Thursday, May 27, 2010

கண் விளையாட்டு- மாயை-மனத்தோற்றம்-தொழில்நுட்பம்

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எம்மை பல்வேறு கோணங்களில் இட்டுச்செல்கிறது என்பது நாம் வாழும் , பார்க்கும் உண்மையான உலகத்தில் நடக்கும் உண்மை . அதென்ன உண்மையான உலகம் ? அங்கு தானே நாம் இருக்கிறோம் என கேள்வி எழலாம் . நாம் பார்க்கும் பொருட்கள் எதுவும் நாம் பார்ப்பது போல இல்லை என்கிறது ஒரு தரப்பு மற்றொரு பிரிவு நாம் உண்மையான உலகில் தான் வாழ்கிறோம் என்கின்றனர் . விவாதம் பல ஆண்டுகளாக நீடிக்கிறது .

கண்ணை நம்பாதே ,எல்லாம் மாயை , மனப்பிரமை , மாயத்தோற்றம் என்று பல அறிஞர்கள் கூறி கேள்விப்பட்டிருப்போம் . எதையும் முழுதாக சொல்லாதவர்கள் நம்மவர்கள் என்று சொல்லலாம். ஆனால் நாம் வாழும் உலகம் மாயத்தோற்றம்(Illusion and Hallucination ) உடையதா ? நாம் பார்க்கும் பொருட்கள் ஒன்றும் நாம் பார்ப்பது போல இல்லையா ?

நாம் நினைக்கும் நாம் வாழும் உலகம் என்பது எமது தொடுகை உணர்வு , பார்வை , நுகருதல் , சுவைத்தல் என்பன எமது மூளைக்கு எடுத்து செல்லப்படுவதன் மூலம் உணர்ந்துகொள்கிறோம். அதை வைத்து மட்டுமே நாம் தீர்மானிக்கிறோம் நாம் நிஜத்தில் வாழ்கிறோம் என . நாம் பார்க்கும் பார்வை அப்படியே மூளைக்கு எடுத்துச்செல்லப்படுகிறது என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை . ஆனால் மூளையை , மனத்தோற்றத்தை இலகுவாக ஏமாற்றி விடலாம் என்பது நாம் பார்க்கும் உலகில் சாதாரணமாகநடக்கிறது . அது தான் இலகுவாக மஜிக்கிலும் நடக்கிறது .அப்படியென்றால் நாம் பார்ப்பது உண்மையாக இருக்கும் உலகின் பிரதிபலிப்பு மட்டும் தானா ?

எம்மனத்தோற்றத்தை மூளையை இலகுவாக ஏமாற்றலாம் . இதற்க்கு உதாரணம் கட்டாயத்தோற்றம் (forced perspective ). இது தான் தூரத்தில் இருக்கும் ஒருவர் கட்டையாக தெரிவார் அருகில் இருப்பவர் உயரமாக தெரிவார். சில நேரங்கள் இருக்கும் பொருட்கள் கூட கண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம் .

மேலும் நம் உலகில் உள்ள சில கண்டுபிடிப்புகள் கண்களை ஏமாற்றலாம் என்பதற்கு சான்றாக இருக்கின்றன.


இதன் நடு புள்ளியை உற்று கவனித்தீர்கள் என்றால் சுற்றி இருக்கும் ஊதா புள்ளிகள் தெரியாது . மற்றும் உடனே கவனித்தால் பச்சை நிற புள்ளி அசைவது கண்ணுக்கு தெரியாது .

கீழே உள்ள வீடியோவை பெரிதாக்கி நடுப்புள்ளியை பாருங்கள் அதில் சொல்லப்படும் போது கண் பார்வையை வெளியே திருப்புங்கள். ( 1 நிமிடம் 40 செக்கன்கள் தான் )

http://www.youtube.com/watch?v=vzSRVgF501M&feature=related

கண்ணோடு மேலும் சில விளையாட்டுகள்

உண்மையில் இந்த கிறிஸ்டல் பந்து அசைகிறதா ? அந்த காமெராவை பிடிப்பவர் அசைகிறார் , ஸ்ட்ரிங் அசைகிறது . ஆனால் எமக்கு அந்த பந்து அசைவது போல தான் தோன்றும் .

4 நிறங்களாக பிரிக்கப்பட்டுள்ளது இந்த அட்டை ஒவ்வொரு படியாக கடுமையான நீல நிறமாகி கொண்டு செல்கிறது. ஆனால் பென்சிலை இடையில் வைக்கும் போது இரு நிறங்கள் ஒரே மாதிரி தெரியும் . இது ஒளியின் தெறிப்பை வைத்துசெய்யப்பட்டுள்ளது .

நவீன தொழில் நுட்ப்ப பார்வையில் விஞ்ஞானிகள் , கணணி வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டு வரும் இன்னொரு உலகத்தை காணலாம். அந்த உலகத்தில் நீங்கள் இந்த உலகில் செய்யமுடியாதவற்றை செய்து முடிக்கலாம் . இது கிட்டத்தட்ட அவதார் திரைப்படத்தில் நீங்கள் பார்த்த தொழில்நுட்ப்பத்திட்க்கு ஈடானது . உடலில் அனைத்து சென்சர்களும் பொருத்தப்பட்டு இருக்கும் .


இந்த உதாரணத்தை எடுத்தால் நாம் வாழும் உலகு எப்படி என்பதை உணரலாம் . தொழில்நுட்பம் உருவாக்கப்போகும் உலகும் உண்மையானது போன்றே தோன்றும் . காரணம் அங்கும் நாம் காணும் சூழல் எமது கண்ணுக்கு தெரியும் பொருட்கள் என்பவற்றிட்க்கு ஏற்ப்ப எம்மை பழக்கப்படுத்திக்கொள்ள போகின்றோம். நிச்சயமாக அதுவும் நமக்கு இன்னொரு உலகம் போல தான் தோன்றும் .

முக்கியமாக எமது கண்ணை வைத்து தொழில்நுட்பத்தை வைத்து பல நன்மைகளும் வந்துள்ளன . கூடுதலாக இந்த தொழிநுட்பத்தில் ஒருவரின் பயத்தை போக்க முடியும் .

உயரமான கட்டிடங்களில் இருந்து அவரை இருந்த இடத்தில் இருந்தே விழ வைப்பது போன்ற உணர்வை மூளைக்கு அனுப்பலாம் . இதன் மூலம் பயம் என்ற உணர்வை பலரிடமிருந்து போக்கலாம் .


இராணுவ பயிற்ச்சிகளை எந்த செலவின்றியும் வழங்கலாம் . இது அவர்கள் உண்மையில் காட்டுக்குள்ளேயே சென்று அந்த சூழலுக்கு ஏற்ப்ப ஒத்திசைந்து உண்மையாக சண்டையிடுவது போல சண்டையிடலாம் . அப்பாடா அதிலையே சண்டை பிடித்தால் இனி எங்களுக்கு நிம்மதி என நீங்கள் நினைப்பது புரிகிறது .எதிர்காலத்தில் வரவிருக்கிறது .


இருக்கு ஆனா இல்லை என்பது இனி வரும் தொழில்நுட்பங்களுக்கு போருந்தலாமோ என்னவோ ...


தகவல்கள் பிடித்திருந்தால் அனைவரயும் சென்றடைய மறக்காமல் ஓட்டளிக்கவும்

No comments: