Monday, May 17, 2010

பெண் அடிமைத்தனமும் சமூக அடிமைத்தனமும்

பெண் அடிமைத்தனமும் அதன் காரணத்தையும் மற்றும் எம் சமூக தவறுகளையும் அடிப்படையில் இருந்து இனம் காணலாம் என்ற அடிப்படையில் எழுதும்  பதிவு . இந்த முயற்ச்சிக்கு உங்கள் வரவேற்ப்பு தேவை .
=========================================================================

மாதம் தோறும் ஏன் வாரம் தோறும் கூட பெண் விடுதலை பற்றிய ஆக்கங்கள் பெண்களாலும் பலராலும் எழுதப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது . அது ஏதாவது மாற்றத்தை ஏற்ப்படுத்தியதா  என்று பார்த்தால் பெரிதாக இல்லை என்றே சொல்ல வேண்டும் . காரணம் வெறும் பேச்சிலும் எழுத்திலும் மட்டுமே பெண் விடுதலை இருப்பது .

எந்த ஒரு விடயத்தையும் அடிப்படையில் இருந்து பார்க்கும் போது இந்த விடயத்தையும் அடிப்படையில் இருந்து பார்க்கத்தோன்றும் . பெண் விடுதலை எனப்படும் போது அது நிச்சயம் அவள் திருமணமாகிய பின்பு தான் போகிறது எனும் கருத்து அனைவரிடமும் காணப்படுகிறது . கணவரால் அடிமைப்படுத்தப்படுகிறாள் , துன்புறுத்தப்படுகிறாள் , சுதந்திரம் கொடுக்கப்படுவதில்லை என்றெல்லாம் ஒரு கருத்து உலாவுவதில் சந்தேகங்கள்  இல்லை .

இதன் ஆரம்பம் என்ன என்று பார்த்தால் ஒரு பெண்ணால் தான் முதன் முதலாக ஒரு பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள் . அது வேறு யாருமல்ல. அவளின் தாய் , அவளின் பாட்டியாக கூட இருக்கலாம் . பெண் பிள்ளை மாதிரி அடக்க ஒடுக்கமாக வீட்டில் இரு என முதல் அதட்டல் வீட்டில் இருந்தே ஆரம்பம் . பெண் பிள்ளைகள் கண் படும் படியே " நீ பெண்ணாக பிறந்து தொலைத்து விட்டாய்" என பேசுவது ,ஆண் பிள்ளைகளை உயர்த்தி வைப்பது என அடிப்படைகளே பிரச்சனையின் ஆரம்பம் . பெண் பிள்ளையானால் பொருள் கொடுக்க வேண்டும் , வீட்டிற்க்கு பாரம் என ஆரம்பத்திலேயே அவள் மீது ஒரு வித அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது .

ஏன் ஒரு தாய் பெண்ணாக இருந்து கொண்டு இப்படி செய்கிறாள் என பார்த்தால் இன்னொரு விடயம் தடுக்கிறது . அதாவது  எமது சமூகத்தில் இருந்து நாம் இன்னும்  விடுதலை பெறவில்லை என்பது அவளுக்கு புரிகிறது . அதென்ன சமூக விடுதலை என நீங்கள் கேட்கலாம் . ஒரு பெண்ணை  சுதந்திரமாக விட்டால் இன்னொரு பெண் அல்லது தாய் அல்லது சொந்தக்கார்களால்  எவ்வாறு பேசப்படுவாள் என்பது நம் சமூகத்துக்கு தெரியும் .

இவ்வாறான அடிப்படை பிரச்னைக்கு காரணமே சமூகம் இன்னும் விடுதலை பெறாமை . இப்போது கூட நாம் வேறு ஒருவர் ஏதேனும் சொல்லி விடுவாரோ சமூகம் எம்மை இழிவாக பார்க்குமோ என சமூகத்துக்காகவே வாழ்ந்து வருகிறோம் . ஆனால் அதே சமூகம் நமக்கு என்ன தந்தது என்று பார்த்தால் ஒன்றுமில்லை .

இதில் முக்கிய பங்கான ஆண் வர்க்கத்தை ஒத்துக்கி விட்டு பேசி விட முடியாது . இந்த சமூகம், உறவுகள் என்னவாக இருந்தாலும் ஆணின் தலைமைத்துவத்தில் இயங்குவதை புறம் தள்ள முடியாது . ஆண்களும் கூட எழுத்தில் , பேச்சில் மட்டுமே பெண் விடுதலையை சுமக்கின்றனர் . தனக்கென வரும் பொழுது அது இருப்பதில்லை , முக்கியமாக தன் மனைவி என வரும் போது தனக்கு கீழே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியே நிற்க்கிறது .

