Friday, May 14, 2010

கடவுள் (மிஸ்)- மிக்ஸ் ஜோக்ஸ்

தொடர்ந்து சீரியஸா எழுதினா சில வேளை உங்களுக்கே போர் அடிச்சிடும் . அதனால கொஞ்சம் நகைச்சுவையோட .. ஆனா சிந்திக்கவும் தான் .
பெருசு :-இப்ப எல்லாம் இந்த பசங்க கடவுளை கும்பிட போய் பண்ணுற கொடுமை இருக்கே . 
அன்னைக்கு ஒரு நாள் நான்  சர்ச் ல இருக்கும் போது ஒரு பய பாதேருக்கு முன்னாலேயே சிகரட் குடிச்சிட்டு இருந்தான் . நான் அப்பிடியே ஷாக் அஹீட்டேன் .எனக்கு வந்த அதிர்ச்சீல என் கைல இருந்த பியர் பாட்டில் விழுந்தது கூட எனக்கு தெரியேல்லன்னா பாருங்களன் . 
==================================================================================
இதெல்லாமா கடவுளால நடக்குது !!!


வயது போன ஒரு ஐயா மருத்துவரிடம் உடலை மாதமொரு முறை தொடர்ந்து போய் பரிசோதித்து இருக்கிறார் . அவரை பரிசோத்தித்த மருத்துவர்: - " உங்களுக்கு உடலில் ஒரு குறையும் இல்லையே , நீங்க மனதளவில் நன்றாக சந்தோஷமாக  இருக்கிறீர்கள் போல ? "
அதற்க்கு பதில் அளித்த ஐயா :-  "ஆம் கடவுளும் நானும் மிகவும் நெருக்கம் . கதவுக்கும் எனக்கும் இடையில் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு . நிறைய ஆச்சரியங்கள் எனது வாழ்வில் . நான் இரவு வேளையில் எழும்பி கதவை திறந்து பாத்ரூம் போகும்  போது  தானவே லயிட் வருது . அப்புறம் தானாவே ஆப் ஆகுது ." 


வாவ் என்று மருத்துவர் கூறிவிட்டு அனுப்பிவிட்டார் . 
ஒரு நாள் மருத்துவர் பொறுக்க முடியாமால் ஐயாவின் வீட்டுக்கு கால் எடுத்து அவர் மனைவியிடம் " உங்கள் கணவர் கடவுளுடன்  நெருங்கிய தொடர்புடையவர். இரவில் பாத்ரூம் செல்லும் போது தானாகவே லயிட் ஆண் ஆகுதாம் அப்புறம் ஆப் ஆகுதாம் . நான் அவருடன் பழகி ஆன்மீக வழியில் செல்ல வேண்டும் . அவர் இருக்கிறாரா ? "


அதற்க்கு அவர் மனைவி " ஏன் டாக்டர் உங்களுக்குமா அறிவில்லை . அந்த மனுஷன் இரவிலை பிரிட்ஜ்  ஐ திறந்து ஒவ்வொரு நாளும் பாத்ரூம்  மாதிரி நாசம் பண்ணி வைக்கிது எண்டு நானே கவலேல இருக்கன். 
==============================================================================================
கடவுளாவே இருந்தாலும் எங்க இதுக்கு தீர்ப்பு சொல்லுங்க 


மூன்று பேர் இறந்து போய் மேல் உலோக வாசலில் அனுமதி எடுக்கும் இடத்தில் போய் ஒரே நேரத்தில் நின்றனர் . அன்றைய தினம் மேல் உலோகம் ஹவுஸ் புல் . அதனால் ஒருவரை தான் எடுக்க முடியும் எனவும் யார் கொடூரமாக  கொலை செய்யப்பட்டாரோ அவருக்கே இடம் உண்டு எனவும் கடவுள் கூறிவிட்டார் .


முதல் மனிதன் :- எனது  மனைவிக்கும் இன்னொருவனுக்கும் நிறைய நாள் தொடர்பு இருக்கும்னு  எனக்கு நிறைய காலமாக சந்தேகம் அதனால திடீரெண்டு ஒரு நாள் எண்ட அபார்ட்மென்ட்டுக்கு(25 ஆவது மாடி )  போய் , வீட்டுக்குள்ள நுழைந்தேன் . மனைவி தனியாக இருந்தாள் . இருந்தாலும் மற்றையவன் ஒளிஞ்சிருக்கலாமோ என்ற சந்தேகத்திலை போய் பெல்கனியை எட்டி பார்த்தா அங்க ஒருத்தன் தொங்கிக்கொண்டு இருந்தான் . கோபத்தில்  அவனை அடித்தேன் உதைத்தேன். அசையல்ல. ஓடி வந்து சுத்தியலால கைக்கு அடிச்சன் அப்ப முடியாம 25 ஆவது மாடீல இருந்து கீழ விழுந்திட்டான். இருந்தாலும் பயபுள்ள எஸ்கேப். குப்பைக்கு மேல விழுந்திட்டான் . விடுவனா !!  ஓடி போய் கிட்ச்சென்ல இருக்கிற பிரிட்ஜ் ஐ தூக்கி கொண்டு வந்து அவன் மேல போட்டு கொன்னுட்டன். அந்த ஆத்திரமும் கோபமும்  எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஸ்பாட்லயே அவுட் .

இராண்டவதா ஒருத்தன் வந்தான் :-  கடவுளே நான் இவர் இருக்கும் வீட்டின் இருபத்தியாறாவது மாடியில் குடியிருப்பவன் . நான் தினமும் காலையில் பல்கனியில் உடல் பயிற்சி செய்வேன். அப்படி செய்யேக்க  தவறி  மாடீல இருந்து கீழ விழுந்திட்டன். இருந்தாலும் அதிஷ்டத்தால 25 ஆவது மாடிய கெட்டியா பிடிச்சிட்டன்.  இருந்தாலும் நீண்ட நேரம்  நிக்க முடியாது எப்படியும் கீழே  விழுவேன்  எண்டு தெரியும் . அப்ப தான் இந்த மனுஷன் வந்தார் . சரி நம்மளை காப்பாத்த தான் வாறானோ எண்டு நம்பி இருந்தா , என்னை அடிச்சு விழுத்த பாத்தான் . அதுவும் முடியேல்லன்னு சுத்தியலால கைக்கு அடிச்சு விழுத்த  பாத்தான் . அப்போ வலி தாங்கமா கீழ விழுந்து எஸ்கேப்  ஆகீடன் . சரின்னு இருந்தா மேல இருந்து திடீர்ன்னு ஒரு பிரிட்ஜ் என்ற தலை மேல வந்து விழுந்து நான் அவுட் .
மூன்றாவதா வந்தவன் இதே விஷயத்தை சொல்லி . அந்த பிரிட்ஜுக்குள்ள டிரெஸ் இல்லாம ஒழிஞ்சு இருந்தது நான் தான்யா !!!! .. 
==============================================================================================
ஆசிரியர் :- " பொய் சொல்பவர்களை பற்றிய பாடம் நாளைக்கு எல்லோரு 14 ஆவது பாடத்தை பார்த்து தயார் செய்து கொண்டு வரணும் " என்று சொல்லி விட்டார் . 
அடுத்த நாள் வந்து யார் யார் பாடத்தை முதலே பார்த்து கொண்டு வந்தது என்று கேட்க்க , அரைவாசி பேர் கையை உயர்த்தினர் .


ஆசிரியர் கையை உயர்த்தாதவர்களை வெளியே போக சொல்லி விட்டு , கை உயர்த்தியவர்களுக்கு தான் பாடம் தேவை , ஏன் ஏன்னா 14 ஆவது பாடமே புத்தகத்திலை இல்லை ..!! ஓஓஒ 


பிடிச்சிருந்தா தனிய சிந்திச்சு சிரிக்காம ஓட்டளியுங்க.. எல்லாரும் யோசிக்கட்டுமே !! 3 comments:

Priya said...

//ஒரு பய பாதேருக்கு முன்னாலேயே சிகரட் குடிச்சிட்டு இருந்தான் . நான் அப்பிடியே ஷாக் அஹீட்டேன் .எனக்கு வந்த அதிர்ச்சீல என் கைல இருந்த பியர் பாட்டில் விழுந்தது கூட எனக்கு தெரியேல்லன்னா பாருங்களன் //.... ஹா ஹா ஹா நல்ல ஜோக்:)

மயில்ராவணன் said...

ஃப்ரிட்ஜ் ஜோக்கு சோக்கா இருக்கு நண்பரே.

S.Sudharshan said...

Priya said...
நன்றி ப்ரியா :))

மயில்ராவணன் said...
/ஃப்ரிட்ஜ் ஜோக்கு சோக்கா இருக்கு நண்பரே//

ஹி ஹி .. நன்றி
எந்த பிரிட்ஜ் ஜோக் நண்பா? ரெண்டு ஜோக்ஸ் இருக்கிறது .