ஈ மெயில் @ குறியீட்டின் வரலாறு

முன்னைய ஒரு பதிவில் Blog  எனும் பெயர் எப்படி வந்தது பிளாக்கர் எனும் பெயர் எப்படி வந்தது என்று பார்த்தோம் ... அதனை பார்க்க - BLOGGER


அதே போல நாம் பாவிக்கும் @ சையின் (குறியீடு )   ஒரு நிர்ணயிக்கப்பட்ட குறியீடு அல்ல .


முன்னர் @ குறியீடு ஒரு விலையையோ நிறையையோ குறிக்கவே பயன்படுத்தப்பட்டது . உதாரணமாக நீங்கள் ஐந்து அப்பிள்கள் $ 1 .25  க்கு வாங்கினால் 5 அப்பிள்கள் @ $ 1 .25 எனவே அனைத்து விலைப்பட்டியலிலும் (பில்களிலும்) குறிப்பிடப்பட்டுக்கொண்டு இருந்தது  .

இந்த குறியீடு தோன்றியதற்கு இரு கதைகள் உண்டு . 

முன்னர் மத குருக்கள் புத்தகங்களை வெளியிலோ  அல்லது மக்களுக்கு அறிமுகப்படுத்த முதலோ அவற்றில் ஒரு பிரதியை எடுத்து வைப்பது வழக்கம் . அந்த பிரதி மீண்டும் கையால் எழுத வேண்டிய நிலையே இருந்தது . அதன் போது இடையிடையே வரும் பொதுவான சொற்களுக்கு  ஸ்ட்ரோக் பாவிக்கப்பட்டது . அதன் போதே @ குறியீடும் பாவிக்கப்பட்டது . இது பிரதிகளை எழுதுவதில் காலம் செலவளித்தவர்களின் வாழ்க்கையின் நீண்ட நேரத்தை மீதப்படுத்தியது .

இன்னொரு கதையும் உண்டு ..

அளவிடும் கருவி (ஒரு ஜாடி ) AMPHORE  என்பதன் குறுகிய வடிவமே @ குறியீடாக பாவிக்கப்பட்டது . அதனை குறிக்கும் விதமாக 1536  Francesco Lapi எனும் வியாபாரியால் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததை இத்தாலியை சேர்ந்த ஒருவர் கவனித்தார் ..


ஆனால் இது வேறு நாட்டவர்களால் வேறு வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது .   • apestaart - Dutch for "monkey's tail"
  • snabel - Danish for "elephant's trunk"
  • kissanhnta - Finnish for "cat's tail"
  • klammeraffe - German for "hanging monkey"
  • kukac - Hungarian for "worm"
  • dalphaengi - Korean for "snail"
  • grisehale - Norwegian for "pig's tail"
  • sobachka - Russian for "little dog"
பொதுவாக அனைத்து நாடுகளிலும் தற்போது @ குறியீடு என்றே அழைக்கப்படுகிறது .

மறக்காம ஓட்டையும் போட்ருங்க ..அனைவரும்  வாசிக்கட்டுமே ...

Comments

@ குறியீட்டின் வரலாறு ஓகே

ஆனால் இந்த குறியீடு மின்னஞ்சலுக்கு எப்படி வந்தது, அந்த செய்தியை காணோம்

Popular posts from this blog

இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்

ராதாமோகனின் வேகமான பயணம் போகலாம் (எனது பார்வையில்)

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்