எமது சமூகத்தில் வயது குறைந்த பெண் மற்றும் வயது கூடிய ஆண் திருமண முறை காரணம் என்னவென்றால் வயது கூடிய ஆண் எடுக்கும் முடிவை வயது குறைந்த பெண் தலை குனிந்து ஏறக்க வேண்டுமாம் . எம் சமூகத்தில் இப்போது தான் ஆண் பெண் நடப்பு வளருகிறது இருந்தாலும் சில நண்பர்கள் கூட , முக்கியமாக ஆண் நண்பர்கள் பெண்களின் உணர்வுகளை புரிந்து கொளவதில்லை . தவறான புரிந்து கொள்ளல் ஆண் பெண் நடப்பை பாதித்து அவளை வெறுக்கும் படி ஆகி விடுகிறது .

பெண் அடிமைத்தனத்தை ஆதி காலத்தில் இருந்து யாரோ பரப்பிய கட்டுக்கதைகள் கொண்டு மதங்கள் அவற்றை ஊதி  பெரிதாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது என்பது உறுதி . இந்து சமயத்தில் பெண்கள் சில காலங்களில் தீண்டத்தகாதவர்களாக நியதி இருக்கிறது . இருந்தாலும் பெண்ணுக்கு சக்தியாக சம உரிமை வழங்கிய மதம் பின்னர் வந்தவர்களால் திரிபுபடுத்தப்பட்டது .இஸ்லாமிய சமயத்தில் பெண் அடிமைத்தனம் முழுதாக தனது ஆதிக்கத்தை செலுத்தி உள்ளது .கிறிஸ்தவ மதமோ பெண் ஆணவள் ஆணுக்கு சேவகம் செய்ய வேண்டும் என்று இயேசு கிறிஸ்து கூறியதாக இயேசுவை காரணம் காட்டி கூறுகிறது . மதங்களும் ஆண்  ஆதிக்க வாதிகளால் பெண்களை அடிமைப்படுத்த ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது .

தற்ப்போதைய கல்வி அறிவும் , மனிதனின் பகுத்தறிவு வளர்ச்சியும் சமூகத்தில் இருந்து விடுதலையை பெற்று வருகிறது . ஆனாலும் எழுத்திலும் பேச்சிலும் மாத்திரம் பெண் அடிமை பேச்சு இல்லாமல் நாம் நம்மை சுற்றி  இருக்கும் சமூகத்தில் இருக்கும் பெண்களுக்கு எம்மால் முடிந்த சுதந்திரத்தை கொடுக்க வேண்டும் . ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் கொடுக்கும் சுதந்திரம் உலகையே மாற்றும் . நம் சமூகத்திடம் இருந்தும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் இயங்குவதற்கு  சுதந்திரம் பெற்றால் பெண் அடிமைத்தனம் தானாக ஒழியும் .

பெண் அடிமைத்தனம் மற்றும் சமூக அடிமைத்தனத்தின்  மிக முக்கிய பங்காளி சினிமா. சமூக அடிமைத்தனம் என்று பார்த்தால் ஆண்களும் அடிமைகளே ...  ( தொடரும் )

பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும் 

7 comments:

மதுரை சரவணன் said...

தாயோ, பாட்டியோ எச்சரிக்கையாக இருக்க சொல்லுவது, பெண் அடிமைக்கு காவல் காப்பதாக அமையாது. இது தாயின் பாசம். எந்த பெண்ணும் பெண்ணுக்கு எதிரியாக இருக்க முடியாது . சுதந்திரம் என்பது அவரவர் வாழ்வின் முறையிலே அமையும் . தங்கள் கருத்துகள் முரணாக இருப்பினும் பெண் அடிமை எதிரானக் குரலுக்கு வாழ்த்துக்கள்.

S.Sudharshan said...

//எந்த பெண்ணும் பெண்ணுக்கு எதிரியாக இருக்க முடியாது// .

உண்மையாகவா ?

//தாயோ, பாட்டியோ எச்சரிக்கையாக இருக்க சொல்லுவது, பெண் அடிமைக்கு காவல் காப்பதாக அமையாது. இது தாயின் பாசம்.//

தாயின் பாசம் அல்ல சமுதாயம் பிழை சொல்லி விடுமோ என்ற பயம் . சரியாக விளங்கி கொள்ளவில்லை என நினைக்கிறேன்

அமரேஷ் said...

இந்த கட்டுரைக்கு எனது அனுதாபாங்கள்..மன்னிக்க வேண்டும்..பெண்களை அடக்குவது என்பதை ஊதி பெருப்பித்து ஆத்திரம் வரும் வேளைகளில் அடிமப்படுத்தலாம் என்ற எண்ணத்தை கொடுப்பதே இப்படி அடிமைத்தனம் என்பதை சீண்டி சீண்டி பெரிதாகுவதால் தான்..

ஆண் பெண் இரண்டும் வேறுபட்ட பாலினங்களே..இதைஇ மாற்ற முடியாது..அது தான் படைப்பு..அவரவ்ருக்கு என சில பண்பாடுகள் இருக்கின்றது அதை விட்டு வெளியில் வருகையில் புரிந்துணர்வு அற்ற இடத்தில் பிரச்சைனை உருவாகிறது..அதில் வெற்றி பெற்றவன் தோற்றவனை அடிமையாக்கிறான்...

ஆண்கள் அடிமையாக்கப்படுவதில்லையா....?ஆனால் அதை ஆயுதமாக பல பெண்கள் பயன்படுத்துவதில்லை ஏன் தெரியுமா ஆண் அடிமையை பற்றி பெரிதாக யாரும் அலட்டிக்கொள்வதில்லை..அதனால் கோபம் வரும்போது ஆணை அடிமைப்படுத்தவேண்டும் எண்று பெண்ணிற்கு தோன்றுவதில்லை..
எரியிற வீட்டில எண்ணைய ஊத்திறது எண்டிறது இதைதான்...இதையே பலர் செய்க்கிறார்கள்

அமரேஷ் said...

சீதனக் கொடுமையால் பெற்றார் பெண் பிள்ளைகளை வெறுக்கிண்றனர் எண்ற கருத்து பழைய விசயம்..இன்றைய க்காலங்களில் சீதனம் என்பது ஒரு பிரச்சனையாக பெற்றாருக்கு இருந்தாலும் அதன் காராணத்தால் பெற்ற பிள்ளையை வெறுக்கும் பெற்றாரை இதுவரை நான் காதுவழி தான் கண்டிருக்கிறேன்...

இன்று எத்தனையோ ஆண்கள் சீதனமற்ற குணமான கன்னிகளை தேடி அலைகின்றனர்...

அமரேஷ் said...

நிச்சயமாக பெண்ணிற்கு பெண்களே தான் எதிரி...பெண்களை பற்றிய தவறான எண்ணப்பாடுகளை பிறர் மனதில் ஏற்படுத்துவது அவர்களே.....
strongest survive என்பது உலகளாவிய நியதி...அதனடிப்படையில் வெற்றி பெறுபவர்கள் விகிதம் ஆண்கள் பக்கம் கூடுதலாக இருக்கலாம்..அதை அடிமைத்தனம் என்ர போர்வையில் பார்ப்பதி முட்டாள்தனம்..

பெண் அடிமை இல்லை எண்று சொல்லவில்லை..அதை அழிப்பதற்கு நாங்களே காரணமாக இருக்க கூடாது என்பதே எனது வாதம்..அவர்களது கெடுதலுக்கு அவர்களே காரணமாகிறார்கள்...எல்லோரும் வாழ்க்கையில் தவறு விடுகிறார்கள்..ஆண்கள் அந்த தவறுகளிலிருந்து தங்களை விடுவித்திக்கொள்கிறார்கள்..அனால் பெண்கள் ஏனோ தவறுகளிலிருந்து மீள்வதில்லை..அதற்கும் கன காரணங்கள் சொல்ல முடியும்..

//எமது சமூகத்தில் வயது குறைந்த பெண் மற்றும் வயது கூடிய ஆண் திருமண முறை காரணம் என்னவென்றால் வயது கூடிய ஆண் எடுக்கும் முடிவை வயது குறைந்த பெண் தலை குனிந்து ஏறக்க வேண்டுமாம் // இந்த கருத்திற்கு கண்டனங்கள்...உன்மைக்காரணம் இதுவல்ல...

அமரேஷ் said...

//பெண் அடிமை இல்லை எண்று சொல்லவில்லை..அதை அழிப்பதற்கு நாங்களே காரணமாக இருக்க கூடாது என்பதே எனது வாதம்.//

தவறுதலான தட்டச்சினால் பாரிய கருத்துப்பிழை...அதை அழிப்பதற்கு எதிரிகளாக நாமளே இருக்கக்கூடாது என்பதே எனது வாதம்...

அமரேஷ் said...

பெண்கள் அடிமப்படுத்தப்படுவதன் முக்கிய காரணங்கள்...
*ஆண்களைப்போல் நெருங்கிய நண்பிகளை கொண்டிருப்பதில்லை(நண்பர்கள் இருப்பர்கள் ஆனால் நண்பிகள் இருக்கார்கள்)the primary reason...

*மூடிய மனதை வைத்திருப்பார்கள்..சொல்லவேண்டியதைபொருத்தமில்லாதவர்களிடம் சொல்வார்கள்

*செய்யவேண்டியதை காலம் தவறி சரியாக உன்மையாக செய்வார்கள்

*பாலினத்தூண்டல் செயற்பாடுகளில் தங்களை அறியாமலே ஈடுபடுவர்...

*எல்லேருக்கும் தங்களில் பிரியம்,அன்பு,கண் இருக்கவேண்டும் எண்று நினைப்பர்

*தம்மைப்புரிந்துகொள்ள முடியாது என்று சொல்வதில் ஒரு பிரியம் வைத்திருப்பர்...

*தமக்கென முட்டாள் தனமான சட்டங்களை போட்டுக்கோள்வர்...

இவையனைத்தும் பெண்களின் weak points என்பதே தவிர பிளையான விடயங்கள் எண்று சொல்லவரவில்லை...
அவர்களின் நல்லதுகளையும் சொல்ல முடியும்..ஆனால் இந்த இடம் அதற்கானதல்ல...தவறான புரிந்துகொள்ளல் வேண்டாம்...