துள்ளீர்கள்... நன்றி.//.
நன்றி அப்பாவித்தன்கமணி :)
புறக்கணிக்க தக்க எடையை கொண்டு பரிசோதிக்க வேண்டாம் .. கூறியது சரி ,நம்மவர்கள் பற்றியும் எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன் .. :)