அமானுஷ்யம்-மனிதன்- டெலிபதி

பல விஞ்ஞான ஆய்வுகளையும் அறிவியலையும் உற்றுநோக்கும் போது அனைத்தும்  ஒன்றோடு ஒன்று இணைந்தவையே. அவதார் படத்தை ஒரு சிறு உதாரணமாக சொல்லலாம் .

நேரம் ,காலம் எனும் பாதையில் அனைவரும் ஒன்று .அதே  நேரம் இந்த எண்ணங்கள் சிந்தனைகள் எனும் வடிவங்களும் உண்டு . ஒவ்வொரு  மனிதர்களிடமும் தனிப்பட்ட ரீதியில் அமானுஷ்ய சக்தி இருக்கிறது என கேள்விப்பட்டிருப்போம் .

சிலரால் பேய்களுடன் , ஆவிகளுடன் உரையாட முடியும் என கேள்விப்பட்டிருப்போம் ,சிலர்  காணும் கனவுகள் அப்படியே மீண்டும் நடக்கும் . இவற்றை திரைப்படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் சில வேளைகளில்  அவதானித்திருப்போம் .அவை பற்றி கொஞ்சம் பார்ப்போம் .சிலருக்கு எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை கணிக்க முடியும் . சிலர் ஏதாவது விழாக்கள் பற்றி செய்தி  எதிர்பார்க்கும் போது அந்த செய்தி அழைப்பாக வரும் .காணும் கனவுகள் அனைத்தும் அப்படியே எதிர்காலத்தில் நடக்கும் .

இது Extra sensory perception எனப்படுகிறது . இது கேட்டல் ,சுவைத்தல் , பார்த்தல் ,உணர்தல்  போன்ற புலன்களுக்கு அப்பாற்ப்பட்டது. இது உடலோடு சம்மந்தப்பட்டது அல்லாது சிந்தனை ,எண்ணங்களோடு சம்மந்தப்பட்டது . 


இதில் பல வகைகள் உண்டு 


1 . Telipathy  - டெலிபதி- வேறு ஒருவருடைய எண்ணங்களை ,மனதை படிக்கும் திறன்
2 . Clairvoyance - வேறு ஒரு இடத்தில் இடம்பெறும் விடயங்களை அவதானிக்க கூடிய தன்மை 
3 . Precognition - எதிர்காலத்தை அவதானிக்கும் திறன் 
4 . Retrocognition - இறந்தகாலத்தை அவதானிக்கும் திறன்
5 . Mediumship -இறந்த உயிர்களினூடான உரையாடல்...
6 . Psychometry -  ஒரு பொருளை தொடுவதன் மூலம் ஒரு நபர் பற்றி , ஒரு இடம் பற்றி அறிந்துகொள்ளல் .

போன்ற பல வகைகள் உண்டு .]

இது ஒரு உதாரணம் ..இவரால் அந்த  நெற்றியின்  மீது இருக்கும் வடிவம் எது என உணரமுடியும்.

இதில் விஞ்ஞான ரீதியாகவும் ,மனோதத்துவ ரீதியாகவும் தர்க்கங்கள் தொடர்கின்றன .

இதில் டெலிபதி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் . இது ஒருவகை எண்ண அலைவரிசைகள் பரிமாற்றம்  போலவே. மின்காந்த அலைகள் போல ஒருவகை அலைகள் இரு எண்ணகளிடையே உரையாடுவதே இது என  ஒரு கருத்து வைக்கப்பட்டிருந்தது .

ஒருவகை சக்தி பரிமாற்றம் இரு முனைகளுக்கிடையே இடம்பெறுகிறது என கூறப்பட்டிருந்தது .

உண்மையில் இவை என்ன என்பதை இரு புறமும் ஆராய்ந்து பார்ப்போம் ..

தொடரும் .........

பிடித்திருந்தா மறக்காம ஓட்டு போடுங்க ..அனைவரையும் சென்றடைய .. உங்கள் பின்னூட்டங்கள் தான் இன்னும் எழுத தூண்டும் ,.. நன்றி ...

Comments

Unknown said…
எல்லாத்தையும் உடனே தெரிஞ்சிக்கனும் போல ஆவலா இருக்கு. சீக்கிரமா எழுதுங்க. நன்றி.
எனக்கு மிகவும் பிடித்தமான டாபிக்கை ஆரம்பித்திருக்கிறீர்கள்... எனக்காகவாவது தொடர்ந்து எழுதுங்கள்...
நன்றி ...நிச்சயமாக எழுதுகிறேன் டிங் டாங் .. :)
உங்களுக்காக ஸ்பெஷலாக முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறேன் philosophy prabhakaran .. இவ்வாறான விடயங்கள் மனிதன் தன்னிலேயே அறியாதவை :))
தொடருங்கள்..நானும்..:-)
ibza said…
இது போன்ற தலைப்பிலான பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும், சுவாரசியாகவும் இருக்கும்.. தொடருங்கள் விரைவில்..
Unknown said…
Nice!
Write more!! :)
Segar said…
ம்ம் .... ஆரம்பமே அமர்க்களமா இருக்கு! சீரியல் மாதிரி நடுவில தொடரும் வந்திடுச்சு .. அதான் பீலிங்ஸ் !!!
Anonymous said…
pls write more things about telepathy......pls sir

Popular posts from this blog

இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்

ராதாமோகனின் வேகமான பயணம் போகலாம் (எனது பார்வையில்)

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்