அமானுஷ்ய சக்தி - கனவு உலகம் -தொடர் 2

சென்ற  பதிவில் இந்த ஐந்து புலன்களின் ஊடான உலகத்தொடர்ப்பையும் தாண்டி ஒரு வித சக்தி ,அது ஆறாவது உணர்வாக ஒரு வித அமானுஷ்ய சக்தி இருப்பது பற்றி பார்த்தோம் . உதாரணமாக ஒருவரை நினைக்கும் போது அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வரும்.. .முதலாவது பதிவு  வாசிக்க :- அமானுஷ்யம்  - ESP  முதலாவது பதிவுக்கு தந்த உற்ட்சாகத்திர்க்கு  நன்றி வாசக நண்பர்களே :)

ஆதிகாலம் தொட்டே இது நிலவி வந்தாலும் நவீன விஞ்ஞான ,மனோதத்துவ முறையில் இருபதாம் நூற்றாண்டில் முதற்ப்பகுதியிலேயே டியுக் பல்கலைக்கழக பேராசிரியர்,பிரபல அமானுஷ்ய தேடல் விஞ்ஞானி( paranormal research )  J.B. Rhine என்பவரால்  இது 1934 இல் அறிமுகப்படுத்தப்பட்டது .


கூடுதலாக அனைவரிடமும் காணப்படும் ஒன்று ,அதை நாம் அன்றாடம் அனுபவிக்கிறோம் என சிலரும் , அது ஒரு வித மனோதத்துவ சக்தி கடத்தப்படும் நிலை எனவும் அதை சிலரால் மட்டுமே செய்ய முடியும் எனவும் கூறுகின்றனர் . ஆனால் சிலருக்கு சாதாரணமானவர்களை விட அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது .

இது இரு வித சாதாரண ஒளி , எக்ஸ் ரே கதிர்கள் கடத்தப்படுவது போல சாதாரண விடயம் எனவும் ஆனால் இதை விஞ்ஞான ரீதியில் இன்னும் அறியமுடியவில்லை எனவும் ஒரு தியரி இருக்கிறது .

ஆனால் இந்த தியரி டெலிபதிக்கு மட்டுமே பொருந்தும் .Precognition - எதிர்காலத்தை அவதானிக்கும் திறன், Retrocognition - இறந்தகாலத்தை அவதானிக்கும் திறன் களுக்கு பொருந்தாது . காரணம் ஒரு மூளையில் இருந்து ஒரு செய்தியை அனுப்பும் போது அதனை வாங்குவதற்கும் ஒரு பெறுனர் இருக்க வேண்டும் .

ஒரு சில உதாரணங்கள் நடைமுறை வாழ்க்கையில் சொல்லலாம் .. "இப்ப தான் நினைச்சன் உன்னிடம் இருந்து அழைப்பு வருகிறது" என நாம் அடிக்கடி அன்றாட வாழ்க்கையில் சொல்வதுண்டு . சிலர் பொய்யாகவும் சொல்வதுண்டு ,ஆனால் பெரும்பாலும் அது உண்மையே .


ஆனால் இந்த செயல்ப்பாடு இருவர் இருக்கும் தூரத்தில் தங்கியிருப்பதில்லை . உதாரணமாக ஒரே அறையில்  இருக்கும் இருவருக்கும் , உலகில் வேறு வேறு மூலையில் இருக்கும் இருவருக்கும் இடையில் இந்த இன்னொரு சக்தி பரிமாற்றம் ஒரே மாதிரியாக இருப்பது உணரப்பட்டுள்ளது . ஆகவே இது எந்த அலைகளாக இருப்பதற்கும் சாத்தியம் இல்லை .மற்றும் உடலில் அவ்வாறான சக்தியை வெளிவிடக்கூடிய  எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை .

இத்தகைய குழப்பமான  நிலையில் இன்னொரு தியரியும் முன்வைக்கப்பட்டுள்ளது . அது எமக்கு தெரியாத சமாந்தர உலகம் பற்றிய தியறியோடு  சம்மந்தப்பட்ட விடயம்  . இன்னொரு நேரம் வேறொரு நிகழ்வில் இருக்கும் எம்மால் அந்த உணர்வுகளை மட்டும் உணர முடியும் . சமாந்தர உலகம் பற்றி தெளிவுற எனது 12B திரைப்படம் பற்றிய பதிவு .

இவ்வளவு குழப்பமான உணரமுடியாத பரிசோத்தித்து தெரியாத தியரிகளுக்கு நடுவில் எப்படி இதை ,இந்த அமானுஷ்யங்களை ஏன் நம்பவேண்டி இருக்கிறது ?எப்படி நம்புவது ? என்பது பற்றி பார்ப்போம் .

சிலருக்கு ஏதாவது கெட்டது நடக்கப்போகிறது என மனம் உறுத்தும்.அவரது நெருங்கிய உறவுகளுக்கு உண்மையிலேயே ஆபத்து ஏற்ப்படலாம் . ஆனால் இது டெலிபதியோடு சம்மந்தப்பட்டது அல்ல . இவைகள் பற்றியும் ஆராய்வோம் .. தொடரும் ...

கொஞ்சம் நகைச்சுவைக்கு ..சிந்திக்கவும் ... 
பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள் .. நன்றி ..

Comments

ஜீ... said…
nive! wishes!! :)
ibza said…
மிகவும் சிறிய பதிவாக இருப்பதால் உடனே படித்துவிட்டேன். நகைச்சுவப்படம் மிகவும் அருமை.
அடுத்த பதிவில் விரிவான தகவல்களை எதிர்பார்க்கிறேன்.
எனக்கு அறிந்து கொள்ள ஆசை பட்ட தகவல்கள்.

பல முறை அதிசய பட்டுருக்கிறேன், நான் மனதில் நினைத்து கொண்டிருக்கும் பாடலை எதிரில் வருபவரும் பாடுவார், காரணத்தை அறிய முற்பட்ட போது தான் என்னுடைய நண்பர் கூறினார் இருவருக்கும் ஒரே அலைநீளம் இருந்தால் ஒரே செய்தியை இருவரும் நினைப்பர் என்று, ஆனாலும் அதை பற்றி நிறைய அறிய முற்பட்டு இணையத்தில் தேடியும் எனக்கு சரியான தகவல்கள் கிடைக்க வில்லை.

அதை பற்றி தங்களுடைய பதிவு இருப்பது நல்லது, மேலும் செய்திகள் அறிய விருப்பம்.
Anonymous said…
mine Sony Ericsson W700i..

Popular posts from this blog

கண்ணாளனே...!

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

கலாவல